ஜென்ம ராசியில் அமர்ந்துள்ள குரு வக்ரமடைவதால் காத்திருக்கும் வி ப ரீதம் !! மிகவும் ஜா க் கிரதையாக இருக்க வேண்டிய ராசியினர் இவர்கள் தானாம் !!

ஆன்மீகம்

ஜென்ம ராசியில் அமர்ந்துள்ள குரு ……

கிரகங்கள் ஒரு சில நேரங்களில் அதிசாரமாகவும், வக்ரமாகவும் பயணிப்பதுண்டு. இப்போது கும்ப ராசியில் அதிசாரமாக பயணிக்கும் குரு பகவான் ஜூன் 20ஆம் தேதி வக்ர சஞ்சாரத்தை தொடங்குகிறார். செப்டம்பர் 14ஆம் ஆம் தேதியன்று மகர ராசிக்கு குரு வந்துவிடுகிறார். வக்ரம் பெற்ற சனியோடு இணைந்து மகர ராசியில் சஞ்சரிப்பார் குரு பகவான். ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் கிரகங்களின் பக்கத்தில் (வ) என குறிப்பிட்டிருக்கும். அந்த கிரகங்கள் வக்ரகதியில் சஞ்சரிக்கும் போது பிறந்திருப்பார்கள். வக்ர சஞ்சார காலங்களில் குரு பகவான் தான் சஞ்சரிக்கும் ராசியின் பலனைக் கொடுக்காமல், அதற்கு அடுத்த ராசியின் பலன்களையே கொடுக்கும். அக்டோபர் 18ஆம் தேதி குருவின் வக்ரகாலம் முடிவுக்கு வருகிறது. குரு பார்க்க கோடி தோஷம் நீங்கும் என்று சொல்வார்கள். குரு பகவான் வக்ர சஞ்சாரத்தினால் கும்பம் மற்றும் மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

கும்பம்
சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே, உங்கள் ஜென்ம ராசியில் அமர்ந்துள்ள குருபகவான் வக்ர நிலையில் சஞ்சரிக்கிறார். உங்களின் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உழைப்புக்கு ஏற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். திருமணம் சுப காரியம் நடைபெறும். குழந்தை பாக்கியம் கை கூடி வரும். உற்பத்தி சார்ந்த துறைகளில் உள்ளவர்களுக்கு வருமானம் வரும். பங்குச்சந்தை முதலீடுகள் இப்போதைக்கு வேண்டாம். சொந்த பிசினஸ் செய்பவர்களுக்கு லாபம் வரும் என்றாலும் பெரிய அளவில் முதலீடுகளைத் தவிர்த்து விடவும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் உண்டு. அப்பா வழி சொத்துக்கள் கிடைக்கும். வேலையில் முன்னேற்றம் புரமோசன் உண்டு. அவசியமில்லாமல் கடன் வாங்க வேண்டாம். ஆன்மீக விசயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் ஏற்படும்.

மீனம்
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே, குரு பகவான் உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டில் விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். 12ஆம் இடம் விரையம், நஷ்டம், முதலீடுகள் ஸ்தானம். பிள்ளைகள் பெயரில் சொத்து வாங்கலாம். பெரிய அளவில் முதலீடுகள் செய்வதன் மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளையும் விரைய செலவுகளையும் தவிர்க்கலாம். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு நான்கு, ஆறு, எட்டாம் வீடுகளின் மீது விழுகிறது. வண்டி வாகன சேர்க்கை ஏற்படும். வீடு கட்டவும், கட்டிய வீட்டினை வாங்கவும் முயற்சி செய்யலாம். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் முதலீடு செய்யலாம்.

சிறு தொழில் லாபத்தை கொடுக்கும். ரியல் எஸ்டேட் துறையில் லாபம் கிடைக்கும். காதல் குதூகலத்தைக் கொடுக்கும் திருமணம் கை கூடி வரும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குரு 12ஆம் வீட்டில் இருப்பதால் வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி தேடி வரும். வெளிநாட்டு பயணங்கள் ஏற்படும். மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க முயற்சி செய்யலாம். சிலருக்கு புதிய வேலை கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. தேவையற்ற கடனை தவிர்த்து விடவும். ஜாமீன் கையெழுத்து போட்டு கடன் வாங்கித் தர வேண்டாம் சிக்கலாகிவிடும். குரு பகவானை வியாழக்கிழமைகளில் வணங்க நன்மைகள் நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *