உங்கள் முகம் பளிச்சென்று வெள்ளையாக மாற வேண்டுமா!! முகத்தில் சுருக்கம் மறைய இதை செய்யுங்கள் !

மருத்துவம்

இன்று எல்லோருக்குமே அழகாகவும் வெள்ளையாகவும் என்கிற ஆசை நம் அனைவருக்குமே இருக்கும். நாம் வெள்ளையாகவும், அழகாகவும் மாற வேண்டுமென்ற ஆசையில் கடைகளில் விற்கும் கெமிக்கல் அழகுப் பொருட்களை தான் பயன்படுத்துவார்கள். இவ்வாறு பயன்படுத்துவதால் எந்த பலனும் இல்லை. இதன் காரணமாக நமது உடலுக்கு நாமே தீங்கு விளைவித்துக்கொண்டு இருக்கின்றோம். மட்டுமின்றி எமது பாக்கெட்டில் இருக்கும் பணத்தை வீணாக செலவழித்து கொண்டு இருக்கின்றோம். இவ்வாறு உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெமிக்கல் கலந்த அழகுப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவதை விட, இயற்கை முறையில் ஒருசில இயற்கை முறைகளை பின்பற்றினாலே போதும் , எமது சருமம் ஆரோக்கியமானதாக இருப்பதோடு அழகாக, வெள்ளையாகவும் மாறி அழகாகிவிடும்.

சரி அதற்கு என்ன என்ன முறைகளை பின் பற்ற வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம். அதாவது வேறொன்றும் இல்லை, சருமம் கருப்பாக மாறக்கூடாதெனில், ஒரு சிலசெயல்களை தினமும் செய்துவர வேண்டும். அதாவது முகத்தைகழுவுதல், ஃபேஸ் பேக் போடுதல், நிறைய தண்ணீர் குடித்தல், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுதல், உடற்பயிற்சிகளை பின்பற்றுதல் என்று பல உள்ளன. அதுமட்டுமின்றி, இதனை தினமும் செய்து வந்தால், நாளடைவில் ஒரு நல்ல பலனைப் பெறலாம். அதிலும் இத்தகைய செயல்களை பின்பற்றினால், 7 நாட்களிலேயே ஒரு நல்ல வித்தியாசம் சருமத்தில் தெரியும். சரி, அது என்னவென்று பார்ப்போமா!!!

தயிர் முகத்தை வெள்ளையாக்க உதவும் அழகுப் பொருட்களில் ஒன்று. எனவே அதனைக் கொண்டு தினமும் முகத்திற்கு மசாஜ் செய்து கழுவினால், 7 நாட்களில் ஒரு நல்ல முகப்பொலிவு கிடைக்கும். வாரத்திற்கு 2-3 முறை ஸ்கரப் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் புத்துணர்ச்சியுடனும், சுத்தமாகவும் காணப்படும்.

வெளியே சுற்றும் போது, தலைக்கு தொப்பி போட்டு செல்ல வேண்டும். இதனால் முகத்தில் சூரியக்கதிர்கள் நேரடியாக படுவதை தவிர்க்கலாம்.பழங்களில் வாழைப்பழம், பப்பாளி, அவகேடோ போன்றவை சருமத்திற்கு பொலிவைத் தரக்கூடியவை. எனவே இத்தகைய பழங்களை சாப்பிடுவதோடு, சருமத்திற்கு தடவி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

முகத்தில் தூசிகள் படிந்திருப்பதால், முகம் பொலிவின்றி காணப்படும். எனவே முகம் பொலிவோடு இருக்க வேண்டுமெனில், தினமும் முகத்தைக் கழுவுவது என்பது முக்கியமான ஒன்று. இவ்வாறு அவ்வப்போது முகத்தை சுத்தமான நீரினால் கழுவினால், முகம் நன்கு சுத்தமாக பருக்களின்றி இருக்கும்.

சூப்பரான ப்ளீச்சிங் பொருளாக எலுமிச்சை காணப்படுகிறது. இத்தகைய எலுமிச்சையின் துண்டுகள் அல்லது சானால், சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, சருமம் பொலிவோடு மின்னும்.முகத்தில் உள்ள கருமையைப் போக்குவதற்கு நிறைய ஃபேஸ் மாஸ்க்குகள் உள்ளன. அத்தகைய மாஸ்க்குகள், ஸ்கரப்கள் போன்றவற்றை மேற்கொண்டால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீங்கி, சருமத்தின் நிறம் இயற்கையாகவே அதிகரிக்கும்.

எமது சருமம் அழகாகவும் வெள்ளையாகவும், நிறம் மாறாமலும் , அதே நேரம் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு வெயிலில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்க்கவும். ஏனெனில் சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக்கதிர்களால், சருமத்திற்கு கடுமையான பாதிப்பானது ஏற்படுவதோடு, சருமத்தின் நிறமும் மாறும். எனவே அப்படியே வெயிலில் சுற்றினால், சருமத்திற்கு சன் ஸ்கிரீன் லோசனை தடவி செல்ல வேண்டும். குறிப்பாக, வீட்டிற்கு வந்ததும், சருமத்தை சுத்தமான நீரினால் கழுவிட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *