குபேர அதிஷ்ட யோகத்தை பெறப்போகும் ஆறு ராசியினர் இவர்கள் தானாம் !! இந்த ராசியில் உங்களது ராசியும் இருக்கிறதா !!

ஆன்மீகம்

குபேர அதிஷ்ட யோகம் ……..

துலாம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே , 2021ஆம் ஆண்டு உங்களுடைய ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் நான்காம் வீட்டில் குரு, சனி, இரண்டாம் வீட்டில் கேது எட்டாம் வீட்டில் ராகு என முக்கிய கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே உங்களுடைய ராசிக்கு வீடு, மனை வாங்கும் போது ஒருமுறைக்கு இருமுறை யோசித்து வாங்கலாம். சுகங்கள் அதிகம் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவ செலவுகள் வரலாம். பேச்சில் நிதானம் தேவை.சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று வாருங்கள் சக்தி பீடங்களுக்கு சென்று அம்மனுக்கு விளக்கேற்றி வழிபடலாம்

விருச்சிகம்
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களே 2021ஆம் உங்களுடைய ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் மூன்றாம் வீட்டில் குரு, சனி, ராசிக்குள் கேது ஏழாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிப்பதால் நிறைய ஆன்மீக பயணம் செய்யலாம். மேலும், மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கோவில் கும்பாபிஷேம் உள்ளிட்ட தெய்வீக காரியங்களில் ஈடுபடுவீர்கள் பிரதோஷ காலங்களில் சிவபெருமானை சென்று வணங்குங்கள். அபிஷேகத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம்.

தனுசு
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, 2021ஆம் ஆண்டு உங்களுடைய ராசிக்கு இரண்டாம் வீட்டில் சனியும், குருவும் சஞ்சரிக்கின்றன. ராசிக்கு 12ஆம் வீட்டில் கேது, 6ஆம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சாரம் உள்ளதால் ஜென்ம குரு, ஜென்ம சனி விலகி விட்டது. திருமணம் சுபகாரியங்கள் நடைபெறும், புதிய வேலை கிடைக்கும். பண வருமானம் அமோகமாக இருக்கும். சிக்கனமாக செலவு செய்யவும். நேரத்திற்கு எந்த செயலையும் சரியாக செய்யவும். பிறக்கப் போகும் புத்தாண்டு உங்களுக்கு கோடீஸ்வர யோகத்தை கொடுக்கப் போகிறது. மாணவர்களுக்கு மகிழ்சிகரமான ஆண்டாகும், பெண்களுக்கு பெருமை சேர்க்கக் கூடிய ஆண்டாகவும் அமையும். விநாயகப்பெருமானை வழிபடவும்.

மகரம்
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே 2021ஆம் ஆண்டு உங்களுடைய ராசிக்குள் குருவும் சனியும் சஞ்சரிக்கின்றன. ராசிக்கு லாப ஸ்தானத்தில் கேதுவும் ஐந்தாம் வீட்டில் ராகுவும் சஞ்சரிக்கின்றன. இந்த புத்தாண்டில் உங்களுக்கு ஜென்ம ராசியில் கிரகங்கள் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ராசி அதிபதி ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் உங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். குரு, சனி பார்வையும் சாதகமாக உள்ளது. மன நிம்மதிக்காக நீங்கள் சனிபகவானை வணங்கி விளக்கேற்றுங்கள். அம்மன் கோவில்களில் பச்சரிசி தானம் செய்வது நல்லது.

கும்பம்
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்பம் ராசிக்காரர்களே 2021ஆம் ஆண்டு உங்களுடைய ராசிக்கு 12ஆம் வீட்டில் குருவும் சனியும் சஞ்சரிக்கின்றன. ராசிக்கு பத்தாம் வீட்டில் கேதுவும் நான்காம் வீட்டில் ராகுவும் சஞ்சரிக்கின்றன. விரைய ஸ்தானத்தில் கிரகங்கள் சஞ்சரிப்பதால் நிறைய வருமானமும் அதுபோல சுப விரைய செலவுகளும் ஏற்படும். வீடு, சொத்துக்கள் வாங்கலாம். வீட்டில் சுப காரியங்கள் அதிகம் நடைபெறும். நல்ல விசயங்களுக்கு பணத்தை செலவு செய்யலாம். சிவ ஆலயங்களுக்கு சனிக்கிழமை சென்று வழிபடலாம். ராமேஸ்வரம் சென்று தீர்த்தமாடி வில்வ அர்ச்சனை செய்வது நல்லது.

மீனம்
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே, 2021ஆம் ஆண்டு உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் குருவும் சனியும் சஞ்சரிக்கின்றன. ராசிக்கு ஒன்பதால் வீட்டில் கேதுவும், மூன்றாம் வீட்டில் ராகுவும் சஞ்சரிக்கின்றன. கொரோனா காலத்திலும் கோடீஸ்வரன் ஆகும் யோகம் உங்களுக்கு கை கூடி வந்துள்ளது. நவ கிரகங்களும் உங்களுடைய ராசிக்கு நிறைய நன்மைகள் நடைபெறும். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும் ஆயுள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குபேரனாகும் யோகம் வந்துள்ளதால் வியாழக்கிழமைகளில் லட்சுமி குபேர பூஜை செய்வது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *