ஜென்ம நட்சத்திர வழிப்பாட்டில் இப்படி செய்தால் போதும்! உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்குமாம் !!

ஆன்மீகம்

ஜென்ம நட்சத்திர வழிப்பாட்டில் …..

ஒரு குழந்தை பிறக்கும் பொழுது அது தான் அந்த குழந்தையின் ஜென்ம நட்சத்திரமாக ஜோதிடம் கணிக்கப்படுகிறது. அந்த குழந்தை தன் வாழ்நாளில் எப்படி இருக்க போகிறது? என்பதை தீர்மானிப்பது ஜென்ம நட்சத்திரம் ஆகும் என்கிறது ஜோதிடம். இத்தகைய ஜென்ம நட்சத்திர நாளில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? என்று நம் முன்னோர்கள் கூறி சென்றுள்ளனர்.

அதைப்பற்றி இப்பதிவில் தெரிந்துகொள்வோம்….,
முதலில் நீங்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்தை முதலில் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.அதன் பின்னர் மாதம் தோறும் வரும் அந்த நட்சத்திர நாட்களில் இறைவழிபாடு கட்டாயம் செய்யுங்கள். உங்கள் ஜன்ம நட்சத்திரம் நல்ல நட்சத்திரமாக இருக்கும் பொழுது உங்களுடைய வாழ்க்கையே உயரத்திற்கு செல்லும். அன்றைய நாளில் தவறாமல் கொஞ்ச நேரம் செலவிட்டு கோவிலுக்கு சென்று உங்கள் ஜென்ம நட்சத்திரத்தை கூறி ஒரு அர்ச்சனை செய்து விட்டு வரவும். இப்படி தொடர்ந்து செய்யும் பொழுது உங்களுக்கு நட்சத்திர பலம் கூடும்.

இதனால் வாழ்க்கையில் இருக்கும் தடைகள் அகலும். அடுத்ததாக, ஒருவர் தன் ஜென்ம நட்சத்திரத்தை வழிபாடு செய்தால் கட்டாயம் இறைவன் அருள் கிடைத்தே தீர வேண்டும் என்பது நியதி. அதனால் தான் பிறந்த நாள் மற்றும் நல்ல நாட்களில் ஜென்ம நட்சத்திரம், ராசி, பெயரை சொல்லி அர்ச்சனை செய்து வருகிறார்கள். ஆனால் இப்போது ஆங்கில திகதிப்படி உங்களுடைய பிறந்த நாளை கொண்டாடும் பொழுது அதில் எந்த ஒரு பிரயோஜனமும் இருப்பது இல்லை. தமிழ் மாதத்தின் படி உங்களுடைய பிறந்த ஜன்ம நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்து இறை வழிபாடு செய்து பிறந்தநாள் கொண்டாடுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் வருவதை எவராலும் தடுக்க முடியாது. மேலும், ஜென்ம நட்சத்திரம் வரும் பொழுது கோவிலுக்கு செல்வது, விளக்கு ஏற்றி வழிபடுவது, சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் ஆகியவற்றை ஏற்பது ஆகிய உங்களால் முடிந்த ஏதாவது ஒன்றை செய்வதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம். உங்கள் தகுதிக்கு ஏற்ப அன்றைய நாளில் அன்னதானம் செய்தால் எவராலும் வெல்ல முடியாத உயரத்திற்கு நிச்சயம் செல்வீர்கள். படிப்படியாக வாழ்க்கையில் இருந்த அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து நல்லதொரு முன்னேற்றப் பாதை உங்கள் கண்களுக்கு தெரியும்.

யாராவது ஒருவருக்கு உணவு பொட்டலம் வாங்கி கொடுத்தால் கூட போதும் புண்ணியம் இரட்டிப்பாக சேரும். இதைத்தொடர்ந்து, உங்கள் ஜென்ம நட்சத்திரம் அன்று இருக்கும் திதியானதற்கு எந்த தெய்வம் அதிதேவதை என்பதை தெரிந்து கொண்டு அவர்களை வழிபட்டால் இன்னும் சிறப்பான பலன்களை பெற முடியும். உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய அதி தேவதைகளை வணங்கும் பொழுது எவ்வளவு துன்பங்கள் இருந்தாலும், பிரச்சனைகள் இருந்தாலும் அவை எல்லாம் நீங்க பெரும். உதாரணத்திற்கு உங்கள் ஜென்ம நட்சத்திரம் பரணி என்றால் பரணிக்குரிய அதிதேவதை துர்க்கை அம்மன் ஆவார்.

நீங்கள் துர்கையை வழிபட தீராத கஷ்டங்கள் தீரும். ஜென்ம நட்சத்திர நாளில் எண்ணெய் ஸ்நானம் செய்வது, அறுவை சிகிச்சை செய்து கொள்வது, மருந்து எடுத்துக் கொள்வது, காது குத்துவது, தாம்பத்தியம் கொள்வது, முடி இறங்குவது, சீமந்தம் செய்வது, திருமணம் செய்வது ஆகிய நல்ல காரியங்களை செய்யக்கூடாது. இதற்கு மாறாக குலதெய்வ வழிபாடு செய்வது, இறை வழிபாடு செய்வது, தான, தர்மம் செய்வது, அன்னதானம் போ டு வது, பதவிகளை ஏற்பது, புதிய சொத்துக்கள் வாங்குவது போன்ற செயல்களை செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *