புரட்டாசி மாதம் என்றதும் இந்து மக்கள் பலரும் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்து தங்கள் வசதிக்கேற்ப அக்கம்பக்கத்தினருக்கும், ஏழை எளியோருக்கும் அன்னதானம் செய்வது வழக்கம். அதிலும் பெருமாள் பக்தர்கள் இம்மாதம் முழுக்க அசைவத்தை தவிர்த்து விடுவார்கள். காரணம் பெருமாள் பிறந்தது இந்த புரட்டாசி மாதத்தின் திருவோண நட்சத்திர நாளில் தான். அதனாலே இம்மாதம் பெருமாளுக்குரிய மாதமாகிவிட்டது. திருப்பதி மலை எப்படி மனதில் நிற்கிறதோ அது போல திருப்பதி பெருமாள் சிலையும் நம் மனதில் ஆழமாக பதிந்திருக்கும். இக்கோவிலில் மூலவர் சிலை போலவே இன்னொரு சிலை இருக்கிறதாம்.

கி.பி. 614 ல் இச்சிலையை வெள்ளியால் செய்துவைத்தாராம் பல்லவ அரசி சமவை. இது குறித்து குறிப்பு மேல் திருப்பதியில் 8 ம் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளதாம். இதே பெருமாள் தான் சயன மண்டபத்தில் பட்டு மெத்தையோடு வெள்ளி ஊஞ்சலில் தூங்கி சுப்ரபாதம் கேட்டு கண்விழிக்கிறாராம்.
30 ஆயிரம் பவுன் தங்கத்தை காணிக்கையாக கொடுத்த பக்தர் குறித்த பல விடயங்கள் கீழே வீடியோவில்..