இதை மட்டும் உங்கள் வீடுகளில் செய்தால் போதுமாம் !! குபேரன் உங்களுக்கு அள்ளிக் கொடுப்பாராம் !!

ஆன்மீகம்

அள்ளிக் கொடுப்பாராம் குபேரன் ….

பொதுவான ஒரு கருத்து மக்களிடையே இருப்பதை நாம் அறிந்து இருப்போம் அதாவது கொடுக்கும் தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுப்பார் என்று இது நம் எல்லோருக்கும் தெரிந்த விடயமே. இந்த காரியம் எங்களது வாழ்க்கையில் நடைபெற்றால் எப்படி இருக்கும் என்பதை சற்று சிந்தித்து பாருங்கள். சில வேளைகளில் இதை கற்பனையில் யோசித்து பார்த்து இருப்போம் அல்லவா. அப்படி நடக்க வேண்டு என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்களானால் கண்டிப்பாக நடக்கும். இதே குபேரனே உங்களுக்கு அள்ளிக் கொடுப்பர். அதற்கு நீங்கள் செய்யவேண்டியது என்ன என்று பார்ப்போம்.

அநேக வேளைகளில் நாம் நினைப்பதுண்டு கைநிறைய சம்பாதித்தால் எல்லாம் சரி ஆகிவிடும் என்று. அனால் அப்படி இல்லை. அதற்கும் மேலாக நீங்கள் சி ஆன்மீக நெறிகள் சிலவற்றை பின் பற்றினால் மட்டுமே குபேரன் உங்களது வீடுகளில் தாங்குவாராம். அப்படி என்றால் என்ன என்ன நான் செய்ய வேண்டும் தெரியுமா.

முதலாவது கடன் தொல்லை தீர வேண்டுமா ? நீங்கள் நித்திரைக்கு செல்லும் முன்னர் பாசிப்பருப்பை ஒரு பச்சை நிற பய் ஒன்றில் கட்டி அதை நீங்கள் தூங்கும் தலையணைக்கு கீழே வைத்தது நித்திரை கொள்ள வேண்டும். பின்னர் அடுத்த நாள் அதனை ஒரு பிளாஸ்டிக் பை ஒன்றில் கொட்டி மூடிய பின்னர் அதனை ஓடும் தண்னீரில் விட்டால் உங்களுடைய கடன், பணப்பிரச்னை தீர்ந்து விடும்.

இரண்டாவது – தொடர்ச்சியாக 24 வெள்ளிக்கிழமைகள் நீங்கள் விடாமல் பசும்பாலினை சுக்ர ஓரையில் வில்வ மரத்துக்கு விட்டுக்கொண்டு வந்தால் வெகு சீக்கிரத்தில் பணம் வரும்.
மூன்றாவது – தொடர்ச்சியாக 45 நாள்கள் இதை விடாமல் பசுவின் சிறுநீரை ஒவ்வொரு நாளும் கொஞ்சம் நாம் குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வர வேண்டும். அத்துடன் பசுவின் சிறுநீரை வீட்டிலும் எல்லா இடங்களிலும் தெளிக்கவும், வேண்டும் இதேபோல் தொடர்ச்சியாக செய்தால் பணப்பிரச்னை தீரும்.

நான்காவது – எங்களது வீட்டுக்கு வரும் உறவினர்கள் யாராக இருந்தாலும் குறிப்பாக நாம் வீட்டில் விளக்கு ஏற்றி பின்னர் யாரவது தண்ணீர், நூல், தயிர், உப்பு, ஊசி,பால் போன்றவற்றை எல்லாம் யார் வந்து கேட்டாலும் கொடுக்கக் கூடாது. இவ்வாறு நீங்கள் கொடுப்பதால் நமது வீட்டில் உள்ள நம்முடைய பணத்தையும் வெளியேற்றிவிடும். எனவே இதில் கவனமாக இருங்கள்.

ஐந்தாவது- வீட்டுக்கு கோலம் போடுவது மிகவும் நல்லது தான், பார்க்கவும் அழகாக தான் இருக்கும். ஆனால் எக்காரணம் கொண்டும் வீட்டு வாசலில் அமாவாசை தினங்களில் மட்டும் கோலம் போடக்கூடாது. அத்துடன் அமாவாசை தினங்களில் தலையில் எண்ணெய் தடவக்கூடாது. காலை பூஜ செய்யாமல் புதுர்களை மட்டும் வழிபட வேண்டும். இத கவனமாக செய்து வந்தீர்களானால் நிச்சயம் பணம் உங்களை தேடி வரும்.

ஆறாவது – உங்களுடைய வீடுகளுக்கு யாராவது உறவினர்கள் அல்லது தெரியாதவர்கள் என எந்த சுமங்கலி பெண்கள் வந்தாலும் அவர்களுக்கு தண்ணீரும், குங்குமமும் கொடுக்க வேண்டும். அத்துடன் உங்கள் வீடுகளில் வெண்புறாக்கள் வளர்த்து வாருங்கள், இவ்வாறு வெண்புறாக்களை வள்ர்ப்பதும் பணக் கஷ்டத்தைப் போக்கும்.

ஏழாவது – உங்கள் வீடுகளுக்கு லட்சுமி வர வேண்டும் என்பதற்காக இதேபோல் வீட்டு காமாட்சி விளக்கில் டைமண்ட் கல்கண்டு போட்டு தீபம் ஏற்றி வர வேண்டும். இவ்வாறு தொடர்ச்சியாக செய்து வந்தீர்களானால் லெட்சுமி வருவாள். அது மட்டும் அல்லது ஒவ்வொரு வியாழக்கிழமை குபேர காலத்தில் குபேரனை வழிபட்டு வந்தால் பணம் கொட்டும்.. இந்த ஒவ்வொரு காரியங்களையும் நீங்கள் தொடர்ச்சியாக செய்து வர வேண்டும், அவ்வாறு செய்து வந்தாலே போதுமாம் குபேரன் உங்களுக்கு அல்லிக் கொடுப்பார்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *