அநாதரவாக அட்டைப்பெட்டியில் வைத்து விடப்பட்ட குழந்தை!! 32 வருடங்களுக்குப் பின் கிடைத்த இன்பஅதிர்ச்சி எப்படி தெரியுமா !!

வைரல்

அநாதரவாக அட்டைப்பெட்டியில் ……..

உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு.
நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட வினோதங்களும் வித்தியாசங்களும் நாளுக்குநாள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறியப்பட்டு வருகின்றன.

பிரித்தானிய மருத்துவமனை ஊழியர்கள் நடுங்கவைக்கும் குளிரில் முன் அட்டைப்பெட்டி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குழந்தை ஒன்றைக் கண்டார்கள். பிரித்தானிய மருத்துவமனை ஊழியர்களான
Daphne, Susan மற்றும் Gill என்ற மூன்று பேரும் Chesterfield இல் உள்ள அந்த மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் ஆவார். இந்த மூன்று பேரும் அந்த குழந்தையை தங்கள் பொறுப்பில் எடுத்து கருத்தாய் கவனித்துக்கொண்டார்கள்.

அந்த நேரத்தில் ஒரு குழந்தை பிறந்து சில மணி நேரமே ஆன நிலையில் அநாதரவாக விடப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொண்ட ஒரு தம்பதியர், ஓடோடி வந்து அதை தங்கள் குழந்தையாக தத்தெடுத்துக்கொண்டார்கள். அவர்களது அன்பில் திக்குமுக்காடி வளர்ந்ததால் வேறு யாரையும் அதிகம் தேடவேண்டிய ஒரு சூழல் Helen Knox என்ற அந்த குழந்தைக்கு வரவில்லை என்றாலும், தற்போது 32 வயதாகும் நிலையில், தன்னுடைய இ ர த்த சம்பந்தமான உறவினர்கள் யாராவது இருக்கிறார்களா என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது அவருக்கு.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் உதவியுடன் DNA சோதனை மூலம் ஆராய்ந்தபோது, Helenக்கு ஒரு அக்கா இருப்பது தெரியவந்தது. இதில் சோகம் என்னவென்றால், Jess என்ற அந்த பெண்ணும், 14 மாதக் குழந்தையாக ரோட்டோரம் விடப்பட்டிருந்தார் என தெரியவந்ததுதான். சோகத்திலும் ஒரு சுகம் என்பார்கள், அதுபோல, இருவருமே கைவிடப்பட்டவர்கள் என்பதால் அவர்கள் இருவராலும் ஒருவரது உணர்வுகளை மற்றவரால் நன்றாக புரிந்துகொள்ளமுடிகிறது. சமீபத்தில், கொரோனா பரிசோதனைகளுக்குப் பின், பாதுகாப்பான ஒரு மருத்துவமனையில் சகோதரிகள் இருவரும் சந்தித்துக்கொண்டார்கள்.

இத்தனை வருடங்களாக தனக்கு உறவென்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை என்று எண்ணிக்கொண்டிருந்த நிலையில், தனக்கு ஒரு சகோதரி இருக்கிறாள் என்ற மகிழ்ச்சியும், இத்தனை வருடங்கள் சந்திக்காமல் இருந்துவிட்டோமே என்ற ஆதங்கமும் ஒன்றுடன் ஒன்று போட்டிபோ ட, உணர்ச்சி மிகுதியால் இருவரும் கண்களில் நீர் துளிர்க்க ஒருவரையொருவர் கட்டியணைத்து க்கொள்ளும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அக்கா தங்கையின் கண்களிலிருந்து வரும் கண்ணீரே அவ்வளவு உணர்வுகளையும் கொட்டிவிடுகிறது. இது ஒரு நாள் நிகழ்வல்ல, இனி எங்கள் வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கக்கூடியது என்று நினைக்கும்போது உள்ளம் துள்ளுகிறது என்கிறார் Helen.

சகோதரிகளின் குடும்பங்கள் சந்தித்துக்கொண்ட நிலையில், பின்னர், Helenஐ கவனித்துக்கொண்ட அந்த செவிலியர்களையும் சகோதரிகள் சந்தித்துள்ளார்கள்.இதற்கிடையில், சகோதரிகளின் தாயையும் அந்த தொலைக்காட்சி குழு கண்டுபிடித்துவிட்டது. ஆனால், அந்த பெண் தன் பிள்ளைகளை சந்திக்கும் மன நிலையில் இருப்பாரா என்பது தெரியாததால், அவரை உடனே சென்று அணுகாமல் காத்திருக்கிறது தொலைக்காட்சிக் குழு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *