யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் அ டி க்கப் போகிறது தெரியுமா ? உச்சக்கட்ட மகிழ்ச்சில் துள்ளிக் குதிக்க போவது எந்த ராசியினர் !!

ஆன்மீகம்

யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் …….

மேஷம்
இந்த மாதம் உங்கள் ராசி நாதன் செவ்வாய் பகவான் உங்கள் ராசியிலேயே வக்ர நிலையில் ஆட்சி பெற்று இருப்பது உங்கள் ராசிக்கு சற்று மோசமான பலனைத் தரலாம். வக்ர நிலையில் இருக்கிறது அதன் பின்னர் நீங்கல் சாதகமான யோகபலனைப் பெறுவீர்கள். நீங்கள் திட்டமிட்ட காரியங்கள் சாதகமான பலனையும், வெற்றியையும் பெற வாய்ப்புள்ளது. உங்கள் துறையில் நீங்கள் ஆளுமைத் திறனுடன் அதிகாரத்துடன் செயல்படுவீர்கள். எந்த பிரச்னையாக இருந்தாலும் அதை சமாளித்து வெற்றி பெறக்கூடிய முயற்சியும், திறமையும் உண்டாகும். நிதி நிலைமை ஏற்றம் மிகுந்ததாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும், தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தந்தையின் ஆலோசனை வழிகாட்டியாக இருக்கும். குரு பெயர்ச்சி 15ம் தேதி நிகழ உள்ளதால், இந்த மாதம் தொழில் ரீதியான சில பிரச்னைகள் எழலாம். புதிய தொழில் முயற்சிகளில் இந்த மாதம் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். பரிகாரம் : பெருமாள் வழிபாடு செய்வதால் வாழ்வில் வளம் பெறலாம்.

ரிஷபம்
இந்த மாதம் ரிஷப ராசிக்கு அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும். மேலும் குரு பகவான் ராசிக்கு 9ம் இடத்தில் அமர்வதால் ராஜ யோகமான நிலை ஏற்படும். காதலிலும், குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் ஏற்படும். உறவினர்கள் மூல உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். மேலும் உங்களின் ஆலோசனையை அவர்கள் கேட்கக் கூடும். தொழிலில் ஏற்றமிகுந்த மாதமாகவும், புதிய முதலீடுகள் வருவாய் லாபத்தைத் தரும். பங்குச்சந்தையிலிருந்து நல்ல லாபம் கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் நீங்கள் விருபிய இலக்கை அடையும் சிறப்பான சூழல் அமையும். சக ஊழியர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். பெண்களுக்கு திருப்திகரமான முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவி ஒற்றுமையில் பிரச்னை ஏற்படலாம். விட்டுக் கொடுத்து செல்வது அவசியம்.புதிய வண்டி, வாகன சேர்க்கை உண்டாகும். இருப்பினும் வீடு, மனை வாங்கும் யோசனையை தள்ளி வைக்கவும். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. பேச்சு, செயலில் கவனமாக இருங்கள்.

​மிதுனம்
இந்த மாதம் சற்று அலைச்சல் இருந்தாலும், பல வகையில் அனுகூலமாகவும், அனுபவமாகவும் இருக்கும். உங்கள் நிதி நிலைமை உயர்வாக இருந்தாலும், மறுபுறம் சற்று செலவுகள் ஏற்படக்கூடியதாக இருக்கும் என்பதால், பொருளாதாரம் சமமாக இருக்கும். உறவினர்கள், நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பும், அவர்கள் மூலம் அனுகூல பலனும் கிடைக்கக்கூடும். தேவையற்ற காரணங்களுக்காக உங்களின் மன நிலை வருத்தத்துடன் இருக்கும். ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகளவில் பயணம் செய்ய நேரிடலாம். சில பயணங்கள் மட்டும் அனுகூலமாக இருக்கும். தொழிலில் உங்கள் செயல் மீது கவனமாக இருப்பது அவசியம். சில நாட்கள் உங்களின் ஆரோக்கியத்தில் பின்னடைவு இருக்கும். ஆனாலும் உங்களின் மனம் குதூகலமாக இருக்கக்கூடும். பண பரிவர்த்தனையில் கவனம் தேவை. பேச்சு, செயலில் கவனமாக இருப்பதோடு, எதிலும் சற்று விட்டுக் கொடுத்து செல்வதால் மிகுந்த அனுகூலமான பலனைப் பெற்றிடலாம்.

கடகம்
குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படக்கூடும். இருப்பினும் உங்கள் புதிய முயற்சிகள் மூலம் நல்ல வரவு இருக்கும். அதனால் எதை நினைத்தும் மனதை குழப்பிக் கொள்ள வேண்டாம். சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய மாதமாக இருக்கும். அப்போது நிதானமும், ஆலோசனையும் தேவை. குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியான சூழல் இருக்கும். நிதி நிலைமை சிறப்பாக இருப்பதோடு, வண்டி, வாகன சேர்க்கை உண்டாகலாம்.தொழிலில் நல்ல லாபம், முடிவுகளைப் பெற உங்களின் செயல்பாடு அதிகமாக இருக்க வேண்டி இருக்கும். பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும் என்பதால், நீங்கள் எட்ட நினைத்த இலக்கை விரட்டிப் பிடிப்பீர்கள். மேலும் உங்களுக்கு சலுகைகள் கிடைக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் ஏற்படும். விட்டுப்போன உறவுகள், நட்புகள் திரும்ப சேரக்கூடிய வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.பண வரவில் சற்று இழுபறி இருக்கும் என்பதால் , குடும்ப தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சில சங்கடங்களைச் சந்திக்க நேரிடும்.குரு பெயர்ச்சி நிகழ்வால் உங்கள் ராசிக்கு மிகுந்த நல்ல பலனை அடையும் யோகம் வாய்க்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்கு சற்று சுமாரான பலன்கள் இந்த மாதம் ஏற்படக்கூடும். புதிய தொழில் தொடங்குதல், புதிய முயற்சிகளை மேற்கொள்ளுதல், பெரிய அளவிலான முதலீடுகளை செய்வதைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சில சங்கடமான நிகழ்வுகள் இருக்கும். கணவன் – மனைவி இடையே மனஸ்தாபம் ஏற்படலாம். உறவினர்களுடன் பேசும் போது கவனம் தேவை. நண்பர்களின் எண்ணிக்கை கூடும். ஆதரவாக இருப்பார்கள். தொழில், உத்தியோகத்தில் சில மனதிற்கு நிறைவான நல்ல பலன்கள் ஏற்படக்கூடும். இருப்பினும் பண பரிவர்த்தனையில் கவனம் தேவை. குறிப்பாக யாருக்காகவும் ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். தொழிலில் உங்கள் மீதான பொறுப்புகள் அதிகரிக்கும். அதேபோல் முன்னேற்றமும் இருக்கும். உத்தியோகத்தில் பணிச்சுமை ஏற்படக்கூடும் என்பதால் செயல்களை திட்டமிட்டுக் கொள்வது நல்லது. அதிகாரிகளுடன் இணக்கமாகச் செயல்படுவது நல்லது.குடும்பத்தில் தடைப்பட்டிருந்த சுப நிகழ்வுகள் நடக்கக்கூடும். திருமண வயதில் இருக்கும் இளைஞர்களுக்கு திருமணம் கைகூடும்.

​கன்னி
இந்த மாதம் கன்னி ராசிக்கு அனுகூலமான பலன்கள் ஏற்படும். பொருளாதார சிக்கல்கள் வந்தாலும் அதை தீர்ப்பதற்கான நல்ல வாய்ப்புகளும் கூடவே வரும். குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். அதில் எதை தெரிவு செய்வது, ஒதுக்குவது என குழப்ப நிலை உண்டாகும். பணவரவு இருக்கும் அதே நிலையில், செலவும் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் தேவையறிந்து செலவு செய்வது அவசியம். குடும்ப ஒற்றுமையும், தம்பதியிடையே அன்னியோன்னியமும் அதிகரிக்கும். குடும்பத்தில் புதிய நபர் சேர் வாய்ப்புள்ளது. அது திருமணம் வாயிலாகவும், குழந்தை பாக்கியம் மூலமாகவும் ஏற்படலாம். நட்பிலும், உறவிலும் நல்ல பிணைப்பு இருக்கும். புதிய நபர், பிரமுகரின் அறிமுகம் சில காரிய வெற்றிக்கு பயனுள்ளதாக இருக்கும்.உத்தியோகத்தில் சூழல் சிறப்பாக இருக்கும் என்றாலும், மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சியும், லாபமும் இருக்கும். மறைமுக எதிரிகள் நீங்குவர். உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.சிலருக்கு வெளியூர், வெளிநாடு பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் உண்டாகும். வழக்கு விஷயங்ளில் வெற்றி கிடைக்கும்

துலாம்
இந்த மாதம் சற்று சுமாரான பலன்கள் கிடைக்கக்கூடும். எதிலும் சற்று நிதனமாக இருக்க வேண்டியது அவசியம். பேச்சிலும், செயலிலும் கவனமாகவும், நிதானமாகவும் இருக்க முன்னேற்ற நிலை இருக்கும். உறவிலும், நண்பர்களிடமும் நிதானம் தேவை. தேவையற்ற பேச்சு உங்களை கடுமையாக பாதிக்கக்கூடும். மற்றவர்களின் விஷயங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்க வேண்டாம். சில விஷயங்களை நினைத்து மனம் கவலைக் கொள்ளும். மன அமைதி பெற யோகா, தியானம் செய்வது நலம். உங்களால் முடியக்கூடிய விஷயங்களை மட்டும் ஒப்புக் கொள்ளுங்கள். அதே போல் யாருக்காகவும் ஜாமின் கையெழுத்து போடுவது வேண்டாம். தொழில் விஷயமாக சில பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். வேலையாட்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பேச்சைக் கட்டுப்படுத்திக் கொள்ள சுமூக நிலை உண்டாகும். கடினமாக உழைத்தாலும் அதற்கேற்ற பலன் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். உத்தியோகத்தில் உங்களுக்கான மதிப்பு மரியாதை கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். அதிகாரிகள் கண்டிப்புடன் நடந்து கொள்ள வாய்ப்புள்ளது

விருச்சிகம்
இந்த மாதம் விருச்சிக ராசிக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். உங்களின் செயல்களில் நல்ல வேகமுடன், திறமையுடன் செயல்படுவீர்கள். மற்றொருபுறம் தேவையற்ற வம்பு, வழக்குகள் உண்டாகலாம். அதனால் கவனமும், நிதானமும் தேவை. பண விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. உங்களுக்கு வந்து சேர வேண்டிய பணம் வர தாமதமாகலாம். குடும்பத்தில் உரசல்கள் இருந்தாலும், ஒற்றுமை மேலோங்கும். கணவன் – மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். சுப நிகழ்வுகள் கைகூடி வரும் என்பதால் சுப செலவுகள் ஏற்படக்கூடும். உங்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் என்றாலும், பெரிய முன்னேற்றம், மாற்றம் ஏற்பட காலதாமதம் ஆகலாம். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றங்கள், லாபங்கள் ஏற்படுவது கடினமே. பெரியளவிலான முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருந்த எதிர்ப்புகள், சாதகமற்ற சூழல் நீங்கும். சிலருக்கு விரும்பிய இடத்தில் இடமாற்றம் ஏற்படலாம். உங்களின் திறமையை வெளிப்படுத்தக்கூடிய சூழல் உருவாகும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அதன் மூலம் மன நிம்மதியும், நம்பிக்கையும் அதிகரிக்கும்.

தனுசு
உங்கள் ராசிக்கு நவம்பர் மாத பலன் ஏற்ற இறக்கங்களுடன் இருக்கும். ஒரு புறம் உங்களுக்கு சில வழிகளில் பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும். ஆனால் அதை சமாளித்து முன்னேறக்கூடிய பக்குவமும், ஆற்றலும் உண்டாகும்.உங்களின் முக்கிய செயல்பாடுகளுக்கான முடிவுகளைப் பெற காலதாமதம் ஏற்படலாம். ஆனால் சுபமான பலன்களை எதிர்பார்க்கலாம். பண வரவு தாராளமாக இருந்தாலும், சில தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் சங்கடம் உண்டாகலாம். குடும்பத்தில் கணவன் – மனைவி இடையே உறவு சிறப்பாக இருந்தாலும், உடன்பிறப்பினருடனான உறவில் சிக்கல் உண்டாகலாம்.வம்பு, வழக்கில் ஈடுபட வேண்டாம். வழக்கு விஷயங்களில் சற்று இழுபறியான சூழல் இருக்கும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் நிகழும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கலாம். தொழிலில் புதிய முயற்சிகள், முதலீடுகள், புதிய தொழில் தொடங்குதல் போன்ற விஷயங்களுக்கு ஆலோசனையும், நிதானமும் தேவை. வெளியூர்/ வெளிநாடுகளில் புதிய வேலை வாய்ப்பு கிடைக்க யோகம் உண்டு. தொழிலில் முன்னேற்றம் இருக்கும். உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம்.

​மகரம்
இந்த மாதம் பல புதிய வாய்ப்புகள் தேடி வரும். சாதகமான சூழல் இருக்கும். ஆனால் எந்த செயலை செய்வதாக இருந்தாலும் ஒருமுறைக்கு இரு முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உங்களின் செயல்பாடுகளில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.பொருளாதாரத்தில் சரிவான நிலை ஏற்பட்டு முன்னேற்றம் காணும். உறவினர்கள் மூலம் தேவையற்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆன்மிக நாட்டம் உண்டாகும். புதிய நண்பர்கள், பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்கள் மூலம் சில செயல்களில் நல்ல வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது. திட்டமிடாத பயணங்கள் செய்ய வேண்டி வரும். இதனால் தேவையற்ற அலைச்சல், உடல் அசதி உண்டாகலாம். பண வரவு சிறப்பாக இருந்தாலும், தேவையற்ற செலவு செய்ய வேண்டிய நிலையை கட்டுப்பாட்டில் வைக்கவும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது அவசியம். உத்தியோகத்தில் முன்னேற்றமான சூழலும், தொழிலில் நீங்கள் நினைத்த லாபத்தை அடைய கடினமாக முயற்சி செய்ய வேண்டி இருக்கும்.

​கும்பம்
மாற்றங்களும், முன்னேற்றங்களையும் எதிர்பார்க்கும் மாதமாக இந்த மாதம் கும்ப ராசிக்கு அமையும். குடும்பத்தில் நீங்கள் எதிர்பார்த்த சுப நிகழ்வுகள் நடக்கும். திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற வற்றின் மூலம் குடும்ப நபர்களின் எண்ணிக்கை கூடும். குடும்பம் சார்ந்த சில செயல்கள் இழுபறிக்குப் பின் முடியக்கூடும். பயணங்களின் போது கவனம் தேவை. முடிந்தால் பயணத்தை தவிர்க்கலாம். வண்டி, வாகன பயன்பாட்டின் போது மித வேகம் கடைப்பிடிக்கவும்.சுப கிராகங்களுக்கு 6, 8ம் இடத்தில் அசுப, சுப கிரகங்கள் இருந்தாலும் கெடுபலன் நடக்குமா? உத்தியோகத்தில் நீங்கள் நினைத்த இலக்கை அடைய கடுமையாக உழைக்க வேண்டி வரும். அதோடு சிலருக்கு புதிய பொறுப்புகள், உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு ஏற்படலாம். தொழிலில் மறைமுக எதிரிகள் மூலம் உங்களுக்கு சாதகமான பலன்கள் ஏற்படலாம்.நிதி நிலைமை சிறப்பாக இருக்கும் என்பதால், உங்க தேவைகளை நிறைவேற்றுவதோடு, கடன்களை அடைப்பதற்கான வாய்ப்பு உண்டு.

​மீனம்
மீன ராசிக்கு இந்த மாதம் பல வகையில் நன்மைகள் உண்டாகு. பொருளாதார நிலை சிறக்கும் என்பதால் குடும்பத்தில் குதூகலம் இருக்கும். அன்றாட பணிகள் செய்வதில் சற்று கவனமாக இருக்க முன்னேற்ற நிலை உண்டாகும்.உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் உங்களின் மதிப்பு, மரியாதை கூடும். உடல் நலனில் கவனம் தேவை. ஆன்மிக நாட்டம் உங்களுக்கு மன அமைதி தரும்.உத்தியோகத்தில் புதிய வேலை வாய்ப்பு கிடைக்க அல்லது புதிய இடமாற்றம் கிடைக்கலாம். சிலருக்கு பயணங்கள் செய்ய வேண்டிய நிலை இருக்கு என்பதால் அலைச்சல் ஏற்படும்.தொழிலில் நீங்கள் விரும்பிய முன்னேற்றத்தை அடையலாம். மறைமுக எதிரிகள், வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள்.திருமணம், குழந்தைப்பேறு போன்ற சுப நிகழ்வுகள் நடக்கும். தேவையற்ற பயணங்களால் பொருட் செலவும், உடல் அசதியும் ஏற்படக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *