நீங்க பிறந்த கிழமை இதுவா? பிறப்பின் நாள் கூறும் பலன்கள் என்னென்ன தெரியுமா !! இந்த கிழமையில் பிறந்தவர்களுக்கு !!

ஆன்மீகம்

பிறப்பின் கிழமை நாள் பலன்கள் …..

நவக்கிரகங்கள் ஒவ்வொரு ராசிக்கும் இடம் பெயரும் போது ஒவ்வொரு ராசிக்கும் வெவ்வேறு விதமான பலன்கள் ஏற்படும். ஒவ்வொரு நாளும் கிரகங்களின் நிலை மாறும். இப்படி தினமும் மாறும் கிரகங்களின் சஞ்சாரங்களால் ஒவ்வொரு ராசிக்காரரின் பலனும் அன்றாடம் மாறுபடும். தினசரி ராசிப்பலன்கள் மூலம் நீங்கள் எந்த மாதிரியான சவால்களை எதிர்கொள்வீர்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

உங்கள் வாழ்க்கை ஏற்பட போகும் அனைத்து வகையான கேள்விகளுக்குமான விடை இங்கு கிடைக்கும். அந்த வகையில், இன்று நீங்கள் சந்திக்கவிருக்கும் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் என்னவென்று உங்களுக்குத் தெரியாவிட்டால் ஒருவரின் பிறந்த கிழமையை வைத்து அவர்களுக்கான பலன்கள் என்னவென்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

திங்கள் – திங்கள் கிழமையில் பிறந்தவர்கள் செல்வாக்கு, பேரும் புகழும் பெற்று, அனைவராலும் மதிக்கத்தக்கப்படி வாழ்க்கையை வாழ்வார்கள். இவர்கள் மாலை நேரங்களில் செய்கின்ற முயற்சிகளில் அனைத்தும் வெற்றி கிடைக்கும். செவ்வாய் – செவ்வாய் கிழமையில் பிறந்தவர்கள் தனது கடுமையான உழைப்பினால் முன்னேற்றம் அடைந்து குறிப்பிட்ட இலக்கை அடைவார்கள். இவர்கள் உழைப்பால் உயர்ந்த உத்தமர் என்று அனைவராலும் போற்றப்படுவார்கள்.

புதன் – புதன் கிழமையில் பிறந்தவர்கள் ஏதேனும் ஒரு துறையில் சிறப்பான கலைஞராகத் திகழ்வார்கள். இவர்கள் கல்வி, கேள்வி, ஞானம், பட்டப் படிப்பு ஆகியவற்றில் உயர்ந்த பதவியை அடைவார்கள். வியாழன் – வியாழன் கிழமையில் பிறந்தவர்கள் மற்றவருக்குப் போதிக்கக் கூடிய தகுதி பெறுவார்கள். இவர்கள் மற்றவருக்கு உதவி செய்து தியாக வாழ்க்கையை மேற்கொள்பவராக அடையப் பெறுவர்கள்.

வெள்ளி – வெள்ளிக் கிழமையில் பிறந்தவர்கள் சடங்கு, சம்பிரதாயங்களில் பூர்ண நம்பிக்கை கொண்டவராக இருப்பார்கள். அனைவராலும் போற்றுகின்ற வகையில் ஆன்மீகப் பணியில் அதிக ஈடுபாடு உள்ளவராகவும் திகழ்வார்கள். சனி – சனிக் கிழமையில் பிறந்தவர்கள் அதிகமாக சமயோசித புத்தி பெற்று சிறந்த தந்திரசாலித் தன்மை கொண்டவராக இருப்பார்கள்.

ஞாயிறு – ஞாயிற்றுக் கிழமையில் பிறந்தவர்கள் செல்வச் செழிப்பு விருத்தியுடன், செல்வாக்கு விருத்தியும் பெற்று வாழ்வார்கள். அவர்கள் தனது வயதில் 40-45 வயதிற்கு மேல் மிகுந்த பேரும் புகழும் பெற்று மிகவும் சந்தோஷமான வாழ்க்கை அடைவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *