சந்திராஷ்டமம் நாளில் தவறியும் இதையெல்லாம் செய்யாதீங்க… சிக்கல் ஏற்படுமாம் !!

ஆன்மீகம்

இதையெல்லாம் செய்யாதீங்க ….

ஜோதிடத்தில் பார்க்கும் போது சந்திராஷ்டமம் என்றாலே, இன்றைக்கு எல்லோர் மனதிலும் ஒருவித அச்ச உணர்வு ஏற்படுகிறது. பலரும் கவனிக்கும் அம்சங்களில் ஒன்று சந்திராஷ்டமம் ஆகும். சந்திராஷ்டமம் நாளில் எதிலும் எ ச் சரிக்கையாக இருக்கவேண்டும். சந்திராஷ்டமம் எல்லா நட்சத்திரக்காரர்களுக்கும் தொல்லை தராது. பெரும்பாலானோர் சந்திராஷ்டம தினங்களில் எந்த ஒரு புது முயற்சியிலும் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும் என்று முடிவு செய்வர்.

சந்திராஷ்டமம் என்பது ஒரு ராசியில் இருந்து எட்டாவது ராசியில் சந்திரன் சஞ்சரிக்கக்கூடிய காலமாகும். ஒவ்வொருவருடைய ராசிக்கும் 8-ல் சந்திரன் வரும் இரண்டே கால் நாட்களும்,
இதை மிகச் சரியாகக் குறிப்பிட்டுச் சொல்வதென்றால் ஒரு நட்சத்திரத்துக்குப் பதினேழாவது நட்சத்திரத்தின் பாதத்தில் சந்திரன் சஞ்சரிக்கும்போது அந்த நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம்.
மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும்.

அந்த நேரத்தில் பிறருக்கு நீங்கள் நன்மைகள் செய்தாலும் அது தீமையாக முடியும். சந்திராஷ்டம நாட்களில் எதிர்பார்த்தது நடைபெறாது. குடும்பப் பிரச்சினை அதிகரிக்கும். நிம்மதி குறையும். நினைத்தது ஒன்றும், நடப்பது ஒன்றுமாக இருக்கும். வீண் விரயங்கள் ஏற்படும். பிறருக்கு பொறுப்புச் சொல்வதால் சிக்கல்கள் ஏற்படும். பயணங்களால் தொல்லை ஏற்படும். மருத்துவச் செலவு உண்டு.

எனவே தான் சந்திராஷ்டம நாட்களில் எ ச் சரிக்கை தேவை. அன்றைய தினம் விழிப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டும். உங்கள் ராசிக்கு 8-ல் சந்திரன் உலாவரும் பொழுது, பொறுமை, அமைதி, நிதானம் ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதோடு ஆலய வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *