த ரித்திரம் உங்களை குறி வைத்து விட்டதா..? சிக்கலில் இருந்து தப்பிக்க பசு உதவும்! ஒருமுறையாவது இப்படி பண்ணுங்க…

ஆன்மீகம்

 பசு என்பது மாட்டின் பெண்ணினத்திற்கு வழங்கும் பொதுவான பெயர் ஆகும். பசுவினுடைய பால்  பல சத்துக்கள் நிறைந்ததுள்ள காரணத்தினால் மனிதன்  அதனை ஒரு முக்கிய உணவாகக் கொண்டுள்ளான். இந்திய கலாச்சாரத்தில் பசு போற்றப்படும் ஒரு விலங்காக உள்ளது.  புராணங்களின்படி காமதேவனும் நந்தினியும் தேவலோகப் பசுக்கள் ஆகும். பசு நம் தாய்க்கு ஒப்பானது. தன்னை வருத்தி தம் குழந்தையை ஒரு தாய் காப்பது போல பசு தமது கன்றுக்காக கொடுக்க வேண்டியது பாலை நமக்கு அளித்து நம்மை காப்பாற்றும் ஒரு சாதுவான ஜீவன்..!

இந்துக்கள் பசு மாட்டைத் தெய்வமாக மதித்து வழிபடுகின்றனர். பெண்கள் பசு மாட்டிற்கு பூஜை செய்வது உண்டு. பசுவின் சிறு நீர் கோமயம் என்று அழைக்கப்படுகிறது. இது நல்ல கிருமி நாசினி என்றும் இதனை வீட்டில் தெளித்தால் வீட்டில் உள்ள கிருமிகள் இறந்து போகும் என்றும் நம்புகின்றனர். 

பசுவின் சாணத்தைக் கொண்டு வீட்டின் தரையை மெழுகுவார்கள். பசுஞ்சாணமும் நல்ல கிருமி நாசினி ஆகும். பசு மாட்டின் சாணம், சிறுநீர் போன்றவற்றைக் கலந்து தயாரிக்கப் படும் பஞ்ச கவ்யம் பயிர்களுக்கு சிறந்த உரமாக ஆகிறது.

ஈறேழு பதினான்கு உலகங்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும் பசுவின் உடலில் வாசம் செய்கின்றனர் என்று புராணம் கூறுகிறது. எனவே நம்மால் இயன்ற வரையில் பசுவிற்கு நாம் பாதுகாப்பு செய்ய வேண்டியது அவசியமாகும்.

பசுவிற்கு அருகம்புல், அகத்திக்கீரை, வாழைப்பழம், அரிசி கலந்த வெல்லம் இவற்றில் ஏதாவது ஒன்றை பசுவின் வாய் அளவாவது கொடுக்க வேண்டியது அவசியமாகும்.

பயன்கள்

01-அருகம்புல் – அருகம்புல் கொடுத்தால் பயம் அலலும். 02-அகத்திக்கீரை – அகத்திக்கீரை கொடுத்தால் சரிவர பிதுர்கடன் செய்யாத தோஷங்கள் அகலும். 03-வாழைப்பழம் அல்லது அரிசி கலந்த வெல்லம் – வாழைப்பழம் அல்லது அரிசி கலந்த வெல்லம் கொடுத்தால் நம்மை பிடித்த தரித்திரம் நீங்கி லஷ்மி கடாஷம் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *