தீராத கஷ்டங்களையும் தீர்க்கும் விநாயகர் வழிபாடு !! எப்படி செய்யவேண்டும் தெரியுமா? திரும்பிப்பார்த்து தீர்த்து வைக்கும் வழிபாடு !!

ஆன்மீகம்

கஷ்டங்களை தீர்க்கும் விநாயகர் வழிபாடு …….

பொதுவாகவே, நாம் விநாயகருக்கு முன்பு தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்யும் வழக்கம் தான் நமக்குத் தெரியும். பிள்ளையார் கொட்டு மூன்று முறை கொட்டிக்கொண்டு, மூன்று தோப்புக்கரணம் போ ட் டுக்கொண்டு என்ன வரத்தினை கேட்டாலும் வாரி வழங்கும் குழந்தை குணம் கொண்டவர் விநாயகர். எந்த ஒரு நல்ல காரியத்தினை தொடங்குவதாக இருந்தாலும் அது தடைபடாமல் நடக்க வேண்டும் என்பதற்காக முதலில் விநாயகரை வழிபடுவது நம்முடைய வழக்கம். இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான்.

விக்னங்களை தீர்க்கும் இந்த விநாயகப் பெருமானை வழிபடுவதற்கு என்று ஒரு பிரத்யேக முறையும் உண்டு. அது என்ன என்பதைப் பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். எளிமையான முறையில், வெறும் அருகம்புல்லினை வைத்து, வேண்டிய வரங்களை விநாயகரிடம் இருந்து சுலபமாக பெற்று விடலாம். ஆடம்பரமாக தான் விநாயகப் பெருமானை வழிபட வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது.

விநாயகர் கோயிலுக்கு செல்லும் பட்சத்தில் விநாயகர் சன்னதிக்கு பின்பக்கத்தில் உள்ள இடத்திலும் ஒரு தீபம் ஏற்றி வைத்து வேண்டுதல் வைக்கும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். ஏனெனில்
சிலர் விநாயகர் சிலைக்கு பின் பக்கத்திலும் தீபமேற்றி வழிபாடு செய்யும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். பின்புறம் எரியும் தீப சுடரின் அனல், விநாயகரது மேல் பட்டு அவர் நம்முடைய கஷ்டத்தை திரும்பிப் பார்ப்பார் என்ற ஒரு வழிபாட்டு முறையினையும், நம் முன்னோர்கள் நமக்கு சொல்லி வைத்துள்ளார்கள்.

விநாயகர் சன்னதிக்கு பின் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் வேண்டுதல் உடனே பலிக்கும் என கூறப்பட்டுள்ளது. கோயிலுக்கு போகக்கூடிய சூழ்நிலை இல்லை. உங்களுடைய வீட்டிலும் விநாயகரது சிலையோ அல்லது விநாயகரின் திருவுருவ படம் இருந்தாலும், அதற்கு பின் புறமாக ஒரு மண் அகல் விளக்கு தீபமேற்றி, உங்களுடைய வேண்டுதலை வைத்துப் பாருங்கள் வேண்டுதல் கூடிய சீக்கிரம் நிறைவேறும்.

விநாயகருக்கு தேங்காய் எண்ணெய் மிகவும் உகந்ததாக சொல்லப்பட்டுள்ளது. ஒரு மண் அகல் விளக்கில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, திரி இட்டு, வீட்டிலேயும் தீபமேற்றி வினாயகரை வழிபாடு செய்யலாம். விநாயகருக்கு சூடு தெரியவேண்டும் என்பதற்காக, ரொம்பவும் நெருக்கமாக கொண்டு போய் விளக்கை வைத்து விடவேண்டாம். விநாயகருக்கு பின்பக்கத்தில் விநாயகரது படத்திற்கு கொஞ்சம் இடைவெளி விட்டு, தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் போதுமானது. முயற்சி செய்து பாருங்கள். நிச்சயமாக நல்ல பலனை பெறலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *