இந்த புதிய வழிகள் முடி உதிர்ந்த இடத்திலும் முடி வளர்ச்சியைத் தூண்டும் தெரியுமா?

மருத்துவம்

ஒருவருக்கு குறைவான அளவில் தலைமுடி உதிர்ந்தால், உதிர்ந்த முடி தானாகவே வளர்ந்துவிடும். ஆனால் கொத்து கொத்தாக முடி உதிர ஆரம்பித்தால், அது ஒரு தீவிரமான பி ர ச்சனையின் அறிகுறி. தலைமுடி உதிர்வதற்கு வயது ஒரு முக்கிய காரணம். உதாரணமாக, வயது அதிகரிக்கும் போது, தலை முடி உதிர்வால் வழுக்கை விழ ஆரம்பிக்கும். மேலும் மன அழுத்தம், புற்றுநோய் சிகிச்சைகளான ஹீமோதெரபி அல்லது ரேடியோதெரபி, எடை இ ழ ப்பு அல்லது இரும்புச்சத்து குறைபாடு போன்றவற்றாலும் முடி உதிரும். இருப்பினும் பெலும்பாலான தலைமுடி உதிர்தலானது

உங்க தலைமுடி எப்படின்னு சொல்லுங்க... உங்களுக்கு என்ன பிரச்னைன்னு நாங்க  சொல்றோம்... | Is Bad Hair Related to Bad Health? - Tamil BoldSky

தற்காலிகமானவை மற்றும் மீண்டும் வளரக்கூடியவை. ஆகவே தலைமுடி அதிகம் உதிர்ந்தால், உதிர்ந்த இடத்தில் முடியின் வளர்ச்சியைத் தூண்ட ஒருசில இயற்கை வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் வேகமாக முடியை வளரச் செய்யலாம். இப்போது உதிர்ந்த இடத்தில் முடியின் வளர்ச்சியைத் தூண்டிவிட செய்ய வேண்டியவைகள் என்னவென்று காண்போம்.

வெங்காய சாறு

முடி வளர்ச்சிக்கு உதவும் வெங்காய சாறு; எப்படி தெரியுமா...?

உங்களால் வெங்காயத்தின் நாற்றத்தை சமாளிக்க முடியும் என்றால், இந்த வழியை முயற்சிப்பது நிச்சயம் நல்ல பலனைத் தரும். வெங்காய சாறு கெராட்டின் வளர்ச்சி காரணியை மேம்படுத்தும் மற்றும் மயிர்கால்களில் இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, முடியின் வளர்ச்சியை மேம்படுத்தும். அதற்கு வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவி, குறைந்தது 15 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி, தலைமுடியை நீரில் அலச வேண்டும்.

கற்றாழை
கற்றாழையில் இவ்ளோ நன்மைகள் இருக்கா? கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள் - Lankasri  News

கற்றாழை ஜெல் முடியின் வளர்ச்சியை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி, ஸ்கால்ப்பை ஆற்றவும், கண்டிஷனராகவும் செயல்படும். அதோடு இது பொடுகு மற்றும் அதிகப்படியான எண்ணெயால் மயிர்கால்களில் ஏற்படும் அடைப்பைக் குறைக்க உதவும். அதற்கு கற்றாழை ஜெல்லை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் தடவி ஊற வைத்துக் குளிக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு சில முறை செய்து வந்தால், தலைமுடியின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தில் ஒரு நல்ல மாற்றம் தெரியும்.

ஆயில் மசாஜ்
நல்ல' எண்ணெய் - Tamil Beauty Tips

தலைக்கு வாரந்தோறும் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்வதால், முடியின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுவதாக நம்பப்படுகிறது. கூடுதலாக, ஸ்கால்ப்பில் மசாஜ் செய்வதால், மன அழுத்தம் மற்றும் டென்சன் நீங்கி, மனம் புத்துணர்ச்சியுடன் ரிலாக்ஸாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *