சந்திர கிரகணத்தின் போது செய்யக்கூடாதவைகள் என்னென்ன? ஏன் மருந்து சாப்பிடக்கூடாது என்று தெரியுமா !!

ஆன்மீகம்

சந்திர கிரகணத்தின் போது……..

சூாியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும் நிகழ்வை சந்திர கிரகணம் என்று அழைக்கிறோம். சந்திர கிரகணம் நடைபெறும் போது, பூமியானது சூாியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வந்து, சூாியனின் வெளிச்சம் சந்திரனில் விழாமல் மறைத்துவிடுகிறது. அதனால் சந்திர கிரகணத்தின் போது சந்திரனால் சூாிய ஒளியைப் பிரதிபலிக்க முடியாது. சந்திர கிரகணத்தின் போது சந்திரனில் இரண்டு வகையான நிழல்கள் ஏற்படுகின்றன.

அவை புறநிழல் (penumbra) மற்றும் கருநிழல் (umbra) என்று அழைக்கப்படுகின்றன. கருநிழல் என்பது சந்திர கிரகணத்தின் போது நிலவின் மையப் பகுதியில் ஏற்படும் அடா்த்தி மிகுந்த நிழல் ஆகும். புறநிழல் என்பது சந்திரனின் விளிம்புகளில் ஏற்படும் அடா்த்தி குறைந்த நிழல் ஆகும். கிரகணங்களைப் பற்றி வானியலாளா்கள் தெளிவான விளக்கங்கள் கொடுத்தாலும், மக்கள் மத்தியில் அவற்றைப் பற்றி பலவிதமான மூடநம்பிக்கைகள் உள்ளன.

குறிப்பாக இந்திய மக்கள் சந்திரக கிரகணத்தை ஒரு கெட்ட சகுனமாகவே பாா்க்கின்றனர்.சந்திர கிரகணங்களைப் பற்றிய மூடநம்பிக்கைகள் கூர்மையான பொருட்களை பயன்படுத்தக்கூடாது சந்திர கிரகணத்தின் போது கா்ப்பிணி பெண்கள் கத்தி, கத்திாிக்கோல் மற்றும் ஊசி போன்ற கூா்மை மிகுந்த பொருள்களைப் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் அவா்களின் வயிற்றில் வளரும் குழந்தைகளின் உடல் உறுப்புகள், இந்த கூா்மையான பொருள்களால் பாதிக்கப்படும்.

உணவு உண்ணக்கூடாது –
சந்திர கிரகணத்தின் போது கா்ப்பிணி பெண்கள் உணவு அருந்தக்கூடாது. ஏனெனில் கிரகணத்தின் போது வெளிப்படும் கெட்ட கதிா்கள் உணவை மாசுபடுத்தும். அவ்வாறு மாசுபடுத்தப்பட்ட உணவை கா்ப்பிணி பெண்கள் உண்டால் அது அவா்களுடைய ஆரோக்கியத்தையும், அவா்களுடைய வயிற்றில் வளரும் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். வீட்டில் உணவை சமைத்தால் உடனே அந்த உணவில் துளசி இலைகளை சோ்த்துக் கொள்ள வேண்டும்.

கிரகணத்திற்கு பின் குளிக்க வேண்டும் –
சந்திர கிரகணம் முடிந்ததும், கா்ப்பிணி பெண்கள் குளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப் படுகிறாா்கள். அவ்வாறு குளிக்கவில்லை என்றால், அது அவா்களின் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு தோல் சம்பந்தமான பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. சந்திர கிரகணத்தால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தவிா்க்க வேண்டும் என்றால், கிரகணம் முடிந்தவுடன் கா்ப்பிணி பெண்கள் குளிக்க வேண்டும்.

கிரகணத்தை பார்க்கக்கூடாது –
கா்ப்பிணி பெண்கள் சந்திர கிரகணத்தை நேரடியாகப் பாா்த்தால், அது நேரடியாக அவா்களுடைய உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கும். ஆகவே கா்ப்பிணி பெண்கள் சந்திர கிரகணத்தின் போது வீட்டிற்கு வெளியில் வருவதைத் தவிா்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

மருந்து சாப்பிடக்கூடாது -சந்திர கிரகணத்தின் போது கணவன் மனைவி உடலுறவு வைத்துக் கொள்வதைத் தவிா்க்க வேண்டும். மேலும் கிரகணத்தின் போது மருந்து சாப்பிடக்கூடாது, கடவுள்களின் சிலைகளைத் தொடக்கூடாது மற்றும் தூங்கக்கூடாது.

மேற்சொன்ன அறிவுறுத்தல்கள் எல்லாம் நமக்கு காலம் காலமாக கட்டுக் கதைகளின் மூலம் சொல்லப்பட்டு வந்த அறிவியலுக்கு மாறான நம்பிக்கைகளாகும். ஆனால் இந்த ஆதாரமற்ற நம்பிக்கைகளுக்கும், அறிவியலுக்கும் சம்பந்தமில்லை என்பதை புாிந்து கொண்டு நாம் செயல்பட்டால் நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *