சனி வக்ரபெயர்ச்சி ஆரம்பம்… இந்த 5 ராசியினர்கள் செய்ய வேண்டியவை என்னென்ன தெரியுமா !!

ஆன்மீகம்

சனி வக்ரபெயர்ச்சி ஆரம்பம்…..

ஒவ்வொரு நாளும் கிரகங்களின் நிலை மாறும். இப்படி தினமும் மாறும் கிரகங்களின் சஞ்சாரங்களால் ஒவ்வொரு ராசிக்காரரின் பலனும் அன்றாடம் மாறுபடும். தினசரி ராசிப்பலன்கள் மூலம் நீங்கள் எந்த மாதிரியான சவால்களை எதிர்கொள்வீர்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும். சனி வக்ர பெயர்ச்சியின் போது சனி பகவான் தற்போது சனி சஞ்சரித்து வரும் மகர ராசியிலேயே பின்னோக்கி நகர்கிறார். இதனால் சில ராசிகள் சற்று மோசமான பலனைப் பெறுவார்கள். எந்த ராசியினர் கவனமாக இருக்க வேண்டும் என்பதை விரிவாக பார்ப்போம்.

மேஷம்
மேஷ ராசியினர் சனி பகவானின் பகை கிரகங்களில் ஒன்று செவ்வாய் பகவான். இந்த சனி வக்ர பெயர்ச்சியின் போது அதிக சிரமங்களை எதிர்கொள்ளப்போகும் ராசிகளில் மேஷ ராசியும் ஒன்று. இந்த காலத்தில் குடும்பத்தில் சில அமைதியின்மை ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்கள் சங்கடங்கள் தரும் சில செயல்களில் ஈடுபடுவர். முடிந்த வரை அனுசரித்து செல்வது நல்லது. மேலும், உங்களின் வருமானம் நீங்கள் நினைத்ததை விட அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதே சமயம் உங்களின் செலவும் அதிகமாக இருக்கும். அதனால் தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது அவசியம்.
பரிகாரம் -ஒவ்வொரு சனிக்கிழமையும் அனுமன் சாலிசாவை படிப்பது நல்லது.

கன்னி
கன்னி ராசியினருக்கு பல வகையில் நன்மை தரக்கூடியதாக இருந்தாலும், சில விஷயங்களில் சனியின் வக்ர கதியால் ஏற்படக்கூடிய மோசமான விளைவுகள் மன வருத்தத்தைத் தரக்கூடியதாக இருக்கும். இந்த காலத்தில் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியம் சிறிது பாதிக்கப்படலாம். பொருளாதார விஷயங்களில், இந்த காலகட்டம் உங்களுக்கு சற்று தொந்தரவு தரக்கூடியதாக இருக்கும். ஆரோக்கிய குறைபாடு உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். கீரைகள், பழச்சாறு என நல்ல ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வது நல்லது.. பரிகாரம் -மகாலட்சுமி ஸ்தோத்திரத்தைப் படிப்பதால் அற்புத பலனைப் பெற்றிடலாம்.

துலாம்
சனி வக்ர கதியால் சில விஷயங்களில் துலாம் ராசியினர் சிக்கலை சந்திக்க நேரிடும். திருமண முயற்சிகளில் காலதாமதம் ஆக வாய்ப்புள்ளது. திருமண உறவில் இருக்கும் நபர்கள் தங்கள் துணையுடன் நெருக்கத்தையும், அன்பையும் அதிகரிக்க முடிந்த வரை அதிக நேரத்தை செலவிடுவது நல்லது. இந்த காலத்தில் உங்களின் கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். மூத்தவர்களை மதித்து நடப்பது நல்லது. நீங்கள் எந்த துறையில் வேலைப் பார்த்தாலும் சில கடுமையான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். உங்களின் மூத்த அதிகாரிகள், உயர் அதிகாரிகளை மதித்து செயல்படுவது நல்லது.

விருச்சிகம்
செவ்வாய் கிரகம் ஆளக்கூடிய மற்றொரு ராசி விருச்சிக ராசி. இந்த சனி வக்ர கதி காலத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. இந்த காலத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் தேவையற்ற சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்க்க அமைதியாக இருப்பதும், விட்டுக் கொடுத்து செல்வதும் அவசியம். மற்றவர்களை தூக்கி எறிந்து பேசுவதால் பிரச்சனை தான் அதிகரிக்கும். பொருளாதார நிலை சற்று கடினமானதாக இருக்கும். தேவையற்ற வீண் செலவுகள் அதிகரிக்கும் என்பதால், செலவுகளை கட்டுப்படுத்தி, பணத்தை சேமிக்க முயல்வது நல்லது. உடல் நல குறைபாடு ஏற்பட்டால், எந்த ஒரு தாமதமுமின்றி மருத்துவ அணுகி ஆலோசனைப் பெறுவது நல்லது. மருத்துவ ஆலோசனையின்றி மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டாம்.
பரிகாரம் -சனிக்கிழமை தோறும் அனுமன் வழிபாடு செய்து வருவது நல்லது.

தனுசு
தனுசு ராசிக்கு ஏழரை சனியின் இறுதி பகுதியில் இருக்கிறீர்கள். ஏற்கனவே சனியால் பிரச்சினையில் இருக்கும் தனுசு ராசியினர் எந்த ஒரு பெரிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. புதிய தொழில் தொடங்குவது, முதலீடுகள் செய்வதைத் தவிர்ப்பது மிகவும் அவசியம். இதனால் தேவையற்ற நிதி இழப்பை தவிர்க்கலாம். ராசிக்கு தன ஸ்தானமான 2ம் இடத்தில் சனி வக்ர நிலையில் உள்ளதால் பணத்தை சரியான திட்டமிட்டு செலவு செய்வது அவசியம். தேவையற்ற வீண் செலவுகளை தவிர்த்துச் சேமிப்பது அவசியம். உடல் நலம் குறித்த கவனக்குறைவாக இருக்க வேண்டாம். பேச்சு, செயலில் கவனமாக இருக்க வேண்டியது நல்லது. பரிகாரம் -உங்கள் குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு கயிரைக் கட்டிக் கொள்வது நல்லது. ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து வருவது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *