தீர்க்கமுடியாத பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கும் தேங்காய் தீப வழிபாடு !! எந்த கிழமைகளில் செய்தால் நல்லது தெரியுமா !!

ஆன்மீகம்

தீர்க்கமுடியாத பிரச்சனைகளுக்கும்

மனிதனாக இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவராசிக்கும் நாளாந்தம் ஓவ்வொருவரும் கஷ்டங்களையும் பிரச்சனைகளையும் அனுபவித்த வண்ணம் தான் உள்ளார்கள். இன்றைய சமூகத்தில் அதிகமானவர்கள் சில பிரச்சினைகளில் சி க் கிக் கொண்டால் அதிலிருந்து வெளிவருவது வெளிவர முயற்சிப்பதை விட்டு புலம்பிக்கொண்டே இருப்பார்கள். பொதுவாக எல்லா பிரச்சனைகளுக்கும் ஒவ்வொரு பரிகாரங்களும் தீர்வுகளும் உள்ளன. அவற்றை சரியான விதத்தில் செய்பவர்களுக்கே மாற்றமும் அதிசயமும் நடைபெறுகிறது.

எந்தவொரு தீர்க்க முடியாத பிரச்சனை மற்றும் கஷ்டங்களுக்கும் கண்டிப்பாக தீர்வை கடவுள் வைத்துள்ளார். சிலருக்கு தீர்வுகள் உடனேயே கிடைத்து விடும் பலருக்கு காலதாமதமாகலாம் ஆனால் எந்தவொரு பரிகாரத்தையும் தொடர்ச்சியாக செய்பவர்களுக்கே வெற்றி கிடைக்கிறது அதிகமான பிரச்சனைக்ளுக்கு தீர்வு இறைவனின் ஆலயத்தில் சென்று செய்யும் பரிகார முறைகளாகும். இதனால் நம்முடைய கஷ்டங்களை இறைவனிடம் முறையிட்டால், அந்த கஷ்டத்திற்கான தீர்வு உடனடியாக கிடைக்கும். ஆனால் சில பரிகாரங்கள் வீட்டில் இருந்த வண்ணம் செய்யும் பரிகாரங்களும் உள்ளன.

இன்றைய காலங்களில் அதிகமானவர்கள் இந்த வழிபாடு பற்றி அறிந்திருக்க சந்தர்ப்பம் இல்லை. எனினும் ஒருசிலர் இந்த தேங்காய் தீப வழிபாட்டை கோவில்களில் நாம் பார்த்திருப்போம். இருந்த போதிலும் பலருக்கு என்ன காரணத்திற்காக இப்படி செய்யப்படுகிறது என அறிந்திருக்க மாட்டார்கள். அந்த வகையில் தீர்க்கமுடியாத பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கும் தேங்காய் தீப வழிபாடு எப்படி செய்ய வேண்டும் மற்றும் எந்த கிழமைகளில் செய்தால் நல்லது என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.

தேங்காய் தீப வழிபாடு எப்படி செய்வது ?
முதலாவதாக நம்முடைய தீர்க்கமுடியாத பிரச்சனைகள் மற்றும் கஷ்டங்கள் யாவும் தீர வேண்டும் என முழுமனதுடன் இறைவனிடம் வேண்டுதல் செய்து ஒரு தாம்பாள தட்டின் மேல் சிறிது பச்சரிசி பரப்பி, அதன் மேல் ஒரு தேங்காயை இரண்டாக உடைத்து தேங்காய் மூடிகளை நிற்க வைத்து, அந்த தேங்காய் மூடி முழுவதும் தேங்காய் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி தாமரைத் தண்டு திரிபோ ட் டுத் தீபம் ஏற்ற வேண்டும்.

நம்முடைய வீட்டில் தீப வழிபாடு
மனதார இறைவனை வேண்டிக்கொண்டு தீராத கஷ்டம் தீர இந்த தீபத்தை செவ்வாய்க்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை வாரத்தில் வரக்கூடிய இந்த இரண்டு நாட்களில், ஏதாவது ஒரு நாளை தேர்ந்தெடுத்துக்கொ ள் ளுங்கள். செவ்வாய்க்கிழமை இந்த தீபத்தை வீட்டில் ஏற்ற தொடங்கினால், 3 செவ்வாய்க் கிழமை ஏற்றவேண்டும். ஞாயிற்றுக்கிழமை தீபம் ஏற்ற தொடங்கினால் 3 ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த தீபத்தை உங்களுடைய வீட்டில் ஏற்ற வேண்டும். உங்களுடைய வீட்டில் இந்த தீபத்தை ஏற்றிவைத்து தீராத எவ்வளவு பெரிய கஷ்டங்கள் இருந்தாலும் அந்த கஷ்டங்களை இறைவனிடம் முறையிடுங்கள். நிச்சயமாக அந்த கஷ்டம் மூன்றே வாரங்களில் நல்லதொரு முடிவுக்கு வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *