உங்கள் வீடு தேடி செல்வம் வரவேண்டுமா ? தினமும் இரவில் வீட்டில் இந்த சாம்பிராணி பரிகாரத்தை செய்தாலே போதும் !!

ஆன்மீகம்

சாம்பிராணி பரிகாரத்தை செய்தாலே ………

அந்த காலங்களில் வீடுகளில் சாம்பிராணி புகை போடுவார்கள். அதனால் தேவையற்றவை தீமைகள் விலகி தேவையானவை தேடி வரும் என்பது ஐதீகமாக இருந்தது. அதே போல் நீங்களும் வீட்டில் வெள்ளி, செவ்வாய் மற்றும் முக்கிய நாட்களில் கலப்படமில்லாத சாம்பிராணியால் புகை போ ட் டு வாருங்கள். இது நாள் வரை உங்களை தொடர்ந்த துரதிர்ஷ்டம் விலகி விரய செலவுகள் கட்டுக்குள் வந்து வீட்டில் செல்வம் மென்மேலும் வளர வழிவகுக்கும். அந்த சாம்பிராணியை எதனுடன் கலந்து போ ட் டால் என்னென்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.

சாம்பிராணியில் தூபம் போ ட் டால் கண் திருஷ்டி, பொறாமை ஆகியவை நீங்கி முன்னேற்றம் கிடைக்கும். சாம்பிராணியில் அகில் போ ட் டு தூபமிட குழந்தைபேறு உண்டாகும். மேலும், சாம்பிராணியில் மருதாணி விதைகளை போ ட் டு தூபமிட சூனிய கோளாறுகள் விலகும். சாம்பிராணியில் தூதுவளையை போ ட் டு தூபமிட வீட்டில் தெய்வம் நிலைக்கும். சாம்பிராணியில் சந்தனத்தை போ ட் டு தூபம் போட லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

சாம்பிராணியில் அருகம்புல் பொடியை போ ட் டு தூபமிட சகல தோஷங்களும் நிவாரணம் ஆகும். சாம்பிராணியில் வெட்டிவேரை போ ட் டு தூபமிட காரியசித்தி உண்டாகும். சாம்பிராணியில் வேப்பிலையை போ ட் டு தூபமிட சகல நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும். சாம்பிராணியில் வெண்கடுகை போ ட் டு தூபமிட பகைமை விலகும். சாம்பிராணியில் வெண்குங்கிலிய பொடியை போ ட் டு தூபமிட துஷ்ட சக்திகள் விலகும். சாம்பிராணியில் ஜவ்வாதி போ ட் டு தூபமிட தி டீர் அதிர்ஷ்டம் உருவாகும்.

சாம்பிராணியில் வேப்பம்பட்டையை போ ட் டு தூபமிட ஏவல் பில்லி சூன்யம் ஆகியவை விலகும்.
சாம்பிராணியில் நாய் கடுகை போ ட் டு தூபமிட துரோகிகள் நம்மை விட்டு விலக ஆரம்பிப்பார்கள். சாம்பிராணியில் காய்ந்த துளசியை போ ட் டு தூபமிட்டால் காரியத்தடை மற்றும் திருமணத்தடை ஆகியவை விலகும். சாம்பிராணியில் கரிசலாங்கண்ணி பொடியை போ ட் டு தூபமிட மகான்களின் ஆசிகள் கிடைக்கும்.
சாம்பிராணியில் நன்னாரி வேரின் பொடியை போ ட் டு தூபமிட ஐஸ்வர்யம் கிடைக்கும். சாம்பிராணியில் மருதாணி இலை பொடியை போ ட் டு தூபமிட மகாலட்சுமி வாசம் நிலைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *