வியாபாரத்தில் வளர்ச்சி இல்லையா? இந்த தண்ணீரை தெளித்து விடுங்கள்… வீட்டில் நிம்மதி பெருகி தொழில் முன்னேற்றம் அடையும் !!

ஆன்மீகம்

வியாபாரம், தொழில் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு அதில் வளர்ச்சி என்பதே இல்லாமல் போகும். வீட்டில் நிம்மதியே இல்லாத ஒரு உணர்வு ஏற்படும். எதற்கெடுத்தாலும் ச ண் டை, சச்சரவுகள் என்று வீட்டில் எதிர்மறை அதிர்வலைகள் அதிகமாக காணப்படும். மேலும் இப்படி தொடர்ந்து ஏதாவது ஒரு மந்தநிலை இருந்து கொண்டே இருந்தால் வீடு, கடைகள், தொழில் செய்யும் இடங்கள் என்று எல்லா இடங்களிலும் கட்டாயம் இந்த தண்ணீரை தெளித்து விடுங்கள். நிச்சயமாக வீட்டில் நிம்மதி பெருகி தொழில் முன்னேற்றம் அடையும் அதே நேரம் உங்கள் வாழ்க்கையில் எல்லாமே மாறும். முந்தைய காலங்களில் எல்லாம் தினமும் கோவிலுக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டிருப்பார்கள்.

ஆனால் இப்போது இருக்கும் பலரும் அடிக்கடி கோவிலுக்கு செல்வது இல்லை. கோவிலில் கொடுக்கப்படும் தீர்த்தங்களை குடித்து வந்தாலே நோய் நொடி இல்லாமல் இருக்கலாம். கோவில் தீர்த்தங்களில் பச்சை கற்பூரம், கிராம்பு, ஏலம் போன்ற மருத்துவ மூலிகை பொருட்களை கலந்து கொடுப்பதால் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கோவில்களில் கொடுக்கப்படும் புண்ணிய தீர்த்தம் உடலில் இருக்கும் சர்வ தோஷங்களையும் நிவர்த்தி செய்யும்.

‘கோமுகி’ என்று கூறப்படும். எல்லா கோவில்களிலும் தினந்தோறும் கர்ப்ப கிரகத்தில் இருக்கும் மூலவருக்கு செய்யப்படும் அபிஷேக பொருட்கள் செல்வதற்கு ஒரு வழியை வைத்திருப்பார்கள். அதை அந்த கோமுகி வழியே வரும் அபிஷேக தீர்த்தங்கள் ‘கோமுகி தீர்த்தம்’ என்றும் கூறப்படுகிறது. சிலை மேல் பட்டு வரும் இந்த அபிஷேக பொருட்கள் மிகவும் மகத்துவமான சக்திகளைக் கொண்டுள்ளது. பழம்பெரும் கோவில்களில் இருக்கும் சிலைகள் நோய் தீர்க்கும் மருத்துவ பண்புகளை கொண்டுள்ளது. பழனி முருகன் சிலை நவபாஷாணத்தால் செய்யப்பட்டது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று தான்.

இந்த சிலைகளுக்கு செய்யும் அபிஷேகங்கள் கோமுகி தீர்த்தம் வழியே வரும் பொழுது மிகுந்த மருத்துவ குணங்களுடன் கூடிய அபூர்வ தீர்த்தமாக கருதப்படுகிறது. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த கோமுகி வழியே வரும் தீர்த்தம் பக்தர்களுக்கு அருட்பெரும் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.
நீங்கள் செல்லும் கோவிலுக்கு கோமுகி தீர்த்தம் வழியே வரும் இந்த தண்ணீரை வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வரலாம். எப்பொழுதெல்லாம் வீட்டில் நிம்மதி இல்லாத உணர்வும், தொழிலில் வளர்ச்சி இல்லாத நிலையும் உணர்கிறீர்களோ அந்த நேரத்தில் இந்த கோமுகி வழியே வரும் தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளித்து பாருங்கள். நிச்சயம் நல்ல மாற்றத்தை காணலாம்.

நீங்கள் தொழில் செய்யும் இடங்களில், மூலை முடுக்குகள் விடாமல் எல்லா இடங்களிலும் தெளித்து விடுங்கள். கடை வைத்திருப்பவர்கள் கடை முழுவதும் தெளிக்கலாம். இப்படி செய்யும் பொழுது உங்களையும், உங்கள் வீட்டையும், கடை, வியாபாரம், தொழில் போன்ற எல்லா இடங்களில் இருக்கும் கெட்ட சக்தியும் விலகிவிடும். துர்தேவதைகளின் ஆதிக்கம் வீட்டில் இருந்தாலும் அவைகள் வலுவற்று போய் விடும். இதனால் வீட்டில் சுபிட்சம் நிலைத்திருக்கும். நலிந்த தொழில், வியாபாரம் மீண்டும் வளர்ச்சியுறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *