வீடுகளில் வீணாக்கும் அரிசியினால் தோஷம் ஏற்பட்டு வறுமை அதிகரிக்குமாம் !! செல்வ செழிப்பு உண்டாக அன்னபூரணியை இப்படி வழிபடுங்க !!

ஆன்மீகம்

செல்வம் பெருகி வளமுடன் வாழ வேண்டுமென்பது ஒவ்வொருவரின் கனவாக உள்ளது, ஆனால் அதற்கான சரியான முறைகளை பின் பற்ற தவறிவிடுவதால் அநேகருடைய வீடுகளில் வறுமையும் துன்பமும் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்கிறது அரிசி என்பது அன்னபூரணிக்கு இணையானது ஆகும். அரிசியை அன்னபூரணியாக நினைத்துப் போற்றி வழிபடுதல் வறுமையை நீக்கும். இது வீட்டில் செல்வ செழிப்பை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது. வறுமை இன்றி செல்வ செழிப்பு உண்டாக அன்னபூரணியை முதலில் மதித்து நடத்தல் வேண்டும். சாதத்தை எப்படி வீணாக்கினால் தோஷம் வந்து சேருமோ அதே போல் அரிசியையும் வீணாக்குவது அன்ன தோஷத்தை உண்டாக்கும்.

ஒருவருக்கு அன்ன தோஷம் ஏற்பட்டால் அடுத்தடுத்த சந்ததியினருக்கும் அந்த தோஷம் வறுமையை உண்டாக்கும். எனவே கூடுமானவரை அரிசியை வீணாக்காதீர்கள். மேலும் அரிசி பானைக்குள் பூச்சிகள், வண்டுகள் வராமல் இருக்க காய்ந்த வேப்பிலைகளை போ ட் டு வைப்பது உண்டு. அம்பாளை வணங்கும் விதமாக இப்படி செய்யப்பட்டு வந்துள்ளது.

எனவே அன்னபூரணி தாயை போற்றும் விதமாக ஒன்றிரண்டு காய்ந்த வேப்பிலைகளை போ ட் டு வையுங்கள். இப்படி வேப்பிலைகளை போ ட் டு வைத்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்கிற ஐதீகம் உண்டு. அரிசி அளக்கும் அளவையை விசேஷ, விழாக்களின் பொழுது நம் பூஜையில் வைத்து வழிபடுவது உண்டு.

அதே போல வெள்ளிக்கிழமை தோறும் ஆழாக்கில் அரிசியை அளந்து தலை தட்டாமல் பூஜை அறையில் வைத்து வழிபடுங்கள். அந்த அரிசியை மறுநாள் சாதம் வடித்த பயன்படுத்திக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதால் அன்னபூரணியின் மனம் குளிர்ந்து வறுமையை நீக்கி, செல்வச் செழிப்பை அதிகரிக்கச் செய்வாள்.

அரிசியை கைகளால் தொட்டு அளந்து போ ட க்கூடாது. அரிசி அளக்கும் அளவையில் சரியாக அளந்து போ டு வது குடும்பத்திற்கு நல்லது. மேலும் வறுமை என்று உங்களிடம் யாராவது கேட்டால் உங்களால் பணமாக கொடுக்க முடியாவிட்டாலும், ஒரு படி அரிசியை அளந்து கொடுங்கள் புண்ணியம் பன்மடங்கு பெருகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *