உங்கள் லக்னம் இதுவா? சுக்கிர பகவான் கொடுக்கும் அற்புத பலன்கள் மற்றும் பரிகாரங்கள் என்னென்ன தெரியுமா !!

ஆன்மீகம்

சுக்கிர பகவான் கொடுக்கும் ….

துலாம் லக்னத்தின் அதிபதி சுக்கிர பகவான். சுக்கிர பகவானுடன் சந்திரன் சமம் என்ற நிலையிலிருந்து செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை இங்கு காண்போம். அறப்பணிகளை செய்வதற்கான சூழல் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான பணிகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். வாழ்க்கை பற்றிய புரிதல் உருவாகும்.

ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மேலும், சுயதொழில் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் சாதகமான நிலையை உருவாக்கும். மனதில் நினைத்த காரியங்கள் எண்ணிய பலனை அளிக்கும். மனதிற்கு விரும்பிய உடை மற்றும் ஆபரணச்சேர்க்கை உண்டாகும். உலகியல் சார்ந்த நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் மனதில் எழும். அரசு தொடர்பான காரியங்களில் ஆதாயம் உண்டாகும்.

பரிகாரம்
அவரவர் ஜாதகத்தில் சந்திரன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் திங்கட்கிழமைதோறும், சந்திர ஓரையில் சாந்த சொரூபமாக உள்ள பார்வதிதேவியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும். மேலும், ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும் பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *