அற்புதமான இந்த நாட்களில் இறைவழிபாடு செய்தால் கிடைக்கும் பலன்கள் !! உங்கள் வீட்டில் தீராத பஞ்சங்கள் எல்லாம் விலகிவிடும் !!

ஆன்மீகம்

இறைவழிபாடு செய்ய இந்த நாட்கள்

இறைவழிபாடு என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மிக முக்கியமான ஒன்றாக காணப்படுகிறது. நம்முடைய வீடுகளில் காணப்படும் ஒவ்வொரு பிரச்சனைகள் மற்றும் இன்னல்களுக்கு காரணமாக இருப்பதும் பிரச்சனைகள் நீங்கி வாழ்கை சந்தோசமாக இருப்பதற்கும் இறைவழிபாடு மிக முக்கியமானதாக விளங்குகிறது ஆனால் இன்றைய நவீன காலத்தில் மக்கள் பூஜை செய்வதற்கு கூட நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டு இருக்கின்றோம். ஓடி ஓடி பணத்தை சம்பாதித்துக் கொண்டு இருக்கின்றோம்.

நம்முடைய வீடுகளில் இருக்கும் ஆண்கள் தொடக்கம் பெண்கள் வரை எல்லோருமே வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம். காலை சென்றால் இரவுதான் வீடு திரும்ப வேண்டும். இப்படிப்பட்டர்களால் தினமும் வீட்டில் இறைவழிபாடு செய்ய முடியாது. தினமும் மாலை நேரத்தில் வீட்டில் ஒரு விளக்கு கூட ஏற்றி வைப்பதற்கு ஆள் இல்லாத சூழ்நிலை, காரணம் வேலை. இருப்பினும் ஒரு வீடு என்று இருந்தால் அந்த வீட்டில் இந்த 5 நாட்களிலாவது கட்டாயம் தீபம் ஏற்றி இறை வழிபாட்டை செய்ய வேண்டும்.

முடிந்தவரை தினம் தோறும் வீட்டில் தீபம் ஏற்றுவதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். எந்த வேலை எப்படி இருந்தாலும் சரி, பூஜை அறையில் தீபம் ஏற்றுவதற்கு 5 நிமிடங்கள் கூட ஆக போவதில்லை. முடிந்தவரை தினம்தோறும் தீபம் ஏற்றுவதுதான் வீட்டிற்கு சுபிட்சத்தை தேடித்தரும். சரி, உங்கள் வீட்டில் தினந்தோறும் தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்ய முடியாத சூழ்நிலை இருக்கும் பட்சத்தில், இறைவழிபாட்டை கட்டாயம் செய்ய வேண்டிய அந்த 5 நாட்கள் எவையென பார்ப்போம். அதாவது பஞ்சப் பர்வதம் என்று சொல்லப்படும் இந்த அற்புதமான ஐந்து தினங்கள் வாழ்வில் பல நன்மைகளை கொண்டு வருகிறது.
1-அமாவாசை,
2-பவுர்ணமி,
3-அஷ்டமி,
4-ஏகாதசி,
5-சதுர்த்தசி.

கட்டாயம் இந்த திதிகள் காலண்டரில் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த தேதிகளில் கட்டாயம் பூஜை அறையில் உள்ள தெய்வங்களின் திருவுருவப்படத்திற்கு பூக்களால் அலங்காரம் செய்து, தீபம் ஏற்றி தீப தூப ஆராதனை செய்து வழிபாடு செய்தால் காலத்திற்கும் பஞ்சமே இல்லாமல் வாழ்க்கையை நடத்திச் செல்லலாம். லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும். வீட்டில் தரித்திரம் இருக்காது. இந்த ஐந்து நாட்களில் நீங்கள் இன்னொரு விஷயத்தையும் முயற்சி செய்து பார்க்கலாம்.

வீட்டில் இருக்கக் கூடிய பணக்கஷ்டம் தீர, இது ஒரு சிறப்பான வழி. பெரும்பாலும் எல்லோர் வீடுகளிலும் தூபம் போ டு வதற்கு ஒரு இரும்பு தூபக்கால் இருக்கும். சாம்பிராணி தூபம் போ டு வதற்கு என்று தனியாக வைத்திருப்பார்கள். அதில் கொஞ்சம் கொட்டாங்குச்சியை கொளுத்திப் போ ட் டு, நெருப்பை மூட்டிக் கொள்ளவேண்டும். அந்த நெருப்பில் நவகிரக குச்சி, வெண்குங்கிலியம், மருதாணி விதை, வெட்டிவேர், ஒரு சொட்டு தேன் இந்த ஐந்து பொருட்களையும் சேர்த்து பற்ற வைக்க வேண்டும். தேவைப்பட்டால் ஒரு கட்டி கற்பூரத்தையும் போ ட் டு பற்ற வைத்துக்கொள்ளுங்கள். இதை ஒரு சிறிய யாகம் என்று கூட வைத்துக்கொள்ளலாம். இந்த யாகத்தை, இந்த ஐந்து நாட்களில் நெருப்பு மூட்டி விட்டு பூஜை அறையில் வைத்து, உங்களுக்கு தெரிந்த மந்திரத்தை உச்சரித்தால்,

அந்த மந்திரத்திற்கான பலன் உடனே கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். அப்படி இல்லை என்றால் ஒரு தூபம் போ டு வது போல, இந்த நெ ரு ப் பி லிருந்து வரும் புகையை உங்கள் வீடு முழுவதும் காண்பிக்க வேண்டும். மாதத்தில் வரக்கூடிய இந்த ஐந்து நாட்களில், இந்த தூபத்தை தொடர்ந்து உங்களுடைய வீட்டில் போ ட் டு வந்தால், வீட்டில் எந்த ஒரு எதிர்மறை ஆற்றலும் தங்காது. வீட்டில் சண்டை சச்சரவுகள் வருவது குறையும். வீடு சுபிட்சம் அடையும். உங்களுடைய இல்லத்தை இனிமையான இல்லறமாக மாற்ற நீங்களும் இதை முயற்சி செய்து பார்க்கலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *