சனியின் வீட்டில் குரு! மேஷ ராசிக்காரர்கள் இந்த குரு பெயர்ச்சி பரிகாரத்தை செய்யுங்க! இல்லை ஆ ப த்து நிச்சயம்

ஆன்மீகம்

குரு பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி சார்வரி வருடம் ஐப்பசி 30, நவம்பர் 15ஆம் தேதி நிகழ்கிறது. திருக்கணித பஞ்சாங்கப்படி குரு பெயர்ச்சி கார்த்திகை 5ஆம் நாள், நவம்பர் 20ஆம் தேதி நிகழப்போகிறது. குரு பகவான் நீசமாகி ஆட்சி பெற்ற சனியோட இணைந்து நீசபங்கமடைகிறார். இதனால் பெரிய அளவில் பா திப்பு ஏற்படாது. இந்த குரு பெயர்ச்சியால் செவ்வாய் பகவானை ஆட்சி நாதனாக கொண்ட மேஷம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். குரு பகவான் சுப கிரகம். பொன்னவன், குரு பார்வை கோடி நன்மையை கொடுக்கும். தனுசு ராசியில் குரு இருந்த போது கேது உடன் இருந்தார்.

நிறைய நாட்கள் வக்ரமடைந்தும் சஞ்சரித்தார் இதனால் நிறைய பலன்களை சில ராசிக்காரர்கள் பெற முடியாமல் போய்விட்டது. இப்போது குரு பகவான் மகரம் வீட்டிற்கு சென்று நீசமடையப்போகிறார். சனியின் வீட்டில் குரு ஆட்சி பெற்ற சனியோடு இணைவதால் அவர் நீசபங்கமடைகிறார்.

இதனால் பெரிய அளவில் பா திப்புகள் எதுவும் ஏற்படாது, இந்த குரு பெயர்ச்சியால் மேஷம் ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கிடைக்கும் பரிகாரம் என்ன என்று பார்க்கலாம்.

மேஷம் ராசி

மேஷம் ராசிக்கு குரு பகவான் பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். பத்தில் குரு கேந்திர வீட்டில் அமைகிறது. தர்மகர்மாதிபதி யோக அமைப்பாகும். பத்தில் ஏற்கனவே சனிபகவான் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார். பத்தில் குரு வந்தால் பதவியில் மாற்றம் வரும் என்று சொல்வார்கள்.

தொழில் அல்லது வேலை மாற்றம் நிகழும்.மாற்றம் இல்லாதவர்களுக்கு செய்தொழில் மற்றும் வேலை ரீதியான பிரச்சினைகள் தீரும். செய் தொழிலை விட்டு நன்றாக விரிவு படுத்துவீர்கள். சிலர் அடிமை தொழில் செய்வதை விட்டு புதிதாக சொந்தத் தொழில் செய்வீர்கள்.

குருவின் பார்வை இரண்டு, நான்கு ஆறாம் இடங்களின் மீது விழுகிறது. இரண்டாம் வீட்டினை குரு பார்வையிடுவதால் பண வரவை அதிகரிப்பார். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். குரு உடன் பத்தாம் வீட்டில் இணையும் சனிபகவான் சுபமடைகிறார். ஒன்பதுக்கு உடைய குரு பத்தில் சனியோடு இணைந்து ராகுவை பார்வையிடுவதால் அபரிமிதமான யோகங்கள் தேடி வரும். திருமணம் முயற்சிகள் சுபமாக நடைபெறும். குருவின் பார்வை ராகுவின் மீது விழுவதால் பண தேவைகள் பூர்த்தியாகும்.

குரு ராஜயோக அமைப்பை பெற்று சுபமான பார்வையை உங்க ராசிக்கு நான்காம் வீட்டினை பார்வையிடுகிறார் – உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். வேலையில் புரமோசன் கிடைக்கும். நினைத்தது நடக்கும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். தொழில் பலமடையும். சுகமான சந்தோஷமான வாழ்க்கை அமையும். வீடு சொத்து சேர்க்கலாம். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சுக ஸ்தானத்தை சனி பார்வையிட்டு வந்ததால் பல தடைகள் இருந்து வந்தது இனி அந்த தடைகள் நீங்கும். வெளிநாடு செல்பவர்களுக்கு விசா பி ரச்சினைகள் நீங்கும்.

குரு பகவான் ஆறாம் வீட்டினை பார்வையிடுவதால் உங்களை பாடாய் படுத்தி வந்த கடன் பிரச்சினை நீங்கும். எதி ரிகள் தொல்லை நீங்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உங்களுடைய நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். அதீத பலன்களை உங்களுக்கு தரப்போகிறார் குருபகவான். உடலில் இருந்த பிர ச்சினைகள் நீங்கும் குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும்.

குரு பெயர்ச்சி பரிகாரம்

வியபாரிகள், தொழில் செய்பவர்களுக்கு தொழில் விருத்தியாகும். கூட்டுத்தொழில் லாபம் வரும். தாய்மாமன் வகை உ ற வுகளால் நன்மைகள் நடைபெறும். இருசக்கரம், நான்கு சக்கர வண்டி வாங்கும் யோகம் உண்டாகும். வீடு கட்டிக்கொண்டிருப்பவர்கள் கிரகப்பிரவேசம் செய்யலாம். இந்த குரு பெயர்ச்சியால் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும்.

வியாழக்கிழமைகளில் குரு பகவானை வணங்கி வரலாம். வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் மேதா தட்சிணா மூர்த்தியை வணங்கி குரு பெயர்ச்சி யாகத்தில் பங்கு பெற பாதிப்புகள் நீங்கும். தஞ்சாவூர் அருகில் உள்ள தென்திட்டை ராஜகுருவை வழிபட நன்மைகள் நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *