நல்லெண்ணெய் குளியல் செய்வதால் இவ்வளவு நம்மைகள் இருக்கிறதா !!

மருத்துவம்

நல்லெண்ணெய் பயன்படுத்துவது சிறப்பானது ஆகும் ஆனால் இன்றைய காலகட்டத்தில் பொதுவாக நல்லெண்ணெய் குளியல் என்பது குறைவாகவே காணப்படுகிறது பொதுவாக அதிகமானவர்கள் இதில் குறை உள்ளவர்கள் காணப்படுகிறார்கள். மேலும் எண்ணையை காய்ச்சி தலைக்கு செய்து குளிப்பது நன்று நீங்கள் விரும்பினால் எண்ணையை காய்ச்சும்போது அதில் சிறிதளவு பூண்டை தோலுடன் சேர்த்து காய்ச்சி பயன்படுத்திக்கொள்ள முடியும் இதன் காரணமாக சனி பிடிப்பதை நாம் தவிர்த்துக் கொள்ளலாம் நல்லெண்ணெயில் நீங்கள் குறிப்பதாக இருந்தால்

சூரிய உதயத்துக்கு பின்பு குளிப்பது நல்லது நம் உடல் முழுவதும் நன்றாக நல்லெண்ணெய் தடவிய பின் நாம் சூரிய வெளிச்சம் உள்ள இடங்களில் அரை மணி தொடக்கம் ஒரு மணி நேரம் வரை நிற்க வேண்டும் இவ்வாறு நிற்பதற்கு காரணம் என்னவென்றால் சூரிய ஒளி நம் உடலில் படும்போது சூரிய ஒளியில் உள்ள வைட்டமின் டி சத்தை உடல் விரைவாக உறிஞ்சும் மேலும்

உடலுக்கு கால்சியம் சத்து மிகுதியாக கிடைக்கும் அதிகாலையில் 4 அல்லது 5 மணி அளவில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது மிகவும் நல்லது எண்ணெய் தேய்த்து குளிக்கும் அன்று நாம் கண்டிப்பாக சுடு நீரில் தான் குளிக்க வேண்டும் நீங்கள் வழக்கமாக குளிர்ந்த நீரில் குளிக்கும் நபராக இருந்தாலும் அன்று ஒரு நாள் நீங்கள் சுடுநீரில் தான் கட்டாயமாக குளிக்க வேண்டும்

குளிக்கும் போது சோப்பு ஷாம்பு பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுங்கள் தலைக்கு சீயக்காய் அரப்பு சாதம் கஞ்சி போன்றவைகளை பயன்படுத்தலாம் தலைக்கு குளிக்கும் அன்று அமாவாசை பவுர்ணமி மாதப்பிறப்பு வருடப்பிறப்பு பிறந்த நட்சத்திரம் மற்றும் திதி பிறந்தநாள் விருது நாட்கள் போன்ற நாட்களாக இருக்கக்கூடாது அமாவாசை பவுர்ணமி மாதப்பிறப்பு வருடப்பிறப்பு போன்ற நாட்களில் தலைக்கு எண்ணை தேய்த்து குளிப் பதை தவிர்க்க கொள்ளுங்கள்

இதற்கு காரணம் என்னவென்றால் இந்த நாட்களில் குளிர்ச்சியான நாட்களாக காணப்படுவது ஆகும் குளிர்ச்சியான நாட்களில் பொதுவாகவே தலைக்கு எண்ணை தேய்த்து குளிக்க கூடாது என்பது விதி நம் உடல் சூடான நாட்களில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கலாம் பெண்களுக்கு வெள்ளி செவ்வாய் நாட்களும் ஆண்களுக்கு சனியும் புதனும் ஆகும் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் அன்று நாம் உறங்கக்கூடாது பழைய சாதம் கற்றாலை மோர் இளநீர் தாம்பத்தியம் போன்றவைகளை தவிர்க்க வேண்டும்

மேலும் குளிர்ச்சியான உணவுப் பொருட்களை உண்பதை நாம் கண்டிப்பாகத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது அன்று நாம் உடல் சோர்வாக இருக்கும் அதை கண்டு நீங்கள் அச்சம் கொள்ள தேவையில்லை ஏனென்றால் நீங்கள் சிறிது நடைப்பயிற்சி அல்லது வீட்டில் உள்ள சிறிய சிறிய வேலைகளை செய்தாலும் உங்கள் சோர்வு நீங்கிவிடும்

உடல் சோர்வாக இருப்பதற்காக நீங்கள் உறங்குவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் அப்படி நீங்கள் உறங்குவதால் உங்கள் கண்கள் வழியாக வெளியேறும் உஷ்ணம் உடலிலேயே தங்கிவிடும் இதனால் கண் எரிச்சல் வயிற்று வலி தலைவலி போன்ற உபாதைகள் ஏற்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

தலைக்கு எண்ணை தேய்த்து குளிப்பதால் தைராய்டு பிரச்சனைகள் உடல் உஷ்ணம் எலும்பு தேய்மானம் மூட்டு வலி கால் வலி உடல் வலி கண் எரிச்சல் போன்ற பிரச்சினைகள் தீரும் எனவே அனைவரும் மாதம் தோறும் எண்ணெய் குளியல் செய்து உடல் உஷ்ணம் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *