சிங்கத்திடம் சிக்கிய வரிக்குதிரை குட்டி.. மின்னல் வேகத்தில் சென்று காப்பாற்றிய தாய்..!

விந்தை உலகம்

சிங்கம் என்பதுபாலூட்டி  வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு  ஆகும். இவ்விலங்கு ஊன் உண்ணும் விலங்கு வகையைச் சேர்ந்தது. தமிழில் ஆண் சிங்கத்திற்கு அரிமா என்று பெயருண்டு. ஏறுகளின் கழுத்தில் பிடரி இருப்பது சிறப்பாகும். பிடரியை உளை என்றும் உளை மயிர் என்றும் கூறுவதுண்டு. சிங்கமானது பூனைப் பேரினத்தைச்  சேர்ந்தது. பூனைப் பேரினத்திலேயே,புலிக்கு அடுத்தாற்போல இருக்கும் பெரிய விலங்கு. ஆண் சிங்கம் 150-250 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். பெண் சிங்கம் 120-150 கிலோ கிராம் எடை கொண்டதாக இருக்கும். இவ்விலங்கு இன்றுஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் உள்ள காடுகளில் மட்டுமே காணப்படுகின்றது.

சிங்கங்கள் காட்டின் ராஜா என அழைக்கப்படுகின்றன. சிங்கங்களின் வாழ்நாள் பொதுவாக பத்திலிருந்து பதிநான்கு ஆண்டுகள் வரை இருக்கும். ஆண் சிங்கங்களின் சராசரி ஆயுட்காலம் 12 வருடங்களும் பெண் சிங்கங்களின் சராசரி ஆயுட்காலம் 16 வருடங்களும் ஆகும். 2 பெண் சிங்கங்களுக்கு பிடரிமயிர் அதிகமாக இருக்கும் ஆண் சிங்கங்களின் மீது தான் அதிக ஈர்ப்புக் கொள்ளுமாம்.

சிங்கங்களின் கூட்டத்தை எதிர்த்து சண்டையிடும் துணிச்சல் முள்ளம்பன்றிக்கு இருக்கிறது. தீக்கோழி ஒரே உதையில் மனிதர்களை மட்டுமின்றி சிங்கத்தையும் உயிரிழக்க வைத்திடுமாம். மலை சிங்கங்கள் அதனுடைய இரையை புதைத்து வைத்துவிட்டு, பசிக்கும் போது மீண்டும் எடுத்து உண்ணும் பழக்கம் கொண்டுள்ளது.

சிங்கங்களில் வேட்டையாடுவதில் 90% பெண் சிங்கங்கள் தான். ஆண் சிங்கங்கள் மிகவும் அபூர்வமாக தான் வேட்டைக்கு செல்லும்.  அந்த வகையில் வேடடைக்கு சென்ற சிங்கம் ஒன்று குட்டி வரிக்குதிரை ஒன்றை ஆக்ரோஷமுடன் கவ்வி இழுத்து சாய்க்கிறது.

உடனே இதைக்கண்ட தாய் வரிக்குதிரை குட்டியை மீட்க போராடி சிங்கத்தை தள்ளிவிட்டு சண்டையிடுகிறது. இறுதியில் சிங்கத்தை தனது பின்னங்கால்களால் எட்டி உதைத்து குட்டி வரிக்குதிரையை காப்பாற்றுகிறது தாய் வரிக்குதிரை.

இதனால், சிங்கம் தலைதெறிக்க ஓடுகிறது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து மனிதன் மட்டும் அல்ல. எல்லா உயிரினங்களும் தனது குழந்தையை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்லும் என்று கருத்திட்டு தாய் வரிக்குதிரையை பாராட்டி வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ காட்சி …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *