அரையாண்டுக்கு பின் ஏற்படவுள்ள மாற்றங்கள் !! பிறக்கும் அரையாண்டில் எந்த தெய்வத்தை வழிபட்டால் சந்தோசம் பெருகும் தெரியுமா !!

ஆன்மீகம்

அரையாண்டுக்கு பின் மாற்றங்கள் …………

உங்களது வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட வேண்டுமெனின் இந்த கால கட்டத்தை இரண்டாக பிரித்து அதன் படி நடந்து கொண்டீர்களானால் உங்கள் வாழக்கையில் பல முன்னேற்றத்தினை காணலாம். அதற்கு நீங்கள் செய்ற வேண்டிய காரியங்கள் மற்றும் எந்த தெய்வத்தை வழிபட்டால் 2021 ம் ஆண்டில் உங்கள் குடும்பத்தில் சந்தோசம் மற்றும் மகிழ்ச்சி பெருகும் என்பதனை பார்க்கலாம் வாங்க.

புதிய ஆண்டினை இரு பகுதிகளாக பிரித்தோமானால் அதன் முதல் பகுதியாக 01.01.2021 முதல் 30. 06. 2021 வரை உள்ள காலகட்டம். அதன் இரண்டாம் பகுதியாக 01.07. 2021 முதல் 31. 12. 2021 வரை உள்ள காலகட்டமாகும் இந்த காலங்களில் விவசாயிகள் விவசாய உபகரணங்களை வாங்கி பயிர் விளைச்சலை பன்மடங்கு பெருக்குவீர்கள். கால்நடை தீவனங்களுக்கான செலவுகள் அதிகரிக்கும். குறுகியகாலப் பயிர்களால் விளைச்சல் பெருகி லாபம் கூடும். பழைய கடன்களை அடைப்பீர்கள்.நண்பர்களுடன் சேர்ந்து புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள்.

உடல் சோர்வைப் பொருட்படுத்தாது கடினமாக உழைப்பீர்கள். அரசாங்கத்திலிருந்து எதிர்பாராத உதவிகளைப் பெறுவீர்கள். பெண்மணிகள் குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். சிலருக்கு புது வீட்டுக்கு மாறும் வாய்ப்புகள் உண்டாகும். பெற்றோர்களின் சொத்தில் பெரிய பங்கு உங்கள் கைக்கு வந்து சேரும்.வியாபாரிகள் தீட்டிய திட்டங்கள் செயல்வடிவம் பெற சற்று காலதாமதம் ஏற்படும். அகலக்கால் வைக்காதீர்கள். சிலருக்கு வழக்கு வியாஜ்ஜியங்களுக்காக செலவு செய்ய நேரிடும்.

செய்தொழிலை புதிய இடங்களுக்கு விரிவுபடுத்துவீர்கள். உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும். அனைத்து செயல்களையும் அழகாகவும் நேர்த்தியாகவும் செய்து முடிப்பீர்கள். வெளியூர் வெளிநாட்டில் இருந்து மனதிற்கினிய செய்திகள் வந்து சேரும். புதிய வருமானத்தால் பழைய கடன்களை அடைத்து விடுவீர்கள். உங்கள் செயல்களில் விறுவிறுப்பு கூடும். கலைத் துறையினருக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். மனதிற்கினிய பயணங்களை மேற்கொள்வீர்கள். ஆன்மிகத்திலும், தெய்வ வழிபாட்டிலும் ஈடுபடுவீர்கள். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை எப்பாடுபட்டாவது காப்பாற்றிக் கொள்ளும் காலகட்டமிது என்றால் மிகையாகாது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வைப் பெறுவீர்கள். சக ஊழியர்களை உங்களின் அமைதியான அன்பான அணுகுமுறையால் கவர்வீர்கள். சிலருக்கு குறுகிய காலப் பயணமாக வெளிநாடுகளுக்குச் சென்று வரும் யோகம் உண்டாகும். பணப் புழக்கம் நன்றாக இருக்கும். மாணவர்கள் இந்த புத்தாண்டில் கடினமாக உழைத்து கணிசமான மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பயத்தைத் தவிர்க்க யோகா, பிராணாயாமம், உடற்பயிற்சிகளைச் செய்யவும். புத்தாண்டில் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

அரசியல்வாதிகளுக்கு சமுதாயத்தில் செல்வாக்கு, சொல்வாக்கு இரண்டும் அதிகரிக்கும். கட்சியில் அந்தஸ்தான பொறுப்புகளைப் பெறுவீர்கள். மேலிடத்தின் ஆதரவு கிடைக்கும்.பொருளாதார வளம் உயர்வதற்கான வழிகளைப் பின்பற்றுவீர்கள். தீர்க்க முடியாத பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பீர்கள். அசையாச் சொத்துகளை வாங்குவீர்கள். சமூகத்தில் அந்தஸ்தான பதவிகள் தேடி வரும்.

பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *