எந்த ராசிகளுக்கு எல்லாம் அதிர்ஷ்ட பலன்கள் தெரியுமா !! சனி வக்ர பெயர்ச்சி 2021 : இந்த 4 ராசியையும் ஆட்டிப்படைப்பார் !!

ஆன்மீகம்

எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்கள் ……

சனி பகவான் என்றதும் நம்மில் பலருக்கு ஒரு வித பயம் ஏற்படும். சனி பெயர்ச்சி என்றதும் நமக்கு எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்று பார்ப்பதுண்டு. தற்போது நடக்க உள்ள சனி வக்ர பெயர்ச்சியும் எப்படிப்பட்ட பலன் தரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. சனி வக்ர பெயர்ச்சி மே 23ம் தேதி முதல் அக்டோபர் 11ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் மிதுன ராசி வரை எப்படிப்பட்ட பலன் தரும் என்பதைப் விரிவாக பார்ப்போம்.

​மிதுனம்
அனைவரையும் அனுசரித்து, அரவணைத்துச் செல்லவும். மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முயலுங்கள். அஷ்டம சனி நடந்து கொண்டிருக்கின்ற நிலையில், இந்த வக்ர சனி பெயர்ச்சியால் பல்வேறு வகையில் நற்பலனை அனுபவிக்க உள்ளீர்கள். சிலருக்கு உத்தியோகத்திலும், தொழிலும் இருந்த தடைகள், பிரச்சினைகள் நீங்கி நல்ல முன்னேற்றமும், பலரால் பாராட்டு பெறக்கூடிய சூழலும் உருவாகும். மூத்த சகோதரர், லாப ஸ்தானத்தைப் பார்ப்பதால் மூத்த நபர்களிடமிருந்து நல்ல ஆலோசனையும், ஆதரவும் பெறலாம். அதே போல நீங்கள் விரும்பிய லாபம் பெற்றிடலாம். இருப்பினும் சாலை பயணங்களில் மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம். தம்பதியிடையே அன்பும் அதிகரித்தாலும், தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்துக் கொள்வது அவசியம்.

துலாம்
துலாம் ராசிக்கு 6ம் இடமான ரண, ருண, சத்ரு ஸ்தானம் எனும் நோய், எதிரி ஸ்தானத்தைப் பார்க்கிறார். நோய், நொடிகள் குறைந்து மருத்துவ செலவுகள் குறையும். இதன் காரணமாக இதுவரை நீங்கள் கஷ்டப்பட்டு வந்த நாட்பட்ட நோயிலிருந்து விடுபடுவீர்கள். தடைகள், எதிரிகள் நீங்கி உங்களுக்கு நல்ல லாபம் தரக்கூடியதாக இருக்கும். சனி பகவானின் 7ம் பார்வை உங்கள் ராசிக்கு 10ம் இடத்தைப் பார்க்கிறார். தொழில், வியாபாரத்தில் இருந்த பிரச்னைகள், நீங்கி சிறப்பான லாபம் பெற்று, வீடு, மனை, சொத்துக்கள் சேர்க்கக்கூடிய அளவிற்கு நிதி நிலை மேம்பட வாய்ப்புள்ளது. சனியின் 10ம் பார்வை பலனாக திருமணத்தடை, சுப காரிய தடை உள்ளவர்களுக்கு அந்த தடை நீங்கி சிறப்பான பலன் பெற்றிடலாம்.

மகரம்
ஜென்ம சனி நடந்து கொண்டிருக்கும் மகர ராசிக்கு இந்த சனி வக்ர பெயர்ச்சியால் நற்பலன்கள் அதிகமாக பெறலாம். நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் உங்களுக்கு நல்ல இடமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. வேலை வாய்ப்புக்காகக் காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. பணியில் இருந்த கடுமையும், பணிச்சுமையும் சற்று குறைய வாய்ப்புள்ளது.
மொத்தத்தில் வேலையிடத்தில் இருக்கும் பிரச்னைகள் குறையும். தொழில், வியாபாரத்தில் இருக்கின்ற தொழில் போட்டிகள் குறையும். லாபங்கள் அதிகரிக்கும்.

அதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் – மனைவி இடையே இருக்கும் அன்பு அதிகரிக்கும். அரசியலில் உங்களுக்கான சிறப்பான காலமாக இருக்கும். போட்டி, விளையாட்டில் வெற்றி அடையக்கூடியதாக இருக்கும். கலைத்துறையில் இருப்பவர்கள் புகழ் அடைவார்கள். ஏற்றுமதி, இறக்குமதி வேலை, நிலம் சார்ந்த வேலை செய்பவர்களுக்கு மிக சிறப்பான பலனைப் பெற்றிடலாம். உங்கள் குடும்பத்தில் பிரச்னைகள் தீர்ந்து மகிழ்ச்சி ஏற்படும். குழந்தைப் பேறு கிடைக்க வாய்ப்புள்ளது.

மீனம்
நல்ல முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக இந்த சனி வக்ர பெயர்ச்சி மீன ராசிக்கு அமையும். ஆயுள், கர்ம காரகன் என அழைக்கப்படக்கூடிய சனி தன் பயணத்தில் செய்யக்கூடிய இந்த மாற்றம் உங்களின் தொழில், வியாபாரத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இருப்பினும் உங்களின் கடினமான சூழலிலும் நஷ்டம் ஏற்படாத நிலை இருக்கும். கடன் தொல்லை நீங்கும். உங்களின் எதிரிகள் நீங்கி நிம்மதியாக செயல்படுவீர்கள். உங்களின் நிதி நிலை சற்று கூடுதலாக வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்களுக்கு ஊதியம் அதிகரிக்கலாம். வேலை வாய்ப்பு கிடைக்கும். மனக்குழப்பம் நீங்கும். இந்த சமயத்தில் உங்களின் பெயருக்கு களங்கம் ஏற்பட வாய்ப்புள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *