வீடுகளில் மயில் இறகை வைத்து வழிபடலாமா? வீட்டில் மயில் இறகை வைப்பது நல்லதா? கெட்டதா? என்னென்ன பலன்கள் தெரியுமா !!

ஆன்மீகம்

மயில் இறகை வைப்பது நல்லதா……

ஆன்மீக மற்றும் தாந்திரீக பரிகாரங்களுக்கு இந்த மயிலிறகு பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. மயில் மிகவும் அழகான பறவை ஆகும். இப்பறவையின் தோகைகள் மூலம் கிடைக்கும் இறகுகளுக்கு அவ்வளவு மகத்துவங்கள் உண்டு. மேலும் மயில் இறகை வீட்டில் வைப்பதால் நன்மை ஏற்படுமா? அல்லது கெடுதல்கள் ஏற்படுமா? என்கிற சந்தேகமும் அனைவருக்கும் இருந்து வருகிறது. அதனைத் தீர்த்துக்கொள்வதற்கே இந்த பதிவு.

மயிலிறகை வைத்து வழிபடுவது முருகப் பெருமானை வழிபடுவதற்கு இணையாகும். குறிப்பாக பூஜை அறையில் முருகன் படத்திற்கு பக்கத்தில் மயில் தோகையை வைத்து வழிபடலாம். முருகனின் வாகனமாக இருக்கும் மயில் உடைய இறகை வீட்டில் வைப்பதால் முருகனுடைய அருள் கிடைக்கும் என்பது நியதி. எனவே வீட்டில் தாராளமாக மயிலிறகை வைத்துக் கொள்ளலாம். அதனால் நன்மைகள் நடக்குமே தவிர, தீமைகள் ஒன்றும் நடக்கப் போவது இல்லை.

வாஸ்து தோஷத்தை போ க்க
எட்டு மயில் தோகைகளை எடுத்து ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி வைத்து பின் அதனை வெள்ளை நூல் கொண்டு கட்டி இதை அப்படியே கொண்டு போய் பூஜை அறையில் வைத்துக்கொள்ளுங்கள். 8 மயிலிறகும் எட்டு திசைகளில் இருக்கும் வாஸ்து தோஷங்களை நீக்கி விடும். ஒவ்வொரு முறை நீங்கள் பூஜை அறையில் பூஜை செய்யும் பொழுதும் இந்த மயில் மயிலிறகிற்கு தீபாராதனை காண்பிக்கும் பொழுது ‘ஓம் சோமாய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இப்படி செய்து வந்தால் வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷங்கள் எளிதாக நீங்கிவிடும் என்கிறது வாஸ்து சாஸ்திர பரிகாரங்கள்.

செல்வங்கள் பன்மடங்கு பெருக
பீரோவில் இருக்கும் செல்வங்கள் பன்மடங்கு பெருக மயிலிறகு ஒன்றை பணம், நகை வைக்கும் இடங்களில் வையுங்கள். மயிலிறகு இருக்கும் இடங்களில் எல்லாம் நல்ல ஆற்றல்கள் இருக்கும். நெகட்டிவ் வைப்ரேஷன்களை நீக்கும். எனவே பணம் நல்ல வழியில் செலவழியும். மேலும் மேலும் பெருகவும் செய்யும்.

திருஷ்டி தோஷம் நீங்க
வீட்டினுடைய தலை வாசல் பகுதிக்கு மேலே மயில் இறகை ஒட்டி வையுங்கள். வீட்டின் கதவு, ஜன்னல் போன்றவற்றில் மயில் தோகைகள் அல்லது மயில் வடிவங்கள் அமைக்கப்பட்டிருப்பது அதிர்ஷ்டத்தை தரும். வீட்டிற்குள் அதிக பல்லி தொல்லை இருந்தால் டியூப் லைட், அல்லது எந்த லைட்டுக்கு கீழே மயில் தோகையை ஒட்டி வைத்தாலும் அங்கு பல்லிகள் வராது. காயத்திற்கு மருந்து
போ டு ம் பொழுது மயிலிறகு கொண்டு போ டு ம் பொழுது காயம் வெகு விரைவாக ஆறும். இப்படி மயிலிறகு நமக்கு பல்வேறு அதிர்ஷ்டங்களையும், நன்மைகளையும் கொடுக்குமே தவிர, கெடுதல் ஒன்றும் செய்வதில்லை. எனவே அனைவருடைய வீட்டிலும் மயிலிறகு இருப்பது யோகம் தான்.

சனி தோஷம் நீங்க
மூன்று மயிலிறகை எடுத்து அதனை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து கருப்பு நிற கயிறு கொண்டு கட்டிகொள்ளவேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை வைத்துக்கொள்ளுங்கள். அதில் கொட்டை பாக்கு ஒன்றிரண்டு போ ட் டுக்கொ ள்ளுங்கள். பாக்கு ஊறிய தண்ணீரை மயிலிறகின் மீது தெளித்து ‘ஓம் சனீஸ்வராய நமஹ!’ என்கிற இந்த மந்திரத்தை 21 முறை உச்சரிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து தினமும் செய்து வரும் பொழுது சனி தோஷத்தால் பாதிக்கப்பட்ட ஜாதகக்காரர்கள் விமோசனம் பெறுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *