நீங்களும் இந்த தவறுகளை செய்பவரா ? சாப்பிடும் பொழுது உள்ளங்கை கீழே வைக்கக்கூடாது என்று ஏன் கூறுகிறார்கள் தெரியுமா !!

ஆன்மீகம்

நம் முன்னோர்கள் சொல்லிய ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னாலும் சிந்திக்க வைக்கும் காரணங்களும் இருக்கும். சாப்பிடும் பொழுது பலபேர் இடது கையை பூமியில் படும்படி ஊன்றிக் கொண்டு சாப்பிடுவார்கள். அவ்வகையில் உள்ளங்கையை பற்றி கூறப்பட்டு வந்த கருத்துக்கள்! அதனுடைய உண்மை பின்னணிகள் என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள். அதாவது இந்த பூமிக்கும், நம் உள்ளங்கைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
உள்ளங்கையால் செய்கிற எந்த ஒரு விஷயமும் பன்மடங்கு பலனைக் கொடுக்கக் கூடியது. உள்ளங்கை என்பது நம் மொத்த சக்திகளை பூமி ஊறிஞ்சிக் கொள்ளும் ஒரு பாகமாகக் கருதப்படுகின்றது. நம் உள்ளங்கை ஒருபொழுதும் பூமியில் படக்கூடாது. அப்படி படும் பொழுது நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி பூமியானது உறிஞ்சிக் கொண்டுவிடும். சாப்பிடும் பொழுது நம் முன்னோர்கள் கையை ஊன்றி சாப்பிட்டால் உடலில் சத்துக்கள் ஒட்டாமல் போய்விடும் என்பார்கள்.

முப்பெரும் தேவி –
முப்பெரும் தேவியரும், அங்காரகனும் வசிக்கும் இடம் உள்ளங்கை ஆகும். இதனால் தான் உள்ளங்கையில் வாங்கும் பிரசாதம் முதல் தீர்த்தம் வரை அத்தனையும் சக்தி பெறுகிறது. விபூதி இட்டுக்கொள்ளும் பொழுது விரல்களால் இட்டுகொள்ளாமல் உள்ளங்கையால் முழுவதுமாக இட்டுக் கொள்ளவேண்டும் என்று பழங்காலத்தினர் அறிவுறுத்தி வந்தனர். பூமியில் அ டி த்து சத்தியம் செய்வது எந்த அளவிற்கு சக்திகளைக் கொண்டுள்ளது என்பதை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

இரவில் உறக்கம் –
தூ ங் கும் பொழுது உள்ளங்கையை தலையில் வைத்து தூ ங் குவது மற்றும் கன்னத்தில் வைத்து தூ ங் குவது போன்ற செயல்களை கட்டாயம் செய்யக் கூடாது. அப்படி செய்யும் பொழுது மூதேவி உங்களுடன் குடிக்கொண்டு விடுவாள். நம் உடலில் ஆற்றல் பெருக தினமும் சூரிய ஒளியில் நம் உள்ளங்கையை காண்பித்து பிறகு உச்சந்தலையில் சிறிது நேரம் வைக்க ஆற்றல் பெருகும். எதையாவது யோசிக்கும் பொழுது உள்ளங்கையை தலையில் வைத்து சிந்தித்தால் அறிவு வளரும்.

தொடுகை –
ஒருவருக்கு சாபம் கொடுத்தாலும், ஆசீர்வாதம் கொடுத்தாலும் உள்ளங்கையில் தண்ணீரை ஊற்றி செய்யும் பொழுது அது முற்றிலும் பலிக்கும். மூன்று தேவிகளுடன், பூமாதேவி சேரும் பொழுது மனிதனுடைய உடல் சக்திகள் உறிஞ்சப்பட்டு அவனிடம் இருக்கும் சுப சக்தியாகிய செல்வ மகள் லட்சுமி தேவியை இழக்க நேரிடும். ஒருவருக்கு கைகுலுக்கும் பொழுது கூட ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு சக்தி பரிமாற்றம் நிகழும். இதனால் அவர் எந்த மனநிலையில் இருந்தாலும் அந்த மனநிலை உங்களையும் சேரும். நட்பு என்றால் நட்பும், பகை என்றால் பகையும் உண்டாகும். இந்த சக்திகள் நம்மிடம் இருந்து உறிஞ்சிக் கொள்ளபடாமலிருக்க தான் மோதிர விரலில் மோதிரம் அணிவதும், மணிக்கட்டில் வளையம் அணிவதும் அந்தக் காலம் முதல் இப்போது வரை நடைமுறையில் இருக்கிறது.

மோதிர விரல் –
உங்களிடம் இருக்கும் சுப சக்திகள் எதுவும் விரயம் ஆகாமல் இருக்க கட்டாயம் மோதிர விரலில் ஏதாவது ஒரு மோதிரம் அணிந்து கொள்ளுங்கள். மோதிர விரலில் இருக்கும் சக்தி பூமி நம் மீது கொடுக்கும் தா க் க த்தை கட்டுப்படுத்துகிறது. எந்த ஒரு மாந்திரீக சக்திகளும், கெட்ட சக்திகளும் நம்மை அணுகாமல் இருக்க மற்றும் எவரொருவர் கொடுக்கும் சாபமும் சட்டெனே பலிக்காமல் இருக்க கால்களில் தண்டை அணிவது, கொலுசு அணிவது, மணிக்கட்டில் கருப்பு கயிறு கட்டுவது, ஒரு காலில் மட்டும் கருப்பு கயிறு கட்டுவது, பெண்கள் மெட்டி அணிவது போன்ற விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். குறிப்பிட்ட இடங்களில் இருக்கும் கட்டுகள் நம்மிடம் இருக்கும் நல்ல சக்திகளை தக்க வைக்கும்.

வேண்டிய பலன் முழுமைபெற –
கோவிலுக்கு சென்று வரும் பொழுது சிறிது நேரம் அமர்ந்து விட்டு வருவோம். அப்படி அமர்ந்து எழும் பொழுது கையை ஊன்றி எழுந்திரிக்க கூடாது. கையை ஊன்றினால் கோவிலில் கிடைத்த சக்திகள் அனைத்தும் பூமி உறிஞ்சிக் கொண்டு விடும். பிறகு பெற்ற பயன் எல்லாம் வீண் தான். கால் பலத்தால் ஊனி எழ வேண்டும் அல்லது விரல்களின் பின் முட்டியின் உதவி கொண்டு எழலாம். வீட்டிற்கு செல்லும் வரை உங்களுடைய உள்ளங்கையை எங்கும் வைக்கக்கூடாது. அப்போதுதான் வேண்டிய பலன் முழுமையாக உங்களுக்கு கிடைக்குமாம்.

இக்காரணங்களால் தான் உள்ளங்கையால் அன்னம் பரிமாறப்பட்டது. உள்ளங்கையால் ஒருவருக்கு சாப்பாடு போ டு ம் பொழுது அவர் நமக்கு து ரோகம் இழைத்து, தீங்கு செய்தாலும் அது அவருக்கே திரும்பும். ஒருவர் தலை மீது வீணாக உள்ளங்கை வைத்து சத்தியம் செய்யக் கூடாது என்று கூறியதும் இதனால் தான். பலிபீடத்தை தவிர எந்த ஒரு இடத்திலும் உள்ளங்கையை பூமியில் வைக்கக் கூடாது. பலிபீடத்தில் வைக்கும் பொழுது நம்முடைய கர்மங்கள் அனைத்தும் நீங்கும். இப்படி அவர்கள் செய்த ஒவ்வொரு விஷயத்திற்கும் பின்னாலும், ஒவ்வொரு காரணங்களும் இருந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ளவே வியப்பாகத்தான் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *