இந்த இரண்டு தீபங்களை உங்கள் வீட்டில் ஏற்றினால் தீராத துயரங்கள், கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும் !! எந்தெந்த கிழமையில் ஏற்ற வேண்டும் தெரியுமா !!

ஆன்மீகம்

ஞாயிற்றுக்கிழமை அன்று காலை நேரத்திலேயே எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து, சரபேஸ்வரரை மனதார நினைத்து உங்களது விரதத்தை தொடங்குங்கள். உங்களுடைய இருள் சூழ்ந்த வாழ்க்கையில் பிரகாசமான ஒளி வீச வேண்டும் என்றால் சரபேஸ்வரர் வழிபாடு உங்களுக்கு துணையாக நிற்கும். சாப்பிடாமல் தான் விரதம் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. விரதம் என்பது அவரவர் உடல்நிலையை பொறுத்தது. உங்கள் விருப்பம் போல விரதத்தை மேற்கொள்ளலாம். கட்டாயமாக அசைவ உணவு சாப்பிடக்கூடாது. மற்றபடி உங்களுடைய வீடு சுத்தபத்தமாக இருக்க வேண்டும். இதை மட்டும் கவனித்துக்கொண்டால் போதும்.

நரசிம்மர், இரணியனை வதம் செய்த பின்பு அவருடைய கோ ப ம் தணியவில்லை. நரசிம்மருடைய கோ ப த்தை தனிய வைக்க வேண்டும் என்பதற்காக அந்த சிவபெருமான் எடுத்த அவதாரம் தான் இந்த சரபேஸ்வரர் அவதாரம். மாலை 6.00 மணிக்கு பிறகு, பூஜையை முடித்து விட்டு சாப்பிடாமல் விரதம் இருப்பவர்கள் உங்களுடைய விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்.

ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியிலிருந்து 6.00 மணி வரை ராகு கால நேரம். இந்த நேரத்தில் உங்கள் வீட்டு பூஜை அறையில் தனியாக இரண்டு மண் அகல் விளக்குகளை எடுத்து அதில் கொஞ்சமாக நெய் ஊற்றி, அல்லது நல்லெண்ணெயும் ஊற்றலாம். பஞ்சு திரி போ ட் டு தீபம் ஏற்றி சரபேஸ்வரரை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

சரபேஸ்வரரின் திருவுருவப்படம் நம்முடைய வீட்டில் கட்டாயமாக இருக்காது. அவரது நாமத்தை உச்சரித்து தீபத்தை ஏற்றி, உங்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் கரைந்து போக வேண்டும் என்று மனமுருகி வேண்டிக் கொண்டு பூஜை அறையிலேயே அமர்ந்து அந்த ராகு கால வேளையில் சரபேஸ்வரரின் நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருங்கள்.

சரபேஸ்வரரை வழிபடுபவர்களுக்கு மனம் உறுதி பெறும். தைரியம் அதிகரிக்கும். எப்படிப்பட்ட கஷ்டங்களையும் எதிர்கொள்ளும் துணிச்சல் வரும். அந்த துணிச்சலே உங்கள் துன்பத்தை போக்குவதற்கு ஒரு காரணமாக அமைந்துவிடும். சரபேஸ்வரரை நினைத்து தொடர்ந்து 5 ஞாயிற்றுக் கிழமைகள் இந்த தீபத்தை ஏற்றி வரும்பட்சத்தில் நல்ல பலனை உங்களால் அனுபவப்பூர்வமாக உணர முடியும். நம்பிக்கையுள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த தீபத்தை ஏற்றி சரபேஸ்வரரின் அருளை முழுமையாகப் பெற்று பலன் அடையலாம்.

தீர்க்கமுடியாத எதிரி தொல்லை, தீர்க்க முடியாத கோர்ட் கேஸ் வழக்குகள், தீர்க்க முடியாத சொத்து பிரச்சினைகள், தீர்க்க முடியாத பண கஷ்டம், கடன் கஷ்டம், உறவினர்களுக்குள் ச ண் டை சச்சரவு, இப்படி வாழ்க்கையில் இருக்கும் இன்னல்கள் அனைத்திற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரத்தில் இந்த இரண்டு தீபங்களை உங்கள் வீட்டு பூஜை அறையில் இப்படி ஏற்றினால் போதும். முழுமையாக பலன் அடையலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *