கடக ராசியில் செவ்வாய் பெயர்ச்சி ஜூன் 2021 : இந்த 6 ராசியினரும் கவனமாக இருக்கவும்.. இல்லை பே ர ழிவு நிச்சயம் !!

ஆன்மீகம்

இந்த 6 ராசியினரும்…..

ஜூன் மாதத்தில் நிகழும் முக்கிய கிரக பெயர்ச்சிகளும் கடக ராசியில் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சியும் ஒன்று. ஒருவருக்கு வீரம், தலைமை, வலிமை ஆகியவற்றைத் தரக்கூடிய செவ்வாய் பகவான் ஜூன் 2ம் தேதி மிதுனத்திலிருந்து கடகத்தில் நுழையப்போகிறார். ஜூன் 2 முதல் ஜூலை 20ம் தேதி வரை கடத்தில் சஞ்சரிப்பார். மேஷம், விருச்சிக ராசிக்குரிய அதிபதி செவ்வாய் பகவான் பெயர்ச்சியால் எந்த ராசிகளுக்கெல்லாம் நற்பலன்கள் பெறலாம் என்பதைப் பார்ப்போம்.

ரிஷபம் : தாயின் ஆரோக்கியத்தை கவனித்துக்கொ ள்ளுங்கள் ராசிக்கு 3ம் இடத்தில் செவ்வாய் பெயர்ச்சி நடக்கிறது என்பதால் உங்கள் ராசிக்கு தைரியம், வலிமை அதிகரிக்கும். அலுவலக வேலையில் சற்று கவனமாக இருக்கும். அலுவலக அரசியலிலிருந்து விலகி இருங்கள். சமூகத்தில் நற்பெயர் கிடைக்கும். சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களால் மனம் புண்படலாம். முக்கிய முடிவுகள், ஒப்பந்தங்களைத் தள்ளி வைப்பது நல்லது. தாயின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.

மிதுனம் : பண பரிவர்த்தனையில் கவனமாக இருங்கள் ராசிக்கு 2ம் இடத்திற்கு செவ்வாய் செல்வதால் குடும்ப வாழ்க்கையில் சில சிக்கல்களை சந்திக்க வேண்டி இருக்கும். வீட்டின் மூத்தவர்களுடன் பொறுமையாக பேசுவதும், செயல்படுவதும் அவசியம். நிதி நிலை சிறப்பாக இருந்தாலும் உங்களின் பண பரிவர்த்தனையில் சில இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் கவனம் தேவை. பேச்சை கட்டுப்படுத்து செயலில் முன்னேற சரியான திட்டமிடுங்கள். தேவையற்ற செலவுகள் காரணமாக நிதி பற்றாக்குறை ஏற்படலாம். சமூகத்தில் உங்கள் எதிரிகள் வலுவாக கூடும் என்பதால் கவனம் தேவை.

விருச்சிகம் : முதலீடு செய்வதைத் தவிர்க்கவும் ராசிக்கு 9ம் இடமான பாக்கிய, தந்தை ஸ்தானத்தில் ராசி நாதன் செவ்வாய் சஞ்சாரம் நிகழ்வதால், உங்கள் தந்தையுடன் சில மன ஸ்தாபம் ஏற்படலாம். திருமண வாழ்வில் கருத்து வேறுபாடு, தவறான புரிதல் காரணமாக பிரச்னை ஏற்படலாம். வாகனம் ஓட்டும்போது சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம். பணியிடத்தில் கவனமாக வேலை செய்வது அவசியம். சரியான நேரத்தி உங்கள் பணியை முடிக்க முயலவும். பெரியளவிலான முதலீடுகளை செய்ய வேண்டாம். கடின உழைப்பு மற்றும் முயற்சிகளுக்குப் பிறகும், நீங்கள் நினைத்த வேலை செய்து முடிக்காமல் போகலாம்.

​தனுசு : நிதி விஷயங்களில் கவனம் தேவை உங்கள் ராசிக்கு 8ம் இடமான ஆயுள், துஸ் ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் யாராக இருந்தாலும், அதற்குரிய மரியாதையை கொடுப்பது அவசியம். வேலைக்கும் உரித்தான் மரியாதை கொடுக்கவும். செலவுகள் மற்றும் நிதி தேவைகளில் கவனம் வேண்டும். இந்த காலத்தில் முதலீடுகள் செய்வதைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைப்பது குறையும். காதல் வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உங்கள் பேச்சு, நடத்தையில் கவனம் தேவை.

​மகரம்: அதிர்ஷ்டம் குறைவாக இருக்கும் உங்கள் ராசிக்கு 7ம் இடமான மனைவி, தொழில், கூட்டாளி ஸ்தானத்தில் செவ்வாய் நகர்வதல், உங்கள் ராசிக்கான அதிர்ஷ்டங்கள் குறைய வாய்ப்புள்ளது. உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்க தாமதமாகலாம். உங்கள் தொழில், வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவு குறைவாக இருக்கும். அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டுமே பணத்தை செலவழிப்பது நல்லது. யாரிடமிருந்தும் கடன் வாங்கவோ, கொடுக்கவோ வேண்டாம். திருமணமானவர்கள் துணையுடன் மனக்கசப்பு ஏற்படலாம்.

மீனம்: முக்கியமான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும் உங்கள் ராசிக்கு ஐந்தாவது வீட்டில் செவ்வாய் கிரகத்தின் சஞ்சாரம் நிகழ்வதால் மாணவர்கள் தங்கள் கல்வியில் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் வீண் விவாதம், பிரச்னை வேண்டாம். கோ ப த்தை குறைத்துக் கொண்டு வேலையில் கவனம் தேவை. வண்டி வாகனங்கள் இயக்கும் போது கவனம் தேவை. தேவையற்ற நிதி இழப்பு ஏற்படலாம். காதல், திருமண உறவில் தேவையற்ற வீண் விவாதங்கள் வேண்டாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *