மரங்களுக்கு கீழே அமர்ந்து இருக்கும் கடவுளுக்கு ஏன் சக்தி அதிகம் தெரியுமா ? ஆ ச் ச ரியப்பட வைக்கும் காரணங்கள் என்னென்ன தெரியுமா !!

ஆன்மீகம்

மரங்களுக்கு கீழே அமர்ந்து இருக்கும் கடவுளுக்கு……

தற்போது மக்களிடையே கடவுள் பக்தியும், ஜோதிட நம்பிக்கையும் சற்று அதிகரித்துள்ளது. இதனால் தான் தற்போது பலர் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் ஜோதிடர்களை சந்தித்து, தங்களது ஜாதகங்களைக் கொடுத்து நல்ல காலமா என்பதைப் பார்க்கிறார்கள். மேலும், ஜோதிடர்கள் தங்களுக்கு சாதகமாக என்ன கூறினாலும் அதை செய்யவும் தயாராக உள்ளனர். இது சிலருக்கு பொருந்தும், சிலருக்கு பொருந்தாமலும் இருக்கும். எந்த விடயங்களையும் முழு நம்பிக்கையுடன் செய்தால் வெற்றி நிச்சயம்.

முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள் ஆகியோரின் வழிபாடும் தவம் பொதுவாக மரத்தை உடையனவாகவே காணப்பட்டுள்ளன. சுதந்திரமாக இயற்கையில் அமர்ந்திருக்கும் கடவுள் எத்தகைய ஆற்றல்களையும் கிரகித்துக் கொள்ள முடியாதவை. கர்ப்ப கிரகத்தில் அமர்ந்திருக்கும் கடவுள் மனிதனால் கொண்டு செல்லப்பட்டு வைக்கப்படுகின்றன. நாற்புறமும் அடைந்திருக்கும் கர்ப்ப கிரகத்தில் மனிதர்களுடைய எதிர்மறை ஆற்றல்களும், நேர்மறை ஆற்றல்களும் பிரதிபலிக்கின்றன. ஆகவே கர்ப்ப கிரகத்தில் இருக்கும் கடவுள்களை விட மரத்திற்கு அடியில் அமர்ந்து இருக்கும் கடவுளுக்கு சக்தி அதிகம்.

இதனால் தான் முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள் ஆகியோர் மரப்பொந்துகளில் தவம் இருந்து தெய்வத்தை வழிபாடு செய்தனர். மேலும் இறைவனிடம் மனிதன் ‘தா வரம்’ என்று கேட்டதற்கு கடவுள் தாவரத்தை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும் அதைப் பற்றிய தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். தாவரங்கள் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்கும் என்பதால் தான் வரத்திற்கு இணையாக தாவரத்தை கொடுத்து இறைவன் மனிதனை அதற்கு நடுவில் வாழ வைக்கிறான். மரங்களை அழிப்பது என்பது ஒருவருக்கு இறைவன் படைத்த படைப்பை அழிப்பதால் உண்டாகக்கூடிய சாபம் ஏற்படக்கூடும்.

வேறு வழியில்லாமல் மரத்தை அழிக்கும் தொழிலை செய்பவர்கள் அதற்கு மாற்றாக இன்னொரு மரத்தை நட்டு பரிகாரம் தேடிக் கொள்ளலாம். இதனால் உண்டாகும் சாபங்களில் இருந்து விமோசனம் பெற உதவும். மரத்தின் வேர் முதல் இலை, பூ, காய் வரை அத்தனையுமே அற்புத சக்திகளை கொடுக்கிறது. மரம் என்பது இயற்கை கொடுத்த கடவுளாகவே பாவிக்கப்படுவதால் மரத்திற்குக் கீழ் கடவுள்களை வைத்து நம் முன்னோர்கள் சாதுரியமாக வழிபட்டு வந்தனர். மரத்தையும், கடவுளையும் சேர்த்து வணங்கும் பொழுது நமக்கு அளவுக்கு அதிகமாக சக்தியும், ஆற்றலும், பக்தியும் உண்டாகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

ஒவ்வொரு மரத்திற்கு அடியிலும் ஒவ்வொரு இறைவனை வைத்து வழிபடுங்கள் என்று கூறிவிட்டு நம் முன்னோர்கள் சென்று விட்டனர். ஆனால் மரத்திற்கு அடியில் இருக்கும் இறைவனை வழிபடுவது என்பது எத்தகைய பலன்களை நமக்கு நல்கும் என்பது தெரியாமலேயே போய்விட்டது. அரச மரத்திற்கு அடியில் விநாயகரையும், வேப்ப மரத்திற்கு அடியில் அம்பாளையும் பிரதிஷ்டை செய்தனர் நம் முன்னோர்கள். அவர்கள் காட்டிய வழியில் நாம் நடந்தாலே நமக்கு எந்த ஒரு துன்பமும் அண்டுவதில்லை.

எப்பொழுது இயற்கையை மீறி பயணம் செய்கிறோமோ! அங்கு பிரச்சனையும் தலை தூக்க ஆரம்பிக்கிறது. மனிதன் சுவாசிக்க தேவைப்படும் பிராண வாயுவை உற்பத்தி செய்யும் மரம், நமக்கு ஒரு கடவுள் தான். எந்த ஒரு மரத்தையும் பேணி பாதுகாத்து வந்தால் நீங்கள் செய்த அத்துணை முன் ஜென்ம பாவங்களுக்கு விமோசனம் கிடைக்கும் என்பது சாஸ்திர நம்பிக்கை. வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்று கூறுகிறார்கள். ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் மரம் வளர்த்து அதனால் கிடைக்கக் கூடிய இயற்கையான நன்மைகளையும் அனுபவித்து நேர்மறை எண்ணங்களை அதிகரித்துக் கொண்ட நம் முன்னோர்களின் சாமர்த்தியத்தை என்னவென்று கூறுவது?

மரம் வளர்ப்பதில் காட்டும் ஆர்வத்தை அதிகரித்தால் உங்களுக்கும், உங்கள் வீட்டிற்கும், இந்த நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் கூட அள்ள அள்ள குறையாத நன்மைகள் உண்டாகும். மரத்தை வளர்த்து மரத்திற்கு அடியில் கடவுளையும் வைத்து வழிபடுவோம் அதன் மகத்துவத்தை அனுபவிப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *