குருபெயர்ச்சி பலன்கள் 2020-2021 கடக ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன?

ஆன்மீகம்

கடக ராசிக்காரர்களுக்கு குருபகவான் உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் இருந்து கொண்டு 11, 1, 3 ஆகிய இடங்களில் அவருடைய பார்வை விழுகிறது. எனவே கடக ராசியை பொறுத்தவரை இந்த குரு பெயர்ச்சியானது பல நன்மைகளை அளிக்கப் போகிறது. கணவன் மனைவிக்கு மற்றும் உங்களுடைய மனதிற்கு பிடித்தவர்கள் உங்களைப் புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். நீங்களும் அவர்களை விட்டுக்கொடுக்காமல் பல இடங்களில் ஒற்றுமையாக செயல்படுவீர்கள்சிறுசிறு ஊடல்கள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது. உங்கள் ராசியை பொறுத்தவரை வருகின்ற குரு பெயர்ச்சியானது மனதிற்கு மகிழ்வையும், உற்சாகத்தையும் கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தை பொறுத்தவரை நீங்கள் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். இதுவரை நீங்கள் கொடுத்து வந்த முழு ஒத்துழைப்பு அதற்குரிய பலன்களை அள்ளி உங்களுக்கு கொடுக்கப் போகிறது.

பெரிய முதலீடுகள் மூலம் தொழிலில் நல்ல முன்னேற்றமும், வளர்ச்சியும் இருக்கும். உத்தியோகத்தை பொறுத்தவரை சுமாரான பலன்கள் தான் என்றாலும் நண்பர்கள் உங்களுக்கு பூரண ஆதரவு கொடுப்பார்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய புதிய விஷயங்களில் வரும் வாய்ப்புகள் தட்டிப் போவதற்கு சந்தர்ப்பங்கள் உண்டு.

பொருளாதாரத்தைப் பொறுத்தவரை ஏற்றத்துடன் காணப்படும். உங்கள் ராசிக்கு குரு பெயர்ச்சிக்கு பிறகு நல்ல வருமானம் கிடைக்கக்கூடிய அமைப்புகள் இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் அமோக வெற்றி உண்டாகும்.

உங்களுடைய முயற்சிகளுக்கு நண்பர்களும் ஆதரவாக இருப்பார்கள். எந்த ஒரு செயலையும் செய்வதற்கு சரியான காலகட்டமிது. வருகின்ற வாய்ப்புகளை நழுவவிடாமல் சரியாக பயன்படுத்திக் கொண்டால் பொருளாதாரத்தில் சிறப்பான முன்னேற்றம் காணலாம்.

சொத்துக்கள் மற்றும் பூர்வீக சொத்துக்கள் வாயிலாக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் தாமத பலன்கள் உண்டாகும். குடும்ப உறவுகளைப் பொறுத்தவரை உங்களுடைய கருத்துக்களுக்கு மாற்று கருத்துகள் கூறி வந்தவர்கள் இப்போது உங்கள் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

மேலுன், நீங்கள் சொல்வதும் சரிதான் என்பது போல் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சி கொள்ளும் வண்ணம் வெற்றிகள் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *