செவ்வாய்க்கிழமை யட்சினி தேவதைக்கு வழிபாடு செய்தால் !! தலைமுறை தலைமுறையாக செய்த பாவங்கள் மறைந்து விடுமாம் !!

ஆன்மீகம்

செவ்வாய்க்கிழமை யட்சினி தேவதைக்கு …..

மனிதனுடைய பாவங்கள் எப்பொழுதுமே அவனை சுற்றி வளம் வருபவையாக உள்ளன, இம்மையில் செய்யும் பாவங்கள் மறுமையிலும் தொடர்கின்றன. நாம் செய்த பாவத்தோடு மட்டுமல்லாமல், நம்முடைய முன்னோர்கள் செய்த பாவமும் நம்மை தொடர்வது தான். பாவங்களை நிவர்த்தி செய்வதற்காக எத்தனையோ வழிமுறைகளையும் பரிகாரங்களையும் செய்து கொண்டு தான் இருக்கின்றோம் ஆனாலும் தீர்ந்தபாடில்லை. இந்த பூமியில் பிறந்த மனிதர்களாக இருக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் நிச்சயமாக வாழ்க்கையில் குறிக்கோள் இலட்சியம் என்ற ஒன்று கட்டாயம் இருக்கும்.

அந்த இலட்சியம் நிறைவேற்றுவதற்கு வாழ்கை ஓட்டத்தில் மனிதனும் பயணித்து கொண்டு நாளாந்தம் ஓடிக்கொண்டு தான் இருக்கின்றான். இருந்த போதிலும் மனிதர்களுடைய வாழ்வில் ஒரு வெறுமை தொடர்வதை அவதானிக்க முடிகிறது இவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்காது நாளாந்தம் கஷ்டப்பட்டும், வேதனையில் சிக்கி தவிக்கும் நிலையிலும் காணப்படுகிறார்கள். இவ்வாறு நம்முடைய குடும்பத்தில் முன்னேற்றம் ஒரு தடையாக இருப்பதற்கு முக்கிய காரியங்களில் ஒன்றாக இந்த முன்னோருடைய மற்றும் நம்முடைய பாவவினைகள் காரணமாகின்றன. இவ்வாறு நம்முடைய குடும்பத்தில் முன்னேற்றம் ஒரு தடையாக இருப்பதை ஆன்மீக ரீதியாக சுலபமான வழியில் சரி செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

யட்சினி வழிபாடு – யட்சினி வழிபாடானது செய்த பாவங்கள் மற்றும் எதிர்மறை ஆற்றலை சரிசெய்யவல்லது. இந்த யட்சினி தேவியாக பட்டவள் ஒரு நல்ல தேவதை. செய்த பாவங்கள் நீங்க முன்னேற்றத் தடையை அகற்ற, எதிர்மறை ஆற்றலை எதிர்த்துப் போ ரா ட யட்சினி வழிபாடு நமக்கு கை கொடுக்கும் . யட்சினி தேவி கேட்ட வரங்களை கொடுப்பதில் வல்லவள் இந்த தேவதை வழிபாட்டினை பற்றி நம்மில் பல பேர் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். நம்முடைய வீட்டில் இருந்தபடியே கேட்ட வரங்களை அள்ளித் தரக்கூடிய இந்த யட்சினி தேவதை வழிபாட்டை செய்வது எப்படி தெரியுமா.

செவ்வாய்க்கிழமை – யட்சினி தேவியை மனதார நினைத்து செவ்வாய்க்கிழமைகளில் வாரம் தோறும் வீட்டில் பூஜை செய்ய வேண்டும். சிறிய தாம்பூலத் தட்டில் மூன்று மண் அகல் விளக்குகளை வைத்து எப்போதும் போல பூஜை அறையை அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். முதலாவதாக ஒரு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய், 2வது மண் அகல் விளக்கில் தேங்காய் எண்ணெய், மூன்றாவது மண் அகல் விளக்கில் சுத்தமான நெய் ஊற்றி திரி போ ட் டு யட்சினி தேவியை நினைத்து தீபம் ஏற்றி வைக்க வேண்டும். –

நேரம் – இந்த தீபம் ஒளிரும் சமயத்தில் யட்சினி தேவியிடம் உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு எது தேவையோ, அந்த வேண்டுதலை முறையிட்டால், நிச்சயமாக கூடிய விரைவில் நிறைவேறும். இந்த தீபம் செவ்வாய்க்கிழமை 3.00 மணியிலிருந்து 4.30 மணி வரை உங்களுடைய வீட்டில் ஒளிர வேண்டும்.

காலம் – செவ்வாய்க்கிழமைகளில் யட்சினி தேவியை மேற்சொன்னபடி முறையாக வழிபட்டு வரவேண்டும். வாழ்க்கையில் தோல்வியே இல்லாத முன்னேற்றம் உங்களை தேடி வரும். நம்பிக்கையோடு வழிபாடு செய்பவர்களுக்கு, யட்சினி தேவி வரங்களை வாரி தருவாள், உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு, நீங்கள் செய்த பாவமோ அல்லது உங்கள் முன்னோர்கள் செய்த பாவமோ தடையாக நின்றால் கூட, அந்த தடைகள் தகர்க்கப்பட்டு பாவ விமோசனம் கிடைக்கப்பெறும். உங்களுடைய குறிக்கோள்கள் சிறிய குறிக்கோள் எனில் 3 வாரங்களில் அது நிச்சயமாக நிறைவேறிவிடும். குறிக்கோள் கொஞ்சம் பெரியதாக இருக்கும் பட்சத்தில், அந்தக் குறிக்கோள் நிறைவேற தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வரவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *