இந்த நாள் கெட்ட நாளா! எல்லோருக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு நாள்! கட்டாயம் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய காணொளி !!

ஆன்மீகம்

எல்லோருக்கும் முக்கியத்துவம் ….

தமிழ் மாதங்கள் அனைத்திலும் ஏதாவது ஒரு சிறப்பை இந்து சமயம் கொண்டுள்ளது. அதன் படி பல விசயங்களை அச்சமயம் சார்ந்த மக்கள் பண்பாட்டு வழக்கமாக ஆன்மீகம் சார்ந்த நிகழ்வாக கடைபிடித்து வருகிறார்கள். அவைகளில் ஒன்று அமாவாசை. பிதுர்களை வழிபடும் நாளாகவும், தர்ப்பணம் கொடுத்து அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாளாகவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகியன மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. பொதுவாக அமாவாசை தினங்களில் சுப விஷேசங்களை பலரும் தவிர்ப்பார்கள். அதே போல வீட்டு வாசலில் கோலமிட மாட்டார்கள். அதனால் பலரும் இதை கெட்ட நாளாக கருதுகின்றனர். ஆனால் அப்படியில்லை என்பதே உண்மை.

விஷயம் என்ன வெனில் இறந்த நம் முன்னோர்களை நினைத்து வணங்கி அவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்பதால் இந்நாள் முன்னோருக்குரிய நாளாக கடைபிடிக்கபடுகிறது. இந்நாளில் கேளிக்கை, விளையாட்டு நிகழ்ச்சிகளை தவிர்ப்பதும் நல்லது. அமாவாசை பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டிய பல விஷயங்கள் வீடியோவில்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *