மிதுன ராசியில் சஞ்சரம் செய்யும் செவ்வாய் புதன் சுக்கிரன் – எந்தெந்த ராசிக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகிறது தெரியுமா !!

ஆன்மீகம்

எந்தெந்த ராசிக்கு அதிர்ஷ்டம் ……

மேஷம் = கிரக சஞ்சாரத்தால் சில ராசிகளுக்கு, இந்த கஷ்ட காலத்தில் அவர்களுக்கு ஒரு நிம்மதி அளிக்கும் வகையில் மிகவும் அதிர்ஷ்ட பலன்களைப் பெறலாம். இதனால், மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்கும் மேஷ ராசிக்குரிய அதிபதி செவ்வாய், அவருடன் புதன் மற்றும் சுக்கிரன் இணைகின்றன. மேலும், உங்களுக்கு சுறுசுறுப்பு, தைரியம் அதிகரிக்கும். நீங்கள் செய்யக்கூடிய வேலைகளை சுறுசுறுப்பாக செய்து எளிதில் வெற்றியை எட்டுவீர்கள். இளைய சகோதரர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். மூன்றாவது வீட்டில் செவ்வாய் கிரகம் இருப்பதால், இந்த நேரத்தில் மூத்த அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்வது அவசியம்.

மிதுனம் = மிதுன ராசியில் இந்த மூன்று கிரக சேர்க்கை நடைபெறுவதால் பல வகையில் நற்பலன்களைப் பெற்றிடலாம். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். உங்களின் செயல்பாட்டால் எதிரிகளை வெல்ல முடியும். கல்வியில் மேல்நிலை அடைவார்கள். மாணவர்களுக்குச் சிறப்பான காலமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் சிலருக்கு சில பெரிய சாதனைகள் கிடைக்கக்கூடும்.

சிம்மம் = சிம்ம ராசிக்கு 11ம் வீட்டில் செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்களின் சஞ்சாரம் நிகழ்கிறது. வீட்டில் தடைப்பட்ட சுப காரியங்கள் நடைபெறும். வெளிநாடு தொடர்பான தொழில், செயல்களில் நன்மையும், மேம்பாடு அடைவீர்கள். வீடு மற்றும் அலுவலகத்தில் மூத்தவர்கள், மூத்த அதிகாரிகளிடம் மரியாதையாகப் பழகுங்கள். மூத்த உடன் பிறப்புகளைப் பிரிந்து செல்லும் நிலை ஏற்படலாம். அழகு சாதன பொருட்களுக்காக அதிக செலவு செய்வீர்கள்.எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி இருங்கள்.

மீனம் = மீன ராசிக்கு 4ம் வீட்டில் நடக்கும் கிரக சேர்க்கையால் உங்கள் வாழ்வில் வசந்தம் கொண்டு வரும். புதிய வண்டி, வாகனம், வீடு வாங்கும் முயற்சியில் இருப்பவர்களுக்குக் கைகூடும்.குடும்ப வாழ்வில் சமநிலை, மகிழ்ச்சி சிறப்பாக இருக்கும். தாயின் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் ஏற்படலாம். தொழில் முயற்சிகள் வெற்றியைத் தரும். புதிய நபர்களின் அறிமுகத்தால் சமூக வட்டம் அதிகரிக்கும். இதனால் உங்களின் பணிகளில் வெற்றியும், வேகமும் உண்டாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *