மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் திசையால்.. ஏற்படும் பலன்கள் என்ன !!

ஆன்மீகம்

செவ்வாய் திசையால் பலன்கள்

மீன லக்னத்தின் அதிபதி குருபகவான் ஆவார். இவர்கள் மிகுந்த அன்பும் கனிவும் கொண்டவர்கள். இவர்கள் தங்கள் கணவன் அல்லது மனைவியிடம், மிகுந்த ஈடுபாடு கொண்டு காதல் கொள்வார்கள்.
இவர்கள் சரளமாக பேசும் திறன் படைத்தவர்கள். எதையாவது பேசி கொண்டே இருப்பார்கள். இவர்கள் படித்த விவேகியாக இருப்பார்கள். இவர்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் வரவுக்கு மீறிய செலவுகள் இருந்து கொண்டேயிருக்கும்.

தனக்கு துரோகம் செய்தவர்களையும் மன்னிக்க கூடிய இயல்பு உடையவர். இவர்கள் கவிதை, இலக்கியங்களில், மிகுந்த விருப்பமுடையவர். ஆனால் இவர்களால் ரகசியங்களை காக்க முடியாது. குருபகவானுடன் செவ்வாய் நட்பு என்ற நிலையில் இருந்து திசை நடத்தினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பற்றி இங்கே காண்போம்….

நிர்வாகத்திறமை அதிகரிக்கும். பொருளாதார நிலை மேம்படும். உத்தியோகத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். வாக்குறுதிகளால் கீர்த்தி உண்டாகும் பொதுநலத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்ப நபர்களிடம் செல்வாக்கு மேம்படும். மேலும், குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை உண்டாகும். மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழல் உண்டாகும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும்.

பரிகாரம் – ஜாதகத்தில் செவ்வாய் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் செவ்வாய்க்கிழமைதோறும், செவ்வாய் ஓரையில் முருகனை வழிபட்டு வர மேன்மை உண்டாகும். மேலும், ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும் பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *