இந்த 5 ராசிக்கு சுக்கிரனால் ஏற்படும் அதிர்ஷ்ட பலன்கள் என்னென்ன !! வைகாசி மாத ராசிப்பலன்களால் கிடைக்கும் நன்மைகள் !!

ஆன்மீகம்

சுக்கிரனால் அதிர்ஷ்ட பலன்கள் …..

ரிஷப ராசியில் சூரியன் சஞ்சரிக்கக்கூடிய காலம் வைகாசி மாதமாகும். சூரியனின் பகை கிரகமான சுக்கிரனை அதிபதியாக கொண்ட ரிஷபத்தில் சூரியன் சஞ்சரிக்கக்கூடிய காலத்தில் எந்த ராசிகளுக்கு எல்லாம் அதிர்ஷ்ட பலன் என்பதை பற்றி பார்ப்போம். கடகம் இந்த வைகாசி மாதத்தில் உங்களின் வருமானம் அதிகரிக்கும். அதன் மூலம் உங்களின் ஆசை, செயல்பாடு நிறைவேறும்.

வைகாசி மாத ஆரம்பத்தில் ரிஷப ராசியில் சூரியன், புதன், சுக்கிரன், ராகு ஆகிய 4 கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இதனால் உங்களுக்கு புதிய வருமான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். அரசு துறையில் இருப்பவர்கள் பயனடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவு பெறுவீர்கள். தொழிலில் உங்களுக்கு மரியாதை கிடைக்கும். புதிய முதலீடுகள் மூலம் வருமான அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் உங்களின் வசதி, வாய்ப்புகள் அதிகரிக்கலாம்.

சிம்மம்
உங்களின் தொழில் சார்ந்த சில நல்ல முடிவுகளை எடுக்கலாம். வணிகத்தில் சில நல்ல ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். அதன் மூலம் லாபம் ஈட்டலாம். இருப்பினும் போட்டியாளர்கள், எதிரிகளுடன் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம். குடும்பத்தின் சூழல் இனிமையானதாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்
உங்கள் துணை மூலமாக நல்ல ஆதரவும், அன்பும் பெறலாம். உங்களின் தொழில், வணிகம் எதிர்பாராத முன்னேற்றத்தைப் பெற்றிடலாம். புதிய வணிக ஒப்பந்தங்களைப் பெற்றிடலாம்.உங்கள் திருமண வாழ்க்கையில் அமைதியையும் மகிழ்ச்சியையும் தரும். நிதி ரீதியான லாபங்களை அடையலாம். இந்த நேரத்தில் உங்கள் செலவுகளும் குறையும், மேலும் தொழில் அடிப்படையில் நீங்கள் எடுக்கும் எந்த முடிவாலும் நல்ல பயனடைவீர்கள்.

தனுசு
சூரியனின் அமைப்பால் உங்களின் எதிரிகள் உங்கள் முன் நிற்க முடியாது. எதிரிகளின் தொல்லை நீங்கும். அவர்களின் நோக்கம் தோல்வி அடையும். மேலும், அரசு துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். திருமண உறவில் இருப்பவர்கள் துணை மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் வாதிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

மீனம்
உங்களின் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றத்தைப் பெறலாம். சிலருக்கு குறுகிய பயணம் செய்ய வாய்ப்புள்ளது. இளைய சகோதரர்கள் மூலமாக நற்பலனைப் பெற்றிடலாம். உங்கள் வேலையில் அர்ப்பணிப்புடன் செய்வீர்கள். முன்பைவிட அதிக ஆற்றலையும் புத்துணர்ச்சியையும் பெறுவீர்கள். திருமண வாழ்க்கையில் மனைவியுடனான உங்கள் உறவு மேம்படும். தொழில் விஷயத்தில், நீங்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்த நல்ல வாய்ப்பை பெற்றிடுவீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *