இன்றைய காலங்களில் உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது பொழுது போக்காக இருப்பது சமூக வலைத்தளங்கள் என்று தான் சொல்லலாம். இதில் வைரல் ஆகும் விடியோக்கள் மக்கள் மத்தியில் கவனிக்கப்பட்டு வருகின்றது. தற்பொழுது டுவிட்டர், பேஸ்புக், யூ டியூப் மற்றும் சில ஆப்கள் மக்களின் பொழுதுபோக்காக இருந்தது. இந்நிலையில், நேற்று டுவிட்டரில் வீடியோ ஒன்று டிரண்டில் இருந்து வருகிறது. அதில், ஆற்றை கடக்கும் 50 அடி நீளம் கொண்ட அனகோண்டா பாம்பு ஒன்று என்று பதிவிட்டிருந்தனர். ஆற்றை கடக்கும் 50 அடி நீளம் அனகோண்டா பாம்பு ஒன்றின் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

அதாவது அனகோண்டாக்கள் என்று கூறும் பொழுது இவை தென் அமெரிக்க மித வெப்ப காடுகளில் காணப்படும் மிகப் பெரிய, நச்சுத்தன்மையற்ற போஅஸ் வகையைச் சேர்ந்த பாம்புகளாகும். இப்பெயர் சில பாம்புக் குடும்பங்களைக் உள்ளடக்கியதாக இருப்பினும், முக்கியமாக ஒரே ஒரு பாம்பை, அதாவது பச்சை அனகோண்டாவாகிய “யுனெக்டஸ் முரினஸ் என்பதனைக் குறித்தே பயன்படுத்தப்படுகிறது.

வலையுரு மலைப் பாம்பையும் சேர்த்து இது உலகிலேயே மிகப் பெரிய, நீளமான பாம்பாகும். ஆராய்ச்சிக் கூடங்களில் பிடித்தோ கொன்றோ அளக்கப்பட்ட அனகோண்டாக்களில் 30 அடி நீளம் வரை கண்டறியப்பட்டுள்ளது. இவை பெரும்பாலும் நீரிலேயே வாழ்கின்றன.

கூடுதலாக நீரிலேயே வாழும் இவை குறிப்பாக அமேசான் ஆறு போன்ற இடங்களில் காணப்படுகின்றன. இவை மனிதர்களைத் தாக்கியிருந்தாலும், அவர்களை இரையாகக் கொள்வதில்லை. இவை பொதுவாகமீன்கள் ஆற்றுக்கோழிகள் அரிதாக ஆற்றுக்கு அருகே வரும் ஆடுகள் குதிரைகளையே இரையாக உண்ணுகின்றன.

என்ன இருந்த போதும் பாம்பு எனும் போது படையும் நடுங்கும் என்று கூறுவார்கள். பாம்பை கண்டால் பயப்படாதவர்கள் இருக்க மாட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அப்படி இருக்கும் சிறிய பாம்பை கண்டாலே பயம் வரும் நமக்கு இங்கு வரும் காட்சியில் ஒரு பெரிய அனகோண்டா சாலையில் தேங்கியிருக்கும் நீரை கடந்து செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

அந்த வீடியோவை பார்க்கும் போது நமக்கும் சற்று பயத்தை உண்டு பண்ணும் வகையில் இந்த அனகோண்டா சாலையில் தேங்கி இருக்கும் நீரை கடந்து செல்லும் வீடியோ காணப்படுகிறது

இந்தோ அந்த வீடியோ காட்சி …
An anaconda measuring more than 50 feet found in the Xingu River, Brazil pic.twitter.com/FGDvyO76sn
— The Dark Side Of Nature (@Darksidevid) October 30, 2020