சனிபகவானால் எந்த ராசிக்கு கோடி பேரதிர்ஷ்டம் … அதிர்ஷ்டங்களையும் அதிகரிக்கச் செய்ய என்ன செய்ய வேண்டும் !!

ஆன்மீகம்

அதிர்ஷ்டங்களையும் அதிகரிக்க ….

சனிபகவானுக்குரிய ஒரு ஒரு ராசியாக கும்ப ராசி இருக்கிறது. கும்பம் ராசிக்காரர்கள் மற்ற எந்த ராசிக்காரர்களை விடவும் மனஉறுதி அதிகம் கொண்டவர்கள். ஆயுள்காரகனான சனி பகவானின் ராசி என்பதால் நீண்ட ஆயுளையும் பெற்றவர்களாக இருக்கின்றனர். கும்பம் ராசியினர் வாழ்வில் செல்வ நிலை உயரவும், அதிர்ஷ்டங்களை அதிகம் பெறவும் என்னென்ன செய்யலாம் என்பதை தற்போது காணலாம்.

கும்ப ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி, வெண்ணெய் தடவி, பழம் நைவேத்தியம் வைத்து, தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை வாழ்நாள் முழுவதும் செய்பவர்களுக்கு பாதகமான பலன்கள் ஏற்படும் நிலை நீங்கி நன்மைகள் அதிகமுண்டாகும்.

வளர்பிறை சனிக்கிழமை தினத்தில் திருப்பதி திருமலை கோவிலுக்கு சென்று வெங்கடாசலபதியை வழிபடுவது மிகவும் சிறந்த பலன்களை ஏற்படுத்தவல்ல பரிகாரமாகும். வருடத்திற்கு ஒருமுறை திருநள்ளாறு கோவிலுக்கு சென்று அங்கிருக்கும் சனீஸ்வர பகவானை வழிபடுவது நல்லது. புதிய முயற்சிகளையும், பணம் சம்பந்தமான விவகாரங்களையும் வெள்ளிக்கிழமைகளில் மேற்கொள்வது கும்ப ராசியினருக்கு அதிர்ஷ்டங்களை ஏற்படுத்தும்.

தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன்பாக காகங்களுக்கு உணவு வைத்த பின் சாப்பிடுவதால், சனிபகவானின் பூரணமான ஆசிகள் கிடைக்கப்பெறுவார்கள். சனிக்கிழமைகளில் கோயில்களில் இருக்கின்ற அரச மரத்தை சுற்றி வந்து வழிபாடு செய்வது யோகங்களையும், அதிர்ஷ்டங்களையும் அதிகரிக்கச் செய்யும். உங்கள் கழுத்து அல்லது வலது கையில் ஏழு முக ருத்ராட்சத்தை கருப்பு கயிற்றில் கோர்த்து அணிந்து கொள்வது சிறந்த பரிகாரமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *