இதை அலட்சியமாக எண்ணி விடாதீர்கள் !! கோடீஸ்வரர் ஆக மாற்றும் சக்தி 1 ரூபாய் நாணயதிற்கு உள்ளதாம் !!

ஆன்மீகம்

கோடீஸ்வரர் ஆக மாற்றும் சக்தி

பணம் வைத்திருக்கும் இடத்தை எப்போதும் சுத்தமாக பார்த்து கொள்ள வேண்டும். ஒரு ரூபாய் நாணயத்தை அலட்சியமாக எங்கும் போ ட் டு வைக்க வேண்டாம். 1 ரூபாய் நாணயத்திற்கு கோடீஸ்வரர் ஆக்கும் சக்தி உள்ளது. சிலர் ஆண்டு பிறப்பு நாட்களில் பரிசளிப்பார்கள். ஒரு ரூபாய் நாணயம் எத்தனையோ பேரை கோடீஸ்வரர்களாக மாற்றியுள்ளது. பணம் வைத்திருக்கும் பெட்டியில் எப்போதும் 1 ரூபாய் நாணயம் ஒன்று இருக்க வேண்டும். நீங்கள் உபயோகப்படுத்தும் மணி பர்ஸிலும் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்திருங்கள்.

உங்களுக்கு மிகவும் பிடித்தமான நபரிடமிருந்து அல்லது உங்கள் வளர்ச்சியை பார்த்து பெருமைப்படும் நபரிடமிருந்து இந்த ஒரு ரூபாய் நாணயத்தை பெற்றுக் கொள்ளுங்கள் அந்த பணம் உங்களை பல கோடிக்கு அதிபதியாக்கும் வல்லமை படைத்தது. இன்றைய கால கட்டத்தில் பணத்தை சம்பாதிப்பது கஷ்டம் என்றால் அதைவிட அதை சேமிப்பது மிகவும் கஷ்டம். பணத்தை எங்கு வேண்டுமானாலும் வைக்க கூடாது. பணத்தை அலட்சியமாக கண்ட இடங்களில் போட்டு வைத்தால் அது நம்முடைய கைகளில் தங்கவே தங்காது.

மகாலட்சுமியின் அம்சம்
திருமணம், பிறந்தநாள் விழாக்களில் மொய் எழுதும் போது ஒரு ரூபாய் நாணயம் சேர்த்து பரிசாக கொடுப்பார்கள். பணம் நிறைய பெருக வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு தரப்படுகிறது. எனவேதான் ஒரு ரூபாய் நாணயத்தை யாரும் அலட்சியமாக நினைத்து கண்ட இடங்களில் போட்டு வைக்கக் கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது.

பணம் எப்படி சேரும்
பணம் நம்முடைய வீட்டில் அதிகம் சேர பணம் வைக்க மரப்பெட்டி ஒன்றை வாங்க வேண்டும். அதில் மட்டுமே பணம் வைப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். நிச்சயம் மாற்றம் உண்டாகும். மரபெட்டிக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உண்டு. மாதந்தோறும் நீங்கள் 10,000 சம்பதிப்பவராக இருந்தாலும் சரி, 10,0000 சம்பாதிப்பவராக இருந்தாலும் சரி கஷ்டபட்டு சம்பாதித்த பணத்தை வீட்டிற்கு கொண்டு வந்ததும் இந்த பெட்டியில் வைத்து விடுங்கள். பண ஈர்ப்பு விதியின் மூலம் அதிகம் பணம் சேரும்.

செல்வம் மேலும் பெருகும்
பணப்பெட்டியில் அல்லது பீரோவில் பச்சைக் கற்பூரம், ஏலக்காய், கிராம்பு, மாதுளை குச்சி போன்ற லட்சுமி அம்சம் பொருந்திய பொருட்களை வாசனைக்காக வைத்துக்கொண்டால் செல்வம் நிலையாக தங்கும். வடக்கு திசையில் வைக்க முடியாதவர்கள் மாற்றாக கிழக்கு திசையில் வைக்கலாம். கிழக்கிலும் செல்வம் பெருகுவதற்கான வாஸ்து சாஸ்திரம் இடம்பெற்றுள்ளன. நீங்கள் பணத்தை வைக்கும் இடத்தில் லட்சுமி குபேர படத்தை, அல்லது எந்திரத்தை வைத்துக்கொண்டால் செல்வம் மேலும் பெருகும்.

பணத்தை இந்த இடங்களில் வைக்காதீர்கள்
பணம் வைத்திருக்கும் இடமானது நுழைவு வாயிலை பார்த்தவாறு கட்டாயம் இருக்கக் கூடாது.
வீட்டிற்குள் நுழையும் மற்றவர்களின் கண்களுக்கு நேரடியாக படாதபடி இருக்கவேண்டும்.
அதேபோல் பூஜையறையில் சிலர் பணத்தை வைத்திருப்பார்கள். இதுவும் தவறான முறையாகும்.
பூஜை அறையிலிருந்து பணத்தை எடுத்து செலவு செய்வது போல் வைத்துக் கொள்ளாதீர்கள். இதுவும் பணம் தங்காமல் போவதற்கு காரணமாக இருக்கும். வீட்டின் நுழைவு வாயில், சமையலறை, குளியலறை, கழிவறை, மாடிபடிக்கட்டுகள் இவற்றையும் நோக்கியபடி பணத்தை வைக்கக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *