சனி வக்ர பெயர்ச்சி பலன் 2021 !! அஷ்டமத்து சனியாக மாறி யார் யாரை ஆட்டிப்படைக்க போகிறார் தெரியுமா? யாருக்கு அதிர்ஷ்டம் தேடி வரும் !!

ஆன்மீகம்

தேடி வரும் அதிர்ஷ்டம் யாருக்கு …..

மகர ராசியில் பயணிக்கும் சனிபகவான் விரைவில் வக்ரநிலையில் சஞ்சரிக்கப் போகிறார். சனிபகவான் வக்ர பெயர்ச்சி மே 24ஆம் தேதி தொடங்குகிறது. அக்டோபர் 11ஆம் தேதி சனிபகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். சனி வக்ர பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களில் யாருக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு வேலையில் இருந்த மந்த நிலை மாறும். பண வரவு அதிகரிக்கும். சனி வக்ரத்தில் இருக்கும் இந்த 140 நாட்களும் உங்க வேலையில் இருக்கும் மந்த நிலை மாறும். மிகவும் உற்சாகமாக வேலையை தொடங்குவீர்கள். உங்களுக்கு அதிர்ஷ்டகரமான கால கட்டம். இந்த கால கட்டத்தில் வரும் பணத்தை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். வரவுக்கு ஏற்ப செலவும் அதிகரிக்கும் சுப செலவுகளாக மாற்றுங்கள். கடன் பிரச்சினைகளை தீர்க்க பணத்தை செலவு செய்யுங்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு அரசு சார்ந்த துறைகளில் வேலை வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுப விரையங்கள் ஏற்படும். தொட்டதெல்லாம் துலங்கும் காலம். பொருளாதார மந்த நிலை நீங்கும். குழந்தை இல்லாத தம்பதிக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். அக்கம்பக்கத்தாருடன் மனஸ்தாபங்கள் நீங்கும். சொந்தபந்தங்களின் வீட்டு விஷேசங்களில் அதிகம் கலந்துகொள்வீர்கள்.

ரிஷபம்
சனி வக்ரமடையும் இந்த கால கட்டத்தில் உங்க பெர்சனல் வாழ்க்கையில் சில பிரச்சினைகள் வரலாம். சனி வக்ரம் பெற்றிருக்கும் இந்த கால கட்டத்தில் நீங்கள் எந்த முதலீடுகளையும் பெரிய அளவில் செய்ய வேண்டாம். மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை கவனம் தேவை. கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் கூடும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். மகனுக்கு நிரந்தமான வேலை கிடைக்கும். தள்ளிப் போய்கொண்டிருந்த திருமணமும் நல்ல இடத்தில் முடியும். வெகுநாள்களாகச் சொந்த வீடு கட்டிக் குடி போக வேண்டும் என்ற கனவு நனவாகும்.

மிதுனம்
சனி பகவான் அஷ்டமத்து சனியாக மாறி ஆட்டிப்படைக்கிறார். சனிபகவானின் வக்ர சஞ்சாரம் உங்களுக்கு பாதிப்புகள் நீங்கி நன்மையை கொடுக்கும். வேலை தொழிலில் இருந்த பாதிப்புகள் நீங்கும். சனி எட்டுக்குடையவர். எட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் போது வக்ரமடைகிறார். கூட்டுத்தொழில் நன்மையை கொடுக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன சண்டைகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்லவும். முன் யோசனையின்றி பேசிவிட்டு அப்புறம் வருத்தப்பட வேண்டாம். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

கடகம்
கண்டச்சனியாக சில சங்கடங்களை கொடுத்து வந்தார் இனி வக்ர சஞ்சாரத்தினால் பாதிப்புகள் குறையும். எதிரிகள் தொல்லை குறையும், மறைமுக போட்டி பொறாமைகள் குறையும். கடகத்தை பொருத்தவரைக்கும் இந்த காலகட்டத்தில் தடைகள் நீங்கும். கடன் பிரச்சினைகள் நீங்கும். வழக்குகள் முடிவுக்கு வரும். இந்த 140 நாட்களை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். திருமண சுப காரியங்கள் தடைகள் நீங்கி நடைபெறும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும் நெருக்கம் அதிகரிக்கும்.

சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்களுக்கு ஆறாம் வீட்டில் சனிபகவான் சஞ்சரிக்கிறார். சனியின் வக்ர சஞ்சாரத்தினால் பிள்ளைகளால் இருந்து வந்த தொல்லைகள் நீங்கும். உங்க நிதி நிலமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் தீரும். வம்பு வழக்குகளில் இருந்து வந்த பிரச்சினைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நோய் பாதிப்புகள் முடிவுக்கு வரும். திடீர் அதிர்ஷ்டங்களும் பண வருமானமும் வரும். இந்த கால கட்டத்தில் பண வரவு அதிகரிக்கும் வங்கி சேமிப்பு உயரும்.

கன்னி
சனி பகவான் இப்போது ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். கன்னி ராசிக்காரர்களுக்கு திறமை பளிச்சிடும். வேலை தொழிலில் இருந்த பிரச்சினைகள் தீரும். உங்களுக்கு இருந்த இடைஞ்சல்கள் எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் தீரும். குடும்ப வாழ்க்கையில் குதூகலமாக இருப்பீர்கள். அதே நேரத்தில் உங்களுக்கு நோய் பாதிப்புகள் ஏற்படலாம். பண விவகாரங்களில் கவனமாக இருக்கவும். சனி வக்ரமாக இருக்கும் 140 நாட்களும் உங்களுக்கு வருமானம் நன்றாக இருக்கும். கடன் பிரச்சினை தீரும் என்றாலும் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சனி பகவான் நான்காம் வீட்டில் சஞ்சரிக்கிறார். அர்த்தாஷ்டம சனியால் சில சங்கடங்களை சந்தித்து வந்தீர்கள். உங்களுக்கு சனி பகவான் வக்ர காலகட்டத்தில் சஞ்சரிக்கிறார். மே 24 ஆம் தேதி முதல் அக்டோபர் 11ஆம் தேதி வரையிலான இந்த கால கட்டத்தில் நீங்க உங்களுக்கு வரும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்களுடைய அம்மாவின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். அம்மா வழி உறவினர்களிடம் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்தால் இப்போதைக்கு வேண்டாம் தவிர்த்து விடவும்.

விருச்சிகம்
இந்த சனிப்பெயர்ச்சியால் குடும்பத்தில் ஏற்பட்டு வந்த பிரச்சினைகள், பாதிப்புகள் தீரும். சின்னச் சின்ன சந்தோஷங்களை அனுபவிப்பீர்கள். உங்களின் திறமைகள் வெளிப்படும். பணவரவு நன்றாக இருக்கும் தேவைகள் நிறைவேறும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உறவினர்களிடம் இருந்த பிரச்சினைகள் நீங்கும். திருமண சுப காரியங்கள் தொடர்பாக பேசி முடிவு செய்யலாம். நல்ல வேலையும் புரமோசனும் கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இது ஏழரை சனியில் பாத சனி காலம். உடல் நல பிரச்சினை, செலவுகள் ஏற்பட்டு மன உளைச்சலை ஏற்படுத்தி வரும் இந்த கால கட்டத்தில் சனி வக்ரமடைகிறார். ஆட்சி பெற்ற சனி வக்ரமடைவதால் பாதிப்பு வருமே என்று நினைக்காதீங்க உங்களுக்கு பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும். இந்த காலகட்டத்தில் புதிய பிசினஸ் செய்வதைப் பற்றி யோசிக்கக் கூட வேண்டாம். வீட்டிலும் குடும்பத்தில் உள்ளவர்களிடம் பேசும் போது கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில அக்கறை தேவை. உங்க கால்கள், பாதங்களில் அடிபட வாய்ப்பு உள்ளது கவனம் தேவை.

மகரம்
மகரம் ராசிக்காரர்களுக்கு இது ஜென்ம சனி காலமாகும். இந்த கால கட்டத்தில் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சில பாதிப்புகள் வரலாம். கணவன் மனைவி இடையே பிரச்சினை வரலாம் கவனம் அவசியம். சனி உங்கள் ராசி அதிபதி ஆட்சி பெற்ற சனி வக்ரமடைவதால் உங்களுக்கு பண பிரச்சினை வரலாம். உடல் பிறந்தவர்களுடன் பேசும் போது கவனம் அவசியம். தாய் வழி உறவினர்களிடம் பணம் கொடுக்கல் வாங்கல் இந்த கால கட்டத்தில் வேண்டாம். பணம் திரும்ப வராது. வேலை விசயத்தில் கவனம் அவசியம். இருக்கும் வேலையை விட்டு விட்டு இப்போதைக்கு புது வேலைக்கு மாற வேண்டாம்.

கும்பம்
கும்பம் ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி ஏழரை சனி காலமாகும். விரைய செலவுகள் நிறைய வரும். சேர்த்து வைத்த பணத்தை பத்திரப்படுத்துங்கள். ஆடம்பரமாக செலவு செய்யாதீர்கள். தொழில் வியாபாரத்தில் போட்ட முதலீடு பத்திரமாக இருக்கும். பங்குச்சந்தைகளில் இந்த கால கட்டங்களில் நீங்கள் செய்யும் முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும். சின்னச் சின்ன உடல் நலப்பிரச்சினைகள் வரலாம் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். அதிகமாக வெளியில் பயணம் செய்வதை தவிர்த்து விடுங்கள்.

மீனம்
மீனம் ராசிக்காரர்களுக்கு இது லாப சனி காலம். சனி வக்ரமடையும் இந்த கால கட்டத்தில் உங்களுக்கு தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். திடீர் பண வருமானம் வரலாம். ஆடம்பர செலவுகளை குறைத்து விடுங்கள். ஆரோக்கியத்தில் சின்னச் சின்ன பாதிப்புகள் வரலாம் கவனமும் அக்கறையும் தேவை. உணவு விசயத்தில் கவனம். வெளியில் செல்வதையும் காரமான உணவுகளை சாப்பிடுவதையும் தவிர்த்து விடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *