இவங்க எல்லோருக்குமே ஏழரையா இருக்கே… தப்பிப்பது எப்படி? குரு வக்ர பெயர்ச்சி: மகரத்திற்கு மீண்டும் திரும்பும் குரு !!

ஆன்மீகம்

குரு வக்ர பெயர்ச்சி …….

ஜூன் 20ம் தேதி (நாளை) வரை குரு தனது அதிசார பெயர்ச்சி முடித்து, மகரத்தில் மீண்டும் பழைய நிலையை அடைய வக்ர நிலை அடைகிறார். செப்டம்பர் 13ம் தேதி மகரத்திற்கு வந்தடைவார். குருவின் வக்ர பெயர்ச்சி நடக்கும் ஜூன் 20 முதல் செப்டம்பர் 13 வரையிலான காலத்தில் 5 ராசிகள் சற்று மோசமான பலன்களை அடைய நேரிடும். அவற்றை இங்கு பார்ப்போம்.

​மேஷம் = மேஷ ராசிக்கு லாப ஸ்தானமான 11ம் வீட்டிலிருந்து பிற்போக்குத் தன்மையுடன் குரு நகர்வதால், உங்கள் தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதிலும், புதிய தொழில் முயற்சிகளில் பின்னடைவு ஏற்படலாம். பெரியளவிலான நன்மைகள் பெறுவதில் சிரமங்களை சந்திக்க நேரிடும். முதலீடு செய்யும் போது மிகவும் கவனமாக இருக்கவும். கடன் கொடுப்பதும், வாங்குவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். வியாழக்கிழமை மஞ்சள் ஆடைகளை அணிவது நல்லது.

மிதுனம் = மிதுன ராசிக்கு 9ம் இடமான பாக்கிய, தந்தை ஸ்தானத்திலிருந்து பின்னோக்கி செல்வதால் எந்த ஒரு விஷயங்களிலும், மிகவும் கடினாக உழைத்த பின்னரே நல்ல பலன்களைப் பெற்றிட முடியும். ஆன்மிக விஷயங்களில் ஈடுபாடு குறையும். தந்தையுடன் உரையாடும்போது, உங்கள் சொற்களை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவது அவசியம். குடும்பத்தில் தேவையற்ற மனக்கசப்பைத் தவிர்க்கவும். ஆசிரியர்களை மதித்து நடப்பது நல்லது.

சிம்மம் = உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் அமைந்திருக்கும் குரு வக்ர இயக்கத்தின் காரணமாக உங்கள் மண வாழ்க்கையில் சில தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். உங்கள் மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வெளியுலக பிரச்னைகளை உங்கள் வாழ்க்கை துணையிடம் காட்ட வேண்டாம். சிந்தித்து பேசுவது நல்லது. நீங்கள் வியாழக்கிழமைகளில் மஞ்சள் பொருட்களை தானம் செய்யலாம்.

தனுசு = குரு வக்ர இயக்கத்தால் தனுசு ராசிக்கு சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். பேச்சு, செயலில் கவனமாக சிந்தித்து செயல்படவும். உங்களின் தைரியம், வீரம் குறையலாம். குடும்ப வாழ்க்கையில் சிறு சலசலப்பு ஏற்படலாம். இளைய சகோதரருடனான உறவு பாதிக்கப்படலாம். வாழ்க்கையில் நேர்மறைக்கு எண்ணத்துடன் செயல்படுவது நல்லது. தனுசு ராசி மக்கள் வியாழக்கிழமைகளில் வாழை மரத்தை வணங்க வேண்டும்.

மீனம் = மீன ராசிக்கு குருவின் வக்ர இயக்கம் நிகழ்வதால் நீங்கள் எடுக்கும் செயலில் தடைகள் ஏற்படலாம். கடின முயற்சிக்கு பின்னர் தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுடன் தேவையற்ற பிரச்னைகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆன்மிக விஷயங்களில் ஆர்வம் காட்டுவதால் மன அழுத்தத்தைக் குறைக்க முடியும். யோகா, தியானம் செய்து மன அமைதியை அதிகரித்துக்கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *