படுக்கையறையில் வாஸ்து முறைப்படி இதையெல்லாம் வைக்கவே கூடாதாம் !! தவறி வைத்தால் என்னாகும் தெரியுமா கட்டாயம் படியுங்கள் !!

ஆன்மீகம்

வாஸ்து முறைப்படி படுக்கையறையில் …….

படுக்கையறையை வாஸ்து முறைப்படி சரியாக வைத்துக்கொள்வதால், தூக்க்ம நிம்மதியாக வரும். படுக்கை அறையின் தென்மேற்கில் இருக்கவேண்டும். ஆனால், ஒரேயடியாக தென்மேற்கு மூலைக்குப் போய்விடக்கூடாது. படுக்கும்போது முகம் தெற்கு நோக்கி இருக்கும்படி உறங்கவேண்டும். அது நல்ல உறக்கத்திற்கும், நல்ல ஆரோக்கியத்திற்கும் வழி வகுக்கும். ஒருபோதும், முகம் வடக்கு நோக்கி இருக்கும்படி படுத்துறங்கவேண்டாம். ஏனென்றால் இறந்தவரின் உடலகளை வடக்கு நோக்கி வைப்பதுண்டு.

வடக்கு நோக்கி உறங்குவதால், மனநலம் பாதிப்படைவதோடு, ஆயுளும் குறையும். மேலும், படுக்கையறையில் வெளிச்சம் மிதமாகவும், கண்களை உறுத்தாமலும் இருக்கவேண்டும். எனவே விளக்குகளையோ, டேபிள் லேம்புகளையோ அமைக்கும்போது, அதிலிருந்து வரும் வெளிச்சமோ, நிழலோ மனதிற்கு இதமளிப்பதாக இருக்கவேண்டும். மாஸ்டர் பெட் ரூம், வீட்டின் தென்மேற்கு மூலையில் இருக்கும்படி அமைக்கவேண்டும். படுக்கையை உத்தரத்துக்குக் (பீம்) கீழ் வரும்படி போ டக்கூடாது.

ஒருவர் உத்திரத்துக்குக் கீழ் வரும்படி படுத்து உறங்கினால், ஆரோக்கியக்கேடு உண்டாகும். படுக்கையறையில் கடவுள் சிலைகளை வைக்கக்கூடாது. இயற்கைக்காட்சிகள், மலர்கள், குழந்தைகள், மற்றும், கோவில்கள் முதலான பெயிண்டிங்குகளை மாட்டி வைக்கலாம். வடகிழக்கு மூலையில் கட்டாயமாக, எடை அதிகமுள்ள சிலைகளை வைக்கக்கூடாது. படுக்கையறையில் மீன் தொட்டியை வைக்கக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *