தரித்திரம் வீட்டில் ஏற்படுவதற்கு .. இந்த திசையில் மாட்டியிருக்கும் கடிகாரம் தான் காரணமாம் !! இப்படியொரு ஒரு காரணமா !!

ஆன்மீகம்

இப்படியொரு ஒரு காரணமா…….

முன்னைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் வீட்டில் கடிகாரத்தை மாட்டி வைக்க வில்லை. அவர்களுடைய முன்னேற்றம் தடைபடாமல் இருந்ததற்கு வீட்டில் கடிகாரம் இல்லாததும் ஒரு காரணம் என்று கூறலாம். ஏனெனில் அவர்கள் வானத்தை பார்த்து, வானத்திலுள்ள சூரியனைப் பார்த்து தான் நேரத்தை கணித்தார்கள். அப்படி எனின் நம்முடைய முன்னேற்றம் தடைபடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும். எல்லோருடைய வீடுகளிலும் கடிகாரம் இருக்கும் அல்லவா. அநேக நேரங்களில் நாம் நேரத்தை பார்ப்பதற்கு மட்டும் தான் இதைபயன்படுத்துகின்றோம்.

ஆனால் கடிகாரம் என்பது வெறும் நேரத்தை மட்டும் பார்ப்பதற்கு பயன்படும் பொருள் அல்ல . அது குறிப்பாக நம் எல்லோருடைய வாழ்க்கையிலும் செல்வாக்கு செலுத்துகிறது என்றே கூறலாம். அப்படிஎன்றால் நமதுவீட்டில் எந்ததிசையில் வைத்தால் வீட்டில் வறுமை நீங்கும். குறிப்பாக அது எந்ததிசையில் இருக்க வேண்டும், எந்த வடிவத்தில் வைக்கவேண்டும், இப்படிப்பட்ட பல குழப்பங்களுக்கான பதிலை இப்பதிவின் ஊடக அறிந்துகொள்ளலாம்.

அதாவது நமது வாழ்க்கையில் நம்முடைய நேரத்தை நல்ல நேரமாக மாற்றுவதற்கும் இந்த கடிகாரம் நமது வாழ்வில் முக்கிய இடத்தை வகிக்கிறது ஆனால் இது பலருக்கு புரிவதில்லை. அதிகமாக நமது வீடுகளில் வரக்கூடிய ஒவ்வொரு கஷ்டத்திற்கும் காரணம் எமது வீடுகளில் நாம் மாட்டியிருக்கும் கடிகாரத்தின் திசையும் ஒரு காரணமாகஅமைகிறது . நமது வீடுகளில் எந்த திசையில் கடிகாரம் பொறுத்த வேண்டும் என்பதில் அவதானமாக இருக்க வேண்டும்.

கடிகாரம் மாட்ட வேண்டிய திசை
வடக்கு திசை –குறிப்பாக வடக்கு திசை சுவற்றில் மாட்டப்படும் கடிகாரம் வட்ட வடிவில் இருப்பது நமக்கு இன்னும் அதிகப்படியான பலனைப் பெற்றுத் தரும். முதலில் உங்களுடைய வீட்டில் கடிகாரம் இருக்க வேண்டிய திசை வடக்கு திசை. வடக்கு பக்கம் உள்ள சுவற்றில் உங்களுடைய கடிகாரத்தை மாட்ட வேண்டும். அந்த கடிகாரம் தெற்கு பார்த்த வாறு இருக்க வேண்டும். இப்படி செய்தால் உங்களுடைய வீட்டில் பண கஷ்டம் வராது. பொருளாதார சூழ்நிலை உயர்ந்து கொண்டே இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. வீட்டில் நோ ய்நொடிகள் இல்லாமல் இருக்க வேண்டும்.

கிழக்கு திசை –குடும்பத் தலைவனின் ஆரோக்கியத்தில் குறைபாடு இருந்தால் உங்களுடைய வீட்டில் கிழக்கு பக்கம் உள்ள சுவற்றில் கடிகாரத்தை மாற்ற வேண்டும். அப்போது கடிகாரம் மேற்கே பார்த்தவாறு இருக்கும். கிழக்குப்பக்கம் நீங்கள் மாட்டும் கடிகாரம், பிரவுன் கலர் அதாவது மரச்சாமான்களின் வண்ணத்தில் இருந்தால் மிகவும் நல்லது. எனவே கிழக்கு பக்கம் மாட்டும் கடிகாரத்தை வட்ட வடிவில் அல்லது சதுர வடிவில் மாற்றிக் கொள்ளலாம்.

சத்தம் எழுப்பும் கடிகாரம் –சிலபேரது வீட்டில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை ச த் தம் எழுப்பும் கடிகாரம் இருக்கும் அல்லவா? அந்த கடிகாரம் இருந்தால் அதை கிழக்குப்பக்கம் மாட்டி வையுங்கள். உங்களுடை ய வீட்டில் செல்வ செழிப்பு மேலும் அதிகரிக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. உங்களால் கிழக்கு பக்கம் உள்ள சுவற்றிலும் கடிகாரத்தை மாட்ட முடியவில்லை. வடக்குப் பக்கம் உள்ள சுவற்றிலும் கடிகாரத்தை மாற்ற முடியவில்லை, என்றால்

மேற்கு திசை –மேற்கு சுவற்றில் கடிகாரத்தை மாட்டி வைத்துக் கொள்ளலாம். நம்முடைய வீட்டில், நேரம் பார்ப்பதற்காக அடிக்கடி பார்க்கக்கூடிய பொருள் கடிகாரம். இந்த கடிகார கண்ணாடியில் நிச்சயம் விரிசலும் அல்லது உடைந்து இருக்கவே கூடாது. அப்படி இருந்தால் எதிர்மறை ஆற்றல் நமக்கு உண்டாகிவிடும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

மாட்டக்கூடாத திசை –எக்காரணத்தைக் கொண்டும் தெற்குப் பக்கத்தில் மட்டும் கடிகாரத்தை மாட்டக்கூடாது. இதற்கு என்ன காரணம்? கடிகாரத்தில் எப்போதுமே முள் ஓடிக்கொண்டே இருக்கும். ஓடிக்கொண்டே இருக்கும் போது அதில் ஒரு விதமான ச த் தம் எழும். பொதுவாக அது நம்முடைய காதுகளுக்குக் கேட்காது. சில சமயங்களில் அமைதியாக இருக்கும் சூழ்நிலையில் நமக்கு அந்த ச த்தம் கேட்கும் அல்லவா? தெற்கு என்பது எ ம த ர் ம ராஜாவுக்கும், நம்முடைய முன்னோர்களுக்கும் சொந்தமான திசை. ஆகவே அவர்களை தொந்தரவு கொடுக்கும் அளவிற்கு ச த் தம் எழுப்பும் இந்த கடிகாரத்தை அந்த இடத்தில் மாற்றக் கூடாது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

மெதுவாக ஓட விடக்கூடாது-நம்முடைய கால நேரத்தை குறித்து, நமக்கு வரக்கூடிய நல்லது கெ ட் டதை நிர்ணயிக்கும் சக்தியும் இந்த கடிகாரத்திற்கு உண்டு. ஆகவே, இந்த கடிகாரத்தை எக்காரணத்தைக் கொண்டும் மெதுவாக ஓட விடக்கூடாது. அதாவது கடிகாரம் எப்போதும் சரியான நேரத்தில் தான் இருக்க வேண்டும். 5 நிமிடங்கள் அதிகமாக வைத்துக் கொள்ளலாமே தவிர ஒரு நிமிடம் கூட நம்முடைய கடிகாரம் பின்னோக்கி ஓடக் கூடாது. என்பதையும் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்.

ஓடாத கடிகாரம் –ஓடாத கடிகாரத்தை சுவற்றில் மாட்டி வைக்காதீர்கள். உங்களுடைய வீட்டில் நிறைய கடிகாரம் இருக்கின்றது என்பதானால் ஆங்காங்கே எல்லா இடங்களிலும் கடிகாரத்தை மாட்டி வைக்க கூடாது. வாசலுக்கு வெளியில் கடிகாரம்-குறிப்பாக நில வாசலுக்கு வெளியில் கடிகாரம் இருக்கவே கூடாது. சிலபேர் பால்கனியில் எல்லாம் கடிகாரம் மாட்டி வைத்திருப்பார்கள். அது மிகவும் தவறு. ஒரு கடிகாரத்திற்கு வாஸ்துப்படி எத்தனை விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன எனவே சரியான இடத்தில் நீங்கள் உங்கள் கடிகாரத்தை மாட்டினால் நன்மைகள் பல உங்களை தேடி வருமாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *