2021 ன் எந்த ராசிக்கு அதிஷ்டம் கிடைக்க போகிறது தெரியுமா !! சனி வக்ர பெயர்ச்சி பலன்கள் கூறும் தகவல்கள் !!

ஆன்மீகம்

2021 சனி வக்ர பெயர்ச்சி ……

சனி வக்ர பெயர்ச்சி ஆனது 2021-ன் ஆண்டில் சனி பகவான் மகர ராசியில் உள்ள திருவோணம் மூன்றாம் பாதத்திலிருந்து திருவோணம் முதல் பாதம் வரை செல்லக்கூடிய நிகழ்வு மே 23 முதல் அக்டோபர் 11ம் தேதி வரை நடக்க உள்ளது.சிம்ம ராசிக்கு முதல் அவயோகாதிபதி சனி பகவான். அதாவது முதல் பகை கிரகம். இந்த வக்ர சனி பெயர்ச்சியின் காரணமாக சிம்ம ராசிக்கு மிக சிறப்பான பலன்களே கிடைக்கும். சிம்ம ராசியினர் கெட்டவன் கெட்டல் கிட்டிடும் ராஜ யோகம் எனும் ஜோதிட விதியின் படி மிக யோகங்கள் நிறைந்த பலன்களையே பெறுவார்.

கடந்த மூன்று வருடங்களாக குடும்பம், உத்தியோகம், தொழில் ஆகியவற்றில் எதிர்பாராத கெடு பலன்களே பெற்று வந்தனர். பெரிய லாபம் ஏதும் கிடைக்காமல், கடன் தொல்லையில் சிக்கி வந்தனர்.சிம்ம ராசிக்கு சனியின் வக்ர பலனால் நேர்மறையான பலனைத் தரும் வகையில் உங்களின் திறன்கள் பத்து மடங்கு அதிகரிக்கும். உங்களின் தன்னம்பிக்கை பலப்படுத்தப்படும். அதனால் உங்களின் விருப்பம் அனைத்தையும் பெரிய அளவில் நிறைவேறும்.

தடுமாற்றங்கள், பிரச்னைகளை அதிக தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல் கவனமாகச் செயல்பட்டால் போதும். ஆனால் இந்தாண்டு தொடக்கத்திலிருந்து சிம்ம ராசியினர் சனி பகவானால் நல்ல மாற்றங்களைப் பெற்று வருகின்றனர். ஏனெனில் சனி பெயர்ச்சி கடந்த டிசம்பர் மாதம் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி ராசிக்கு 5ம் இடத்திலிருந்து 6ம் இடமான மகர ராசிக்கு பெயர்ச்சி ஆனது. அதோடு குருவும் சனியுடன் இணைந்திருந்தார்.

இதனால், குரு பகவானும் தற்போது கும்ப ராசிக்கு அதிசார பெயர்ச்சி அடைந்துள்ளார். இதன் காரணமாக குருவின் 7ம் சுப பார்வை சிம்ம ராசி மீது விழுவது மேலும் விசேஷமானது. குருவின் 7ம் பார்வை விழுவதால் திருமண முயற்சியில் ஈடுபட்டுள்ள சிம்ம ராசியினருக்கு விரைவாக நல்ல வரன் அமைந்து திருமண யோகம் உண்டாகும். மேலும், சனியின் வக்ர பெயர்ச்சியாலும் சனி பகவான் 6ல் மறைவு ஸ்தானத்தில் உங்களுக்கான கெடுபலனும் குறையும். திருமண வயதைக் கடந்தவர்களுக்கும் நல்லபடியாகத் திருமணம் ஆக வாய்ப்புள்ளது.

திருமணத்தில் இருந்த களத்திர தோஷங்கள் நீங்கும். குழந்தை பாக்கியம் சிறப்பாக உண்டாகும். நீங்கள் நினைத்தபடி தொழில், வியாபாரம் சிறக்கும். பெரிய லாபம் கிடைக்காவிட்டாலும் உங்களின் நிதி நிலைமை உயர்வு தரக்கூடியதாகவே இருக்கும். உத்தியோகஸ்தர்கள் சற்று பொறுமையும், அர்ப்பணிப்புடன் உங்கள் வேலையை செய்து வந்தால் உங்களின் உத்தியோகத்தில் மேன்மையும், நற்பெயர் பெறக்கூடியதாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *