ஒருவருடைய வாழ்க்கையில் ஏழரை சனி இருந்தால் என்னென்ன நடக்கும் தெரியுமா !! இன்று இந்த ராசியினருக்கு மட்டும் வசந்த காலம் !!

ஆன்மீகம்

வாழ்க்கையில் வசந்தம்………

தற்போது மக்களிடையே கடவுள் பக்தியும், ஜோதிட நம்பிக்கையும் சற்று அதிகரித்துள்ளது. இதனால் தான் தற்போது பலர் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் ஜோதிடர்களை சந்தித்து, தங்களது ஜாதகங்களைக் கொடுத்து நல்ல காலமா என்பதைப் பார்க்கிறார்கள். மேலும், ஜோதிடர்கள் தங்களுக்கு சாதகமாக என்ன கூறினாலும் அதை செய்யவும் தயாராக உள்ளனர். இது சிலருக்கு பொருந்தும், சிலருக்கு பொருந்தாமலும் இருக்கும். எந்த விடயங்களையும் முழு நம்பிக்கையுடன் செய்தால் வெற்றி நிச்சயம்.

ஒவ்வொரு நாளும் கிரகங்களின் நிலை மாறும். இப்படி தினமும் மாறும் கிரகங்களின் சஞ்சாரங்களால் ஒவ்வொரு ராசிக்காரரின் பலனும் அன்றாடம் மாறுபடும். தினசரி ராசிப்பலன்கள் மூலம் நீங்கள் எந்த மாதிரியான சவால்களை எதிர்கொள்வீர்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும். உங்கள் வாழ்க்கை ஏற்பட போகும் அனைத்து வகையான கேள்விகளுக்குமான விடை இங்கு கிடைக்கும். அந்த வகையில், இன்று நீங்கள் சந்திக்கவிருக்கும் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் என்னவென்று உங்களுக்குத் தெரியாவிட்டால் உடனே ராசிப்பலனைப் பார்த்து அறிந்துகொள்ளுங்கள்.

வைகாசி மாதம் பிறந்து விட்டது. ரிஷப ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் வைகாசி மாதமாகும்.
வைகாசி மாதத்தை மாதவ மாதம் என்றும், வைசாகம் என்றும் அழைப்பார்கள்.வேதம், புராணம் ஆகியவை போற்றுகின்ற மாதம் வைகாசி! பூமியில் படுத்துறங்குதல், பிரம்மச்சரியம், விழிப்புடன் இருத்தல் ஆகிய மூன்றும் வைகாசி மாதத்தின் “மாதவம்’ என்றும் வடமொழி நூல்கள் கூறுகின்றன. சிறப்பான இந்த மாதத்தில் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம்,கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

துலாம்
சுக்கிர பகவானை ராசி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கு சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகத்தில் கவனம் தேவை. சுக்கிரன் 8ஆம் வீட்டில் மறைவதால் திடீர் யோகம் வரும் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். மனதில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும் வெற்றிகள் தேடி வரும். புதன் வக்ரமடைவதால் அப்பாவின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உறவினர்கள் பேசும் போது விவாதம் வேண்டாம் விட்டுக்கொடுங்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உள்ள குரு பகவான் பார்வையால் வெற்றிகள் தேடி வரும்.

பிள்ளைகளுக்கு திருமணம் சுப காரியம் நடைபெறும் வாய்ப்பு தேடி வரும். பாக்ய ஸ்தானத்தில் உள்ள செவ்வாய் மாத பிற்பகுதியில் பத்தாம் வீட்டில் பயணம் செய்வதால் வீடு இடமாற்றம் ஏற்படும். வேலையில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் சிந்தனையில் தடுமாற்றம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பணப் புழக்கம் சரளமாக இருக்கும். வைகாசி விசாகம் நாளில் முருகனை நினைத்து வணங்குங்கள். நல்லதே நடக்கும். காளியம்மன் கோவிலுக்கு சென்று வணங்குங்கள் பச்சரிசி தானமாக கொடுங்கள்.

விருச்சிகம்
சுக்கிரன் பார்வை கிடைக்கிறது. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சுக்கிரன் புதன் சாதகமாக உள்ளதால் வெற்றிகள் தேடி வரும் பிள்ளைகள் திருமணம் விசயமாக பேசலாம். நான்காம் வீட்டில் குரு இருப்பதால் பெற்றோரின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. ராசிநாதன் செவ்வாய் பாக்ய ஸ்தானத்தில் நீசமடைவதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சனிபகவான் சாதகமாக இருக்கிறார். சந்தோஷங்கள் நிறைந்த மாதமாக அமையும் வெற்றிகள் தேடி வரும். அரசு வேலைகளுக்கு முயற்சி செய்யலாம். சவால்களை ஜெயித்து காட்டுவீர்கள். ராசியில் கேது பயணம் செய்வதால் முன்கோபத்தை தவிர்க்கவும்.

பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். இரவு நேர பயணங்களை தவிர்த்து விடவும். இந்த மாதம் உங்களுக்கு நன்மைகள் நிறைந்த மாதமாக அமையும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களால் நன்மை உண்டாகும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் இனம் புரியாத கலக்கம் ஏற்படும் உறவினர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். ஆதரவற்றவர்களுக்கு உதவுங்கள். செவ்வாய்கிழமை கந்த சஷ்டி கவசம் படியுங்கள் தைரியம் தன்னம்பிக்கை கூடும்.

தனுசு
குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, இந்த மாதம் முழுவதும் சூரியன் ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். குடும்பத்தில் இருந்து வந்த ச ண் டை சச்சரவுகள் முடிவுக்கு வரும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வெற்றிகள் தேடி வரும். மாத பிற்பகுதியில் ஏழாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சியாகும் சுக்கிரனின் பார்வை கிடைப்பதால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அழகு அதிகரிக்கும். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள் கவனம் தேவை. வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

கடின உழைப்பால் ஜெயித்து காட்டுவீர்கள். ஏழரை சனியில் பாத சனி நடைபெறுவதால் வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிர்களை வெல்வீர்கள். கேது உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும். குல தெய்வ வழிபாடு செய்யவும். உளுந்தப்பருப்பு தானமாக கொடுக்கவும்.

மகரம்
சனிபகவானை ராசி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே, இந்த மாதம் உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுவடைந்துள்ளது. சூரியன், சுக்கிரன்,புதன், ராகு ஆகிய கிரகங்கள் ஐந்தாம் வீட்டில் கூடியுள்ளன. செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களுடன் சச்சரவு ஏற்படும், கூர்மையான பொருட்களால் காயம் ஏற்படலாம் கவனம் தேவை. மாத பிற்பகுதியில் செவ்வாய் இடம் மாறி ஏழாம் வீட்டில் அமர்கிறார் சகோதரர்களால் சண்டை சச்சரவு வரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளை அனுசரித்து செல்லவும்.

எத்தனை சிக்கல்கள் வந்தாலும் தடைகளைத்தாண்டி ஜெயிப்பீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் தொடர்ந்து அக்கறை காட்டுங்கள். பூர்வீக சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் கடன் வாங்கி சிக்கிக்கொள்ள வேண்டாம். பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனதின் ஆசைகள் நிறைவேறும்.

கும்பம்
சனிபகவானை ராசி நாதனாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே, இந்த மாதம் நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் கிரகங்கள் கூடியுள்ளன. சுக்கிரன் சாதகமான வீட்டில் பயணம் செய்கிறார். எதிர்பார்த்த தொகை கிடைக்கும். ஷேர்மார்க்கெட் மூலம் பணம் வரும். மன குழப்பங்கள் நீங்கும். சிக்கல்கள் முடிவுக்கு வரும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். புதிய வேலை கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் சில சிக்கல்கள் வரும். செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகரிக்கும்.

மகளுக்கு திருமணம் நிச்சயமாகும். வீண் சந்தேகங்களை விட்டு விடுங்கள். ஆன்மீகத்தில் மனதை செலுத்துங்கள். ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, வீட்டை ரிப்பேர் செய்து பராமரிக்கும் நிலை உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும், செயல்கள் எல்லாம் சிறப்படையும். வெள்ளிக்கிழமைகளில் துர்க்கையை நினைத்து வணங்குங்கள். வைகாசி மாதத்தில் தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.

மீனம்
குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே, இந்த மாதம் முயற்சி ஸ்தானத்தில் கிரகங்கள் கூடியுள்ளன. உங்களுக்கு வரும் சவால்களை தைரியமாக எதிர்க்கொள்வீர்கள். மன குழப்பங்கள் தடுமாற்றங்கள் நீங்கும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். செவ்வாய் 5ஆம் வீட்டில் நீசமடைவதால் பண விவகாரங்களில் கவனம் தேவை. புதிய வேலை, தொழில் முயற்சிகள் இப்போதைக்கு வேண்டாம்.

இருக்கிற வேலையில் சவால்கள் வரும் அதை வெற்றிகரமாக ஜெயித்து காட்டுவீர்கள். பங்குச்சந்தை முதலீடுகள் மூலம் பண வரவு அதிகரிக்கும். சகோதர வகையில் செலவுகள் அதிகரிக்கும். சொத்து வீடு வாங்கும் போது கவனம் தேவை. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தடைகள் உடைபடும். தொட்ட காரியங்கள் துலங்கும் மாதம். சிவபெருமானை பிரதோஷ நாளில் வணங்குங்கள். ஏழை நோயாளிகளுக்கு பழங்கள் தானமாக கொடுங்கள். நன்மைகள் நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *