வீடுகளில் எந்த படத்தை வைக்க கூடாது !! மாதவிலக்கின் பொழுது பெண்கள் பூ வைக்கலாமா? ஆன்மீக ரகசியங்களும் காரணங்களும் !!

ஆன்மீகம்

வீடுகளில் பெண்கள் ………

நமக்கு தெரியாத சில ஆன்மீக ரகசியங்களும்! அதற்கான விடைகளும்! தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள். அதாவது நம் முன்னோர்கள் கூறி சென்ற ஒவ்வொரு விடயத்திற்கு பின்னாலும் நிச்சயம் ஏதாவது ஒரு காரணம் இருக்கும். பொதுவாக உக்ர தெய்வ படங்களை வீட்டில் வைக்கக் கூடாது என்பது நியதி. நம் ஆன்மீகத்தைப் பொறுத்தவரை நிறைய விஷயங்களுக்கு நமக்கு பதில் தெரியாமல் இருக்கும். ஆன்மீக ரீதியாக பெரியோர்கள் கூறிய சில விஷயங்களை தெரிந்து வைத்திருப்பது இறை பக்திக்கு கூடுதல் வலு சேர்க்கும்.

மகாலட்சுமி படம் ….
குறிப்பாக மகாலட்சுமி படம் அமர்ந்த நிலையில் இருப்பதை விட, நின்ற நிலையில் இருக்கும் பொழுது அதற்கு சக்திகள் அதிகம். இதனால் வேண்டிய வரங்களை விரைவாகவும் கொடுப்பார்களாம். பொதுவாக நாம் ஆரத்தி எடுக்கும் பொழுது குங்குமத்துடன், சுண்ணாம்பு கலப்பது உண்டு. தெய்வத்திற்கு எடுக்கும் ஆரத்தியில் இது போல் சுண்ணாம்பு கலக்கக்கூடாது. மனிதர்களுக்கு திருஷ்டி கழிக்க மட்டுமே சுண்ணாம்பு பயன்படுத்த வேண்டும் என்பதையும் அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். கிருஷ்ணன் பசுக்களோடு இருக்கும் படமும், ராதா, கிருஷ்ணன் படமும் வீட்டில் வைத்துக்கொள்ளலாம். ஆனால் சிவன் படம், பைரவர் உடைய படத்தைக் கூட வீட்டில் தனியாக வைக்கக்கூடாது என்று கூறுவது உண்டு. அது போல ஆனால் தனியாக புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் வீட்டில் வைக்கக் கூடாது. புல்லாங்குழல் ஊதும் விக்ரஹம், கேலண்டர் கூட மாட்டி வைக்க கூடாது.

பெண்கள் பூ வைப்பது ……..
பெண்கள் பூப்பெய்திய பிறகு ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கின் பொழுது தீட்டாக கருதப்படுகிறார்கள். தீட்டு சமயத்தில் தலையில் பூ வைப்பது கூடாது என்கிறது சாஸ்திரம். காத்து, கருப்பு போன்ற துர்சக்திகள் அண்டாமல் இருக்க இது போன்று கூறப்படுகிறது. மேலும் அறிவியல் ரீதியாக தலையில் பூ வைப்பதால் மாதவிலக்கின் போது தலை பாரம், தலைவலி போன்ற தொந்தரவுகள் ஏற்படும். எனவே மாத விலக்கின் பொழுது பூ வைப்பதை தவிர்ப்பது நல்லது. சிவனுக்கு உரிய ருத்ராட்சம் தெய்வீக சக்திகளை கொண்டுள்ளது. முறையாக அணிய முடியாதவர்கள் அதனை அணிந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது. ருத்ராட்சம் அணிந்திருந்தால் செய்யக்கூடியதும், செய்யக்கூடாததும் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ருத்ராட்சம் அணிந்து கொண்டிருப்பவர்கள் இறுதி சடங்கு நடக்கும் வீடுகளுக்கு அதனை கழற்றி வைத்து விட்டு தான் செல்ல வேண்டும்.

குத்துவிளக்கு வெள்ளிக்கிழமை….
வெள்ளிக்கிழமையில் குத்து விளக்கை துலக்கக் கூடாது. அதுபோல செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் பகல் நேரம் முழுவதும் குத்து விளக்கை துலக்கக் கூடாது. இரவில் வேண்டுமானாலும் துலக்கி கொள்ளலாம். மற்ற நாட்களில் எப்பொழுது வேண்டுமானாலும் குத்து விளக்கை துலக்கி வைக்கலாம். குங்குமத்தை நெற்றியில் வைக்கும் பொழுது வலது கை மோதிர விரலால் தான் வைக்க வேண்டும் என்பது நியதி. திருச்செந்தூர், திருப்பதி, திருத்தணி, பழநி போன்ற கோவில்களுக்கு நீங்கள் செல்வதாக இருந்தால் அங்கிருந்து நேராக வீட்டிற்கு தான் வர வேண்டும். வேறு எங்கும் சொல்லக்கூடாது. அப்படி சென்றால் இறைவனை தரிசனம் செய்த முழு பலன் கிடைக்காமல் போய்விடும். கோவிலில் தீபாரதனை நடக்கும் பொழுது கண்களை மூடி கொள்ளக்கூடாது. கோவிலுக்குள் செல்லும் பொழுது கால்களை கழுவிவிட்டு செல்வது நல்லது. கோவிலில் இருந்து வந்த பிறகு காலை கழுவுதல் கூடாது. புனித தீர்த்தங்களில் இறங்கும் பொழுது அவரிடம் அனுமதி கேட்கவே தலையில் தண்ணீர் தெளிக்கப்படுகிறது. அதன் பிறகு தான் கால்களை குளத்தில் வைக்க வேண்டும் என்பது நியதி.

தானம் செய்தல் …….
கோவிலுக்குள் செல்லும் பொழுது தானம் செய்த பலனுடன் செல்ல வேண்டும். எனவே கோவிலுக்கு வெளியில் தானம் கேட்பவர்களுக்கு கோவிலில் இருந்து வெளியில் வரும் பொழுது தானம் செய்யக் கூடாது. உள்ளே நுழையும் பொழுதே தானம் செய்து விட்டு தான் செல்ல வேண்டும், அப்போது தான் தானம் செய்த முழு பயன் கிடைக்கும். மனதில் தீராத குழப்பங்கள் இருக்கும் பொழுது, என்ன முடிவு எடுக்க வேண்டும்? என்று தெரியாத பொழுது தெய்வ சந்நிதியில் அமர்ந்து யோசனை செய்தால் நல்ல முடிவு சட்டென உங்களுக்கு பிறக்கும் அதிசயத்தை உணரலாம்.

கோவில்களில் அமர்ந்து…..
கோவில்களுக்குள் இருக்கும் நல்ல அதிர்வலைகள், தெய்வீக ஆற்றல்கள் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? என்பதை உணர்த்தும். எனவே இது போன்ற சமயங்களில் கோவில்களில் அமர்ந்து தீர்க்கமாக யோசியுங்கள், நல்ல வழி பிறக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நடக்கும் இடங்களில் எண்ணெய், எள் சம்பந்தப்பட்ட எந்தவொரு வார்த்தைகளையும் பிரயோகிக்க கூடாது. இந்த வார்த்தைகளை பயன்படுத்தினால் சுப காரியத்தில் சுபம் தடைபடும். கணவன் மனைவியிடம் அனாகரிக வார்த்தைகளை பயன்படுத்தினால் அவனுக்கு மோட்சம் கிடையாது. மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து இம்மையிலும், மறுமையிலும் துன்புற நேரிடும். வீட்டில் எந்த ஒரு தெய்வ படமும் நிற்கும் நிலையில் இருக்கும் பொழுது விரைவாக பலன்கள் கொடுக்கும். அமர்ந்திருக்கும் படங்கள் பலன்கள் கொடுக்க காலதாமதம் ஆகுமாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *