ராகு கேது தோஷம் நீங்க வேண்டுமா? பிரச்சினைகளிலிருந்து விடுபட செய்ய வேண்டிய எளிய பரிகாரம் இதோ !!

ஆன்மீகம்

பிரச்சினைகளிலிருந்து விடுபட …..

ஒருவரின் ஜாதகத்தில் ராகு கேது எனும் நிழல் கிரகங்களின் குறைபாடு இருப்பின் அதனால் பல தொந்தரவுகளை அந்த ஜாதகத்தை சேர்ந்தவர் அனுபவிப்பார்.அந்த பிரச்சினைகளிலிருந்து விடுபட செய்ய வேண்டிய எளிய ஜோதிட பரிகாரம் என்ன என்பதை பார்ப்போம்.ஒருவர் ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கான எளிய பரிகாரம் தான, தர்மம் தான். முடிந்தால் தேயிலை, தூபக் குச்சிகள், கருப்பு – வெள்ளை போர்வைகள் மற்றும் சீயக்காய் தானமாக வழங்கலாம்.

இல்லையெனில் வறியவருக்குத் தேநீர் வாங்கி தரலாம். போர்வைகள் வாங்கி தரலாம். மேலும் பார்வையற்ற மற்றும் தொழுநோயாளிகளுக்கும், உடல் குறைபாடு உள்ளவர்களுக்கு முடிந்தவரை உதவுங்கள்.ராகுவினால் ஏற்படும் பிரச்னைகள் நீங்கள் சனிக்கிழமைகளில் தானம் செய்யுங்கள். சனிக்கிழமைகளில் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நீங்கள் தரும் தான பொருட்களை வழங்கலாம். கேது பகவானின் அருளைப் பெற்றிட கருப்பு மற்றும் வெள்ளை ஆடைகள் அல்லது போர்வையை வறியவர்களுக்குத் தானமாக வழங்கிடவும்.

நெல்லிக்காய் ஊறுகாய், மாங்காய் ஊறுகாய், நெல்லிக்காய், எலுமிச்சை போன்றவற்றை நன்கொடையாக வழங்கலாம்.நாய்க்கு ரொட்டி துண்டுகளை சாப்பிட கொடுக்கலாம். கேது பகவான் மோசமான நிலையில் இருந்தால், செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் கேதுவுக்குரிய உணவு அல்லது பொருட்களை தானம் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *