சூரியா கிரகணம் 2021 : இந்த பிழையை மட்டும் செய்யாதீர்கள் !! யாருக்கெல்லாம் பே ரா பத்து தெரியுமா? இந்த 4 ராசிக்கும் ஜா க் கிரதை !!

ஆன்மீகம்

சூரியா கிரகணம் 2021 இந்த 4 ராசி……..

சூரியன் பூமிக்கு இடையே சந்திரன் ஒரே நேர் கோட்டில் வருவதால் சூரிய கிரகண நிகழ்வு ஏற்படுகிறது.இந்த சூரிய கிரகண நிகழ்வு 2021 ஜூன் 10ம் தேதி மதியம் 1 .42 மணி முதல் மாலை 6.41 மணி வரை என ஐந்து மணி நேரம் நீடிக்கும்.சூரிய கிரகணம் ஏற்படும் நேரத்தைப் பொருத்து அந்த நேரத்தில் எந்த நட்சத்திரம் நிகழ்கிறதோ, அந்த நட்சத்திரத்தோடு, அதற்கு முன் மற்றும் பின் உள்ள நட்சத்திரங்கள், கிரகணம் நிகழும் நட்சத்திரத்திற்கான அதிபதி ஆளக்கூடிய நட்சத்திரங்கள் சற்று கவனமாக இருப்பதும், பரிகாரம் செய்வதும் நல்லது.

பரிகாரம் செய்ய வேண்டிய ராசி, நட்சத்திரம்?
ரிஷப ராசியில் உள்ள மிருகசீரிடம் நட்சத்திரத்தில் நிகழ்வதால் ரிஷப ராசியில் உள்ள கார்த்திகை (பாதம் 2,3,4), ரோகிணி, மிருகசீரிஷம் நட்சத்திரம் என அனைவரும் பரிகாரம் செய்வது நல்லது.
மிருகசீரிடம் நட்சத்திரத்தை செவ்வாய் ஆள்கிறது. அதனால் செவ்வாய் ஆளக்கூடிய மற்ற ராசி, நட்சத்திரங்கள் பரிகாரம் செய்வது நல்லது. அதாவது செவ்வாய் ஆளக்கூடிய மேஷம் ராசி,
விருச்சிகம் ராசி மிருகசீரிஷம் – ரிஷபம் சித்திரை நட்சத்திர – கன்னி, துலாம் அவிட்டம் நட்சத்திரம் -மகரம், கும்பம்

​கிரகணத்தின் போது என்ன செய்ய வேண்டும் ?
கிரகண நேரத்தில் சாதாரண நேரங்களில் நாம் செய்யும் பூஜையை விட, இந்த நேரத்தில் அதிகமாக நற்பலன் கிடைக்கும் என்பதால் பூஜை, இறை நாமம் உச்சரிப்பது அவசியம். உங்களிடம் உள்ள வேதம், புராணங்களைப் படிக்கலாம். எதுவும் இல்லை என்றாலும் பரவாயில்லை,

‘ஓம் நமோ நாராயணா, ஓம் நமசிவாயா, ஓம் பிரம்மதேவாய நமஹ, ஜெய் ஸ்ரீ ராம், ராம ஜெயம்’ போன்ற எளிய மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தாலே போதுமானது. கிரகண நேரத்தில் நீங்கள் உணவு மற்றும் உணவு தயாரிக்கப் பயன்படும் தானியங்கள், அரிசி போன்றவற்றில் தர்ப்பை புல் அல்லது துளசி போட்டு வைப்பது நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் இறை நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பது நல்லது.

​கிரகணத்தின் போது செய்யக்கூடாதவை
கிரகண நேரத்தில் முடிந்த வரை உண்ணாமல், நீர் அருந்தாமல் விரதம் இருப்பது நல்லது.
வயதானவர்கள், குழந்தைகள் எளிதில் ஜீரணிக்கக்கூடிய பழ சாறு அருந்தலாம். கிரகண நேரத்தில் தூங்கக்கூடாது. வெளியில் வரக்கூடாது. வெறும் கண்களால் சூரிய கிரகணத்தை கண்டிப்பாகப் பார்க்கக் கூடாது. உடல் உறவு கூடவே கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *