செல்வம் பெருக அட்சய திருதியை நாளில் சமையலறையில் செய்ய வேண்டியது என்னென்ன தெரியுமா !! கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள் !!

ஆன்மீகம்

அட்சய திருதியை நாளில் …..

செல்வம் பெருக வேண்டும் என்பது ஒவ்வொருவருடைய விருப்பமும் கனவுமாக உள்ளது. இதற்காக பலவகையான முறைகளையும் செயல்ப்களையும் பின்பற்றி வருகின்றோம். அதிலும் குறிப்பாக இந்த
அட்சய திருதியை நாளில் பலருக்கும் பலவகையான எதிர்பார்ப்பு இருக்கும். இந்த அட்சய திருதியை நாளில் நகை கடைகளில் கூட்டம் கூடி இருப்பதை அவதானிக்க முடியும். மக்களின் இந்த எண்ணிக்கை இந்த நாளின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தி விடும்.

அதாவது அட்சய திருதியை அன்று நகை வாங்கினால் அது மென்மேலும் பெருகிக் கொண்டே செல்லும் என்பது நம்முடைய நம்பிக்கையாக காணப்படுகிறது. இதனாலேயே அன்றைய நாட்களில் நகை கடைகள் எல்லாம் நிரம்பி வழிகின்றன. ஆனால் பலருக்கும் தெரியாத இன்னொரு பலனும் உள்ளது, இதை செய்வதனால் செல்வம் பெருகும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

அதாவது அட்சய திருதியை நாளில் நம்முடைய சமையலறையில் செய்யவேண்டிய சில செயல்கள் உள்ளன. இவற்றை நம்முடைய சமையல் அறைகளில் செய்யும் பொழுது வீட்டில் செல்வம் வளர்ந்து கொண்டே செல்லும் உங்களுக்கு தெரியுமா அட்சய திருதியை நாளில் நகை வாங்குவது மட்டுமின்றி அட்சய திருதியை நாளில் எந்த பொருளை நாம் வாங்கினாலும் அது பல மடங்கு பெருகும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

நம்மால் வாங்க முடிந்த பொருட்களை அன்றைய நாளில் வாங்கினால் அந்த பொருளானது அதிக நாட்கள் நீடித்து உழைக்கும் என்றும் கூறப்படுகிறது. அதாவது பல தினங்களாக வாங்க நினைத்து இருக்கும் ஒரு பொருளை அக்ஷய திருதியை அன்று வாங்கி பாருங்கள் அடுத்தடுத்து உங்களுடைய விருப்பமான பொருட்களை தடையில்லாமல் நீங்கள் வாங்கி மகிழலாம்.

மொச்சை கொட்டை
வைர நகைகளை நம்மால் வாங்க முடியாவிட்டாலும், ஒரு சிறு வெள்ளி நாணயம் அல்லது மோதிரம் போன்ற ஏதாவது ஒன்றை புதிதாக வாங்கி வெள்ளை நிற பட்டு துணியில் முடிந்து பச்சரிசி அல்லது மொச்சை கொட்டையில் போ ட் டு வைத்து விடலாம். அடுத்த அட்சயதிருதியை வரும் வரை அது அப்படியே இருப்பது நல்லது. எப்பொழுதும் மொச்சை கொட்டை வாங்கி வையுங்கள். உப்பு, ஊறுகாய், மொச்சைக்கொட்டை, அரிசி போன்ற பொருட்கள் எப்பொழுதும் வீட்டில் குறையக் கூடாது.

பச்சரிசி
சுக்கிரன் சுக போக வாழ்க்கையை கொடுக்கக் கூடியவர். அக்ஷய திருதியை நாளில் கண்ணாடி பொருட்கள், வெள்ளி பொருட்கள், வைர கற்கள் போன்றவை வாங்கினால் யோகம் உண்டு.
மேலும் சுக்கிரனுக்கு உரிய பச்சரிசி அல்லது மொச்சை கொட்டை இவற்றில் வெள்ளி அல்லது வைர நகைகளை வெள்ளை பட்டு துணியில் முடிந்து வைப்பதால் வீட்டில் செல்வமானது வளர்ந்து கொண்டே செல்லுமாம்.

உப்பு
மகாலட்சுமி கல் உப்பில் வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. ஆகவே வருகின்ற அக்ஷய திருதியை அன்று தங்கம் வாங்க முடியாவிட்டாலும் கூட கல் உப்பை மட்டுமாவது வாங்கி வையுங்கள்! வீட்டில் வறுமை இன்றி செல்வ நிலையானது நிச்சயமாக உயரும். அக்ஷய என்பதற்கு வளர்தல் என்பது பொருளாகும். புராணத்தில் அட்சய பாத்திரம் என்ற ஒன்றை கேள்விப்பட்டிருப்போம். அந்த பாத்திரத்தில் நாம் எதைப் போட்டாலும் அது பன்மடங்கு பெருகி நமக்கு கொடுக்கும். அதே போல தான் அக்ஷய திருதியை நன்னாளில் நாம் வாங்கும் எந்த பொருளும் நமக்கு நீடித்து உழைக்கவும் செய்யும், அதே போல பன்மடங்கு பெருகவும் செய்யும். கல்லுப்பு மகாலட்சுமியின் அம்சம் என்பதால் பணம் சேர கல் உப்பு புதிதாக கடைக்கு சென்று வாங்கி வருவார்கள்.

வெள்ளி அல்லது வைரம்
அக்ஷய திருதியை நாளில் தங்கம், வெள்ளி, வைரம், நவரத்தின கற்கள் போன்ற விஷயங்களை வாங்கும் பொழுது அதிர்ஷ்டம் வரும் என்பார்கள். அந்த வரிசையில் சுக்ரனுக்கு உகந்த வெள்ளி அல்லது வைரம் வாங்கினால் சுக போக வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *